7th Pay Commission: அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும்? அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? இது எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

7th Pay Commission DA Hike: தற்போது நாட்டின் 1 கோடி மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) தரவுகளின்படி, இந்த முறை, அதாவது ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு 3 முதல் 4 சதவீதம் வரை இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி
டிஏ உயர்வுக்கு பிறகு அகவிலைப்படி 55% -இலிருந்து 58% அல்லது 59% ஆக அதிகரிக்கலாம். இருப்பினும், ஜூன் மாத புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. இது ஜூலை 30-31 அன்று வெளியிடப்படும். இதன் பிறகு ஜூலை 2025 முதல் அகவிலைப்படி எவ்வளவு சதவீதம் அதிகரிக்கும் என்பது தெளிவாகத் தெரியும்.
Dearness Allowance Increase: ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு
- பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி/அகலவிலை நிவாரண விகிதங்களை மத்திய அரசு ஆண்டுதோறும் இரண்டு முறை திருத்துகிறது.
- இது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அரையாண்டு தரவுகளைப் பொறுத்து செய்யப்படுகிறது.
- இந்த புள்ளிவிவரங்கள் ஜனவரி முதல் ஜூன் வரையிலும் ஜூலை முதல் டிசம்பர் வரையிலும் வெளியிடப்படுகின்றன.
- 7வது சம்பளக் குழுவின் கீழ் வரும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஜனவரி 2025 முதல் 2% அதிகரிக்கப்பட்டது.
- இது மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.
- அதன் பிறகு அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக அதிகரித்துள்ளது.
- இப்போது ஜூலை 2025 முதல், அகவிலைப்படி விகிதங்கள் மீண்டும் மாற உள்ளன.
- இது ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டு தரவுகளைப் பொறுத்தது.
- இது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அறிவிக்கப்படலாம்.
DA Hike: 3% அல்லது 4% டிஏ உயர்வு?
AICPI குறியீட்டு தரவுகள்,
- ஜனவரி 2025 இல் 143.2 ஆகவும்,
- பிப்ரவரியில் 142.8 ஆகவும்,
- மார்ச்சில் 143.0 ஆகவும்,
- ஏப்ரலில் 143.5 ஆகவும்,
- மே மாதத்தில் 0.5 புள்ளிகள் அதிகரிப்புடன் 144.0 ஆகவும் உள்ளன.
அகவிலைப்படி மதிப்பெண் 57.85% ஆக உயர்ந்துள்ளது. இது 3% ஐக் குறிக்கிறது.
ஜூன் மாத புள்ளிவிவரங்கள்
- ஜூன் மாத புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை.
- இது ஜூலை 30-31, 2025 அன்று வெளியிடப்படும்.
- இது ஜூலை 2025 முதல் எவ்வளவு அகவிலைப்படி அதிகரிக்கும் என்பதை தெளிவுபடுத்தும் முக்கிய தரவாக இருக்கும்.
- ஜூன் 2025 இல் 0.5 புள்ளிகள் அதிகரிப்பு இருந்தால், அகவிலைப்படியில் 4% வரை அதிகரிப்பு இருக்கலாம்.
- இல்லையெனில் 3% டிஏ உயர்வு இருக்கும்.
தீபாவளி (அக்டோபர்-நவம்பர்) பண்டிகையின் போது இது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் ஜூலை இறுதிக்குள், ஜனவரி முதல் ஜூன் வரையிலான AICPI IW குறியீட்டு தரவு வரும். இதன் பிறகு, தொழிலாளர் பணியகம் அதன் கோப்பை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பும். அங்கிருந்து இந்த திட்டம் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்படும். இங்கிருந்து பச்சை சமிக்ஞை கிடைத்தவுடன், நிதி அமைச்சகத்தால் உத்தரவுகள் வெளியிடப்படும்.
DA Arrears
ஜூலை 2025 அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு எப்போது வந்தாலும், புதிய விகிதங்கள் ஜூலை 2025 முதல் பொருந்தும். ஆகையால் ஜூலை முதல் ஊகழியர்களுக்கு டிஏ அரியர் தொகை கிடைக்கும்.
DA Calculation Formula
அகவிலைப்படி கணக்கீட்டு சூத்திரம் என்ன? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியைக் கணக்கிட ஒரு சூத்திரம் உள்ளது.
சூத்திரம்:DA (%) = [(கடந்த 12 மாதங்களின் CPI-IW சராசரி) – 261.42] ÷ 261.42 × 100
இந்த சூத்திரம் 7வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குப் பொருந்தும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ