7th Pay Commission DA Hike: மே 2025 க்கான தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI-IW) 0.5 புள்ளிகள் உயர்ந்து 144 ஆக உள்ளது. மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களில் குறியீடு தொடர்ந்து உயர்ந்துள்ளது - மார்ச் மாதத்தில் 143, ஏப்ரலில் 143.5, இப்போது மே மாதத்தில் 144. இந்தப் போக்கைப் பார்க்கும்போது, ஜூலை 2025 முதல் அகவிலைப்படியில் (DA) 3% முதல் 4% வரை அதிகரிப்பு சாத்தியம் என தெரிகிறது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி
தற்போது, மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரரளுக்கான அகவிலை நிவாரணம் 55% ஆக உள்ளது. இறுதி அகவிலைப்படி உயர்வு முடிவு ஜூன் 2025 க்கான AICPI-IW தரவைப் பொறுத்தது. இது இந்த ஆண்டு ஆகஸ்ட் தொடக்கத்தில் வெளியிடப்படும்.
Dearness Allowance Increase: அகவிலைப்படி உயர்வு
AICPI-IW குறியீடு ஜூன் 2025 இல் 0.5 புள்ளிகள் உயர்ந்து 144.5 ஐ எட்டினால், 12 மாத சராசரி AICPI சுமார் 144.17 ஆக அதிகரிக்கும். 7வது சம்பள கமிஷன் சூத்திரத்தின்படி இந்த சராசரியை சரிசெய்த பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கான எதிர்பார்க்கப்படும் DA தோராயமாக 58.85% ஆக இருக்கும். இந்த எண்ணை ரவுண்ட் ஆஃப் செய்தால், தற்போதைய 55% இலிருந்து DA 59% ஐ எட்டும். இதன் விளைவாக ஜூலை 2025 முதல் 4% அதிகரிப்பு அமலுக்கு வரும். ஜூன் குறியீட்டில் இந்த 0.5-புள்ளி உயர்வு, முன்னர் கணிக்கப்பட்டதை விட சற்று அதிக டிஏ உயர்வுக்கு வழிவகுக்கும்.
DA Calculation: அகவிலைப்படி இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது
கடந்த 12 மாதங்களின் சராசரி AICPI-IW தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. இது 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. ஜனவரி முதல் மே வரையிலான புள்ளிவிவரங்கள் தற்போது கிடைத்துள்ளன. இவை 3% அதிகரிப்புக்கு அடிப்படையாக அமைகின்றன. இப்போது ஜூன் மாத புள்ளிவிவரம் இறுதி DA உயர்வை தீர்மானிக்கும்.
Dearness Allowance Calculation: அகவிலைப்படி கணக்கீடு
DA (%) = [(கடந்த 12 மாதங்களின் CPI-IW சராசரி) – 261.42] ÷ 261.42 × 100
இங்கே 261.42 என்பது குறியீட்டின் அடிப்படை மதிப்பு. இந்த சூத்திரம் CPI-IW இன் மாதாந்திர சராசரியை அடிப்படையாகக் கொண்டு அகவிலைப்படியைத் தீர்மானிக்கிறது.
DA Hike: டிஏ உயர்வு எப்போது அறிவிக்கப்படும்?
புதிய டிஏ ஜூலை 2025 முதல் அமலுக்கு வரும் என்றாலும், அரசாங்கம் வழக்கமாக செப்டம்பர்-அக்டோபரில், பண்டிகைக் காலத்தை ஒட்டி அதை அறிவிக்கும். இந்த முறையும், அதுவே நடக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த அறிவிப்பு தீபாவளியை ஒட்டி வெளியிடப்படலாம்.
இறுதி கட்டத்தில் 7வது ஊதியக் குழு, இழுபறியில் 8வது ஊதியக் குழு
ஜூலை-டிசம்பர் 2025 -க்கான இந்த டிஏ உயர்வு 7வது ஊதியக் குழுவின் கீழ் திட்டமிடப்பட்ட கடைசி அதிகரிப்பாகும். ஏனெனில் 7வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது.
8வது ஊதியக் குழு ஜனவரி 2025 இல் அறிவிக்கப்பட்டாலும், தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களின் பெயர்களை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை. குறிப்பு விதிமுறைகளும் (ToR) இன்னும் வரவில்லை. ஏப்ரல் மாதத்திற்குள் ToR தயாராகிவிடும் என்றும், ஆணையம் பணியைத் தொடங்கும் என்றும் அரசாங்கத்திடமிருந்து அறிகுறிகள் இருந்தன. ஆனால் இதுவரை உறுதியான புதுப்பிப்பு எதுவும் இல்லை.
8th Pay Commission: 8வது ஊதியக் குழு 2 ஆண்டுகள் தாமதமாகலாம்
முந்தைய ஊதியக் குழுக்களின் வரலாற்றைப் பார்த்தால், ஆணையத்தின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட 18 முதல் 24 மாதங்கள் ஆகும். அத்தகைய சூழ்நிலையில், 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2027 ஆம் ஆண்டுக்குள்தான் செயல்படுத்தப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதன் பொருள் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் தற்போதைய அடிப்படை ஊதியத்தில் இன்னும் பல டிஏ உயர்வுகளைப் பெறுவார்கள்.
ஆறுதலான விஷயம்: அரியர் தொகை கிடைக்கும்
8வது ஊதியக் குழுவின் உருவாக்கத்தில் தாமதம் ஏற்பட்டாலும், 8வது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பலன்களை அரசாங்கம் நிலுவைத் தொகையாக வழங்கும். அவை ஜனவரி 1, 2026 முதல் பொருந்தும். அதாவது, ஊழியர்களுக்குப் பலன் கிடைப்பது மட்டுமல்லாமல், நிலுவைத் தொகையும் மொத்தமாக வழங்கப்படும்.
மேலும் படிக்க | PM Kisan 20வது தவணையை பெற விவசாயி ஐடி அவசியம்: பெறுவதற்கான எளிய வழி இதோ
மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு வைத்திருக்கும் முக்கிய வேண்டுகோள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









