7வது ஊதியக்குழு: மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜூலையில் பெரிய ஊதிய உயர்வு

7th CPC Latest News:  ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 பரிசுகள் காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 23, 2025, 10:25 AM IST
  • மத்திய அரசு ஊழியரா நீங்கள்?
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
  • ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
7வது ஊதியக்குழு: மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜூலையில் பெரிய ஊதிய உயர்வு

7th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளார்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஜூலை மாதம் முதல் உங்களுக்கு 2 பரிசுகள் காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசியை சமாளிக்கவும், பணவீக்கத்தை ஈடுகட்டவும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றை அரசு அதிகரிக்கின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் இந்த திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன. 

Dearness Allowance: ஜனவரி மாதத்தில் அதிகரித்த அகவிலைப்படி

ஜனவரி 2025 -இல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் 2% அதிகரித்தன. இதைத் தொடர்ந்து மொத்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் தற்போது 55% ஆக ஊயர்ந்துள்ளன.

DA Hike: டிஏ உயர்வு

ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு ஆகஸ்ட், செப்டம்பர் அல்லது அதிகபட்சமாக அக்டோபர் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என எதிர்பாக்கட்டுகின்றது. இந்த ஆண்டிற்கான அகவிலைப்படி உயர்வு ஜூலை 2025 முதல் அமலுக்கு வரும்.

AICPI INDEX: AICPI குறியீட்டு எண்கள்

இதுவரையிலான AICPI குறியீட்டு புள்ளிவிவரங்களைப் பார்த்தால், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான அகவிலைப்படி 2 முதல் 3 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாத புள்ளிவிவரங்கள் ஜூன் 30 அன்று வெளியிடப்படும், ஜூன் மாத புள்ளிவிவரங்கள் ஜூலை 31 அன்று வெளியிடப்படும். இவற்றின் அடிப்படையில் ஜூலை 2025 முதல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெளிவாகும்.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?

ஜனவரி 2025 இல் AICPI குறியீடு 143.2 ஆகவும், பிப்ரவரியில் AICPI-IW 142.8 ஆகவும் இருந்தன. மார்ச்சில் 143.0 ஆக இருந்த புள்ளிகள் ஏப்ரல் மாதத்தில் 0.5 புள்ளிகள் அதிகரித்த 143.5 ஆக உயர்ந்தன. இதனுடன் அகவிலைப்படி மதிப்பெண் 57.95% ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஜூலை 2025 முதல் அகவிலைப்படி 2-3% அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. 

மே மற்றும் ஜூன் மாத புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. அவை ஜூன் 30 மற்றும் ஜூலை 31, 2025 க்குள் வெளியிடப்படும். இதற்குப் பிறகுதான் ஜூலை 2025 முதல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெளிவாகத் தெரியும்.

மே, ஜூன் மாத புள்ளிவிவரங்களில் நல்ல அதிகரிப்பு இருந்தால், ஜூலை மாதத்தில் 3% டிஏ உயர்வு இருக்கும. அதாவது மொத்த அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக உயரும். புள்ளிகளில் சரிவு ஏற்பட்டால், ஜனவரி மாதத்தைப் போலவே, டிஏ 2% வரைதான் உயரும். அந்த சூழலில், அகவிலைப்படி 55% இலிருந்து 57% ஆக அதிகரிக்கலாம். இருப்பினும், ஜூலை மாதத்தில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Salary Hike: ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?

அகவிலைப்படி 2% அதிகரித்தால், 18,000 அடிப்படை சம்பளம் பெறுபவர்களுக்கு ரூ.10,260 ஊயர்வு இருக்கும். அகவிலைப்படி 3% அதிகரித்தால், ரூ.10,440 உயர்வு இருக்கும். 

Dearness Allowance Calculation: அகவிலைப்படி கணக்கீடு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை கணக்கிட ஒரு சூத்திரம் உள்ளது. 

7th CPC DA% = [{12-month average of AICPI-IW (base year 2001=100) for the last 12 months – 261.42}/261.42×100]

அகவிலைப்படி % = [{கடந்த 12 மாதங்களுக்கான AICPI-IW (அடிப்படை ஆண்டு 2001=100) – 261.42}/261.42×100]

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த சூத்திரம் பொருந்தும். 

DA Arrears: டிஏ அரியர்

புதிய அகவிலைப்படி விகிதங்கள் ஜூலை 2025 முதல் அமலுக்கு வரும். அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும், ஜூலை 2025 முதல் டிஏ அரியர் தொகை கிடைக்கும். 

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு - இந்த தேதியை நோட் பண்ணிக்கோங்க

மேலும் படிக்க | சாலை விபத்தில் சிக்கினால் ரூ.15 லட்சம் பெறலாம் - அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News