7th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: 6% அகவிலைப்படி உயர்வு ஜூலையில் சாத்தியம்
7th Pay Commission: ஊடக அறிக்கையின்படி, அரசாங்கம் ஜூலை 1 முதல் அகவிலைப்படியை 6 சதவீதம் அதிகரிக்கக்கூடும். இது பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகளைத் தெரிந்து கொள்வோம்.
7வது ஊதியக்குழு புதுப்பிப்பு: நீண்ட நாட்களாக காத்திருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளது. ஊடக அறிக்கையின்படி, அரசாங்கம் ஜூலை 1 முதல் அகவிலைப்படியை 6 சதவீதம் அதிகரிக்கக்கூடும். இது பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகளைத் தெரிந்து கொள்வோம்.
அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
அகவிலைப்படியின் அதிகரிப்பு ஏஐசிபிஐ-இன் தரவைப் பொறுத்தது. 2022 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏஐசிபிஐ குறியீடு உயர்ந்தது. இதன் காரணமாக அகவிலைப்படியில் 5% அதிகரிப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதாவது, அப்போது ஊழியர்களின் டிஏ 34 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயரும். எனினும், இப்போது புதிய புள்ளிவிவரங்களின்படி, ஊழியர்களின் டிஏ 6% அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
ஏஐசிபிஐ இன்டெக்ஸ் கூறுவது என்ன
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ஏஐசிபிஐ குறியீட்டில் சரிவு இருந்தது. எனினும் அதன் பிறகு ஏஐசிபிஐ-இன் புள்ளிவிவரங்கள் அதிகரித்து வருகின்றன. ஜனவரியில் 125.1 ஆகவும், பிப்ரவரியில் 125 ஆகவும், மார்ச் மாதத்தில் 126 ஆகவும் இது இருந்தது. இப்போது ஏப்ரல் மாதத்தின் புள்ளிவிவரங்களும் வெளிவந்துள்ளன.
ஏப்ரல் மாதத்திற்கான தரவுகளின்படி, ஏஐசிபிஐ குறியீடு 127.7 ஆக உள்ளது. இதில் 1.35 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மே மாதத்திற்கான எண்ணிக்கை வரவுள்ளது. மே மாதத்திலும் இந்த எண்ணிக்கை அதிகரித்தால், டிஏ-வில் 6% அதிகரிப்பு இருக்கலாம்.
சம்பளம் எவ்வளவு உயரும்?
அரசு 6% அகவிலைப்படியை உயர்த்தினால், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 34% லிருந்து 40% ஆக உயரும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் எவ்வளவு உயர்வு இருக்கும் என்று பார்ப்போம்.
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (40%) - ரூ.22,760/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.19,346/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 22,760-19,346 = ரூ 3,414/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 3,414 X12 = ரூ 40,968
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (40%) - ரூ.7,200/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
4. அகவிலைப்படியில் அதிகரிப்பு - 7200-6120 = ரூ.1080/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 1080 X12 = ரூ 12,960
மேலும் படிக்க | 7th Pay Commission: LTC விதிகளில் முக்கிய மாற்றம், புதிய விதிகள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR