மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அதிகரிக்கும் அகவிலைப்படி: இந்த நாளில் டிஏ உயர்வு அறிவிப்பு

7th Pay Commission: இந்த வாரம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிக நல்ல செய்தி ஒன்று கிடைக்கவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 10, 2025, 03:59 PM IST
  • அகவிலைப்படி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
  • அகவிலைப்படி 2% அதிகரித்தால் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?
  • 8வது ஊதியக் குழு எப்போது வரும்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அதிகரிக்கும் அகவிலைப்படி: இந்த நாளில் டிஏ உயர்வு அறிவிப்பு

7th Pay Commission: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? உங்கள் வீட்டில் மத்திய அரசு ஊழியர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இந்த வாரம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிக நல்ல செய்தி ஒன்று கிடைக்கவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Add Zee News as a Preferred Source

Dearness Allowance: அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு எப்போது வரும்?

மத்திய அரசு மார்ச் 12 புதன்கிழமை அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரண (Dearness Relief) அதிகரிப்பை அறிவிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் இந்த முடிவு 1.2 கோடிக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும். புதன்கிழமை நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் டிஏ உயர்வுக்கான அறிவிப்பை அரசு வெளியிடக்கூடும். 

DA Hike: டிஏ உயர்வு எப்போது?

ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவற்றை மத்திய அரசு திருத்துகிறது. ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகள் முதல் இந்த திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன. அரசாங்கம் அறிவிப்பை எப்போது வெளியிட்டாலும், இந்த தேதிகள் முதல் இவை கணக்கிடப்படுகின்றன.

Central Government Employees: காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்

டிஏ உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஹோலிக்கு முன் அரசு அகவிலைப்படியை 2 சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் என ஊடக அறிக்கைகளை தெரிவிக்கின்றன. பணவீக்க விகிதத்தின்படி, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படி 2% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் அகவிலைப்படி தற்போது இருக்கும் 53% =இலிருந்து 55% ஆக அதிகரிக்கும். இருப்பினும், இது குறித்த இறுதி முடிவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும். 

முன்னதாக அக்டோபர் 2024 இல், மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது, இது ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. அந்த உயர்விற்குப் பிறகு, அகவிலைப்படி 50% இலிருந்து 53% ஆக அதிகரித்தது.

Salary Hike: அகவிலைப்படி 2% அதிகரித்தால் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?

அகவிலைப்படி (DA) 2% அதிகரித்தால், 

- ரூ.18,000 அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ.360 அதிகரிக்கும். 

- தற்போது, ​​அவர்கள் 53% அகவிலைப்படியின்படி ரூ.9,540 பெற்று வருகிறார்கள்.

- அகவிலைப்படி 2% அதிகரித்தால், அகவிலைப்படி தொகை ரூ.9,900 ஆக உயரும்.

அகவிலைப்படி 3% அதிகரித்தால், 

- மாத சம்பளம் ரூ.540 அதிகரித்து அகவிலைப்படி தொகை ரூ.10,080 ஆக உயரும். 

- இது ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை அளிக்கும்.

அகவிலைப்படி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவை நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) கடந்த 12 மாதங்களின் சராசரியில் கணக்கிடப்படுகின்றன. மத்திய அரசு ஆண்டுதோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் அகவிலைப்படியை திருத்தி அமைக்கிறது. ஆனால் இது வழக்கமாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அறிவிக்கப்படும். 2006 ஆம் ஆண்டில், அகவிலைப்படியை சரியாக மதிப்பிடுவதற்காக அரசாங்கம் ஒரு புதிய சூத்திரத்தை பின்பற்றத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

DA Arrears: டிஏ அரியர்

அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு எப்போது வந்தாலும், அது ஜனவரி 1 ஆம் தேதி மற்றும் ஜூலை 1 ஆம் முதல் அளிக்கப்படுகின்றது. உதாரணமாக இப்போது இந்த வாரம் அறிவிப்பு வந்தாலும், ஜனவரி 2025 முதலான அகவிலைப்படி அரியர் தொகை வழங்கப்படும்.

8th Pay Commission: 8வது ஊதியக் குழு எப்போது வரும்?

ஜனவரி 2025 இல், மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இது அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் திருத்தங்களை செய்யும். 7வது ஊதியக் குழுவின் காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது. 8வது ஊதியக் குழு 2026 முதல் செயல்படுத்தப்படும். இருப்பினும், அரசாங்கம் இன்னும் குழுவை அமைக்கவில்லை.

மேலும் படிக்க | NPS vs UPS: அரசு ஊழியர்களுக்கு எது பெஸ்ட்? அனைத்து அம்சங்களிலும் முழுமையான ஒப்பீடு இதோ

மேலும் படிக்க | மத்திய அரசின் அசத்தல் திட்டம்! எந்த ஆவணமும் இல்லாமல் ரூ. 10 லட்சம் வரை கடன் பெறலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News