7th Pay Commission: லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள். ஜனவரி-ஜூன் 2025க்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை இன்று மத்திய அரசு வெளியிடக்கூடும். அகவிலைப்படி அதிகரிப்பு (DA) தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Dearness Allowance: அகவிலைப்படி அதிகரிப்பு
ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி அதிகரிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (Dearness Relief) வழங்கப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை சமாளிக்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
DA Hike: டிஏ உயர்வு எப்போது அறிவிக்கப்படும்?
ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு ஹோலி பண்டிகைக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அரசு அப்போது அறிவிப்பை வெளியிடவில்லை. இப்போது மார்ச் 19, அதாவது இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அதிகரிப்பு எவ்வளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
ஜூலை-டிசம்பர் 2024 -க்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் அகவிலைப்படி 2 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜூலை 2018 க்குப் பிறகு மிகக் குறைந்த அளவிலான அதிகரிப்பாகும். இந்த முறை அகவிலைப்படி 3% அதிகரிக்கும் என்று வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2% அதிகரிப்பு இருக்கும் என்ற செய்தி ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், அறிவிப்பு வந்தவுடன்தான் இது தொடர்பான தெளிவு கிடைக்கும்.
Salary Hike: ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 என்று வைத்துக்கொள்வோம். அகவிலைப்படி 2 சதவீதம் அதிகரிக்கபட்டால், அவரது மாத சம்பளம் ரூ.360 அதிகரிக்கும். 3% உயர்வு இருந்தால் ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில் ரூ.540 அதிகரிக்கும். தற்போதைய அகவிலைப்படி 53% ஆக உள்ளது. ஜூலை 2024 -இல் 3% டிஏ உயர்வு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பு அக்டோபர் 2024 இல் வந்தது. இப்போது, ஜனவரி 2025 -இல் அகவிலைப்படி 2 சதவீதம் அதிகரித்தால், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றிம் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) 55 சதவீதமாக மாறக்கூடும்.
அகவிலைப்படி 3-4 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதா?
நடப்பு நிதியாண்டில் பணவீக்க விகிதம் (CPI) 4.8 சதவீதமாக இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) மதிப்பிட்டுள்ளது. RBI -இன் இந்த மதிப்பீடு காரணமாக, அரசாங்கம் 3-4 சதவீதம் என்னும் பெரிய அகவிலைப்படி அதிகரிப்பை செய்ய வாய்ப்புள்ளதாகவும் சில நிபுணர்கள் நம்புகின்றனர். அகவிலைப்படி உயர்வு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிதி நிலையை வலுப்படுத்தவும் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவியாக இருக்கின்றது.
DA Arrears: டிஏ அரியர்
டிஏ உயர்வு ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும். ஆகையால் ஜனவரி முதலான காலகட்டத்திற்கான நிலுவைத் தொகையும் ஊழியர்களுக்குக் கிடைக்கும். ஜனவரி 2025 இல் 8வது சம்பளக் குழு அறிவிக்கப்பட்ட பிறகு இது முதல் அகவிலைப்படி உயர்வு ஆகும். 7வது சம்பளக் குழுவின் செல்லுபடி காலம் டிசம்பர் 2025 இல் முடிவடையும். புதிய சம்பளக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 2026 முதல் செயல்படுத்தப்படும்.
8th Pay Commission: 8வது ஊதியக் குழு
இருப்பினும், 8வது ஊதியக்குழுவுக்கான அறிவிப்பிலேயே தாமதம் ஏற்பட்டதால், புதிய ஊதியக் குழு தனது அறிக்கையை ஜனவரி 1, 2026 க்கு முன்னர் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் என்றும், 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அடுத்த நிதியாண்டு முதல், அதாவது ஏப்ரல் 1, 2026 முதல் அரசு செயல்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகும், ஊதியம், ஓய்வூதியம் அதிரடியாய் உயரும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









