வந்தாச்சு அகவிலைப்படி உயர்வு: ஊதியம், ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? முழுமையான கணக்கீடு இதோ

7th Pay Commission DA Hike: 2% டிஏ உயர்வுக்கு பிறகு ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 29, 2025, 10:15 AM IST
  • ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கீடு என்ன?
வந்தாச்சு அகவிலைப்படி உயர்வு: ஊதியம், ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? முழுமையான கணக்கீடு இதோ

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நற்செய்தியாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை, அகவிலைப்படியை (DA) 2% உயர்த்தியது. இந்த உயர்வு ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் அதிகரிப்பு ஏற்படும். 

Add Zee News as a Preferred Source

Dearness Allowance: அகவிலைப்படி அதிகரிப்பு

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 2% அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மொத்த டிஏ மற்றும் டிஆர் 55% ஆக உயர்ந்துள்ளன. அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் இரண்டிலும் ஏற்பட்ட அதிகரிப்பால் கருவூலத்தில் ஏற்பட்ட மொத்த தாக்கம் ஆண்டுக்கு ரூ. 6614.04 கோடியாக இருக்கும் என்று நிதி அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. இது சுமார் 48.66 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 66.55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும். மேலும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்தின்படி இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

7வது ஊதியக்குழு கீழ், 2.57 மடங்கு ஃபிட்மென்ட் ஃபாக்டரால், அடிப்படை குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ.7,000-ல் இருந்து ரூ.18,000 ஆக அதிகரித்தது. குறைந்தபட்ச ஓய்வூதியம் 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழ், ரூ.3,500-ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்ந்தது.

அகவிலைப்படி என்றால் என்ன? 

பணவீக்கத்தை சமாளிக்க மத்திய அரசி ஊழியர்களுக்கு அகவிலைப்படியும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் அளிக்கபப்டுகின்றது. இது ஆண்டுக்கு 2 முறை இந்திய அரசாங்கத்தால் திருத்தப்படுகின்றது. டிஏ உயர்வு அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை அதிகரிக்கும். டிஏ சலுகைகள் அனைத்து அரசு அதிகாரிகள், மத்திய நிறுவன ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்களைத் தவிர மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

Dearness Allowance Calculation: அகவிலைப்படி கணக்கீடு

ஊழியர்கள் மீது ஏற்படும் பணவீக்கத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்த, இந்திய குடிமகனின் குறைந்தபட்ச சம்பளத்தின் சதவீதமாக அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. அரசு நிறுவனங்களின் கீழ் உள்ள இந்திய குடிமக்கள், அடிப்படை சம்பளம் அல்லது ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள். இதனுடன் வீட்டுவசதி, அகவிலைப்படி இணைந்து கூடுதல் தொகை கிடைக்கிறது. 2006 இல் அரசாங்கம் டிஏ சூத்திரத்தை மாற்றியது.

DA Calculation for Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு

DA% = [(கடந்த 12 மாதங்களுக்கான AICPI சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100)  - 115.76)/115.76] x 100

DA Calculation For Public Sector Employees: பொதுத்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு

DA% = [(கடந்த 3 மாதங்களுக்கான AICPI சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100) - 126.33)/126.33] x 100

Pension Hike: ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?

சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்கான கணக்கீடு:

குறைந்தபட்ச ஓய்வூதியம்: மாதத்திற்கு ரூ. 9,000.

53% இல் அகவிலைப்படி: ரூ.4,770 (ரூ.9000 X 53%)
55% இல் அகவிலைப்படி: ரூ.4,950 (ரூ.9,000 X 55%).

அகவிலைப்படியில் சுமார் ரூ.180 உயர்வு இருக்கும். இது மொத்த ஓய்வூதியத்தை அதிகரிக்கும்.

குறைந்தபட்ச ஓய்வூதியம்: மாதத்திற்கு ரூ.18,000

53% இல் அகவிலைப்படி: ரூ.9,540
55% இல் அகவிலைப்படி: ரூ.9,900

மாதத்திற்கு ரூ.18,000 அடிப்படை ஓய்வூதியத்தில் அகவிலைப்படி ரூ.360 உயர்கிறது. இது மொத்த ஓய்வூதியத்தை அதிகரிக்கும்.

Salary Hike For Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு

- அகவிலைப்படி 2% அதிகரித்துள்ளதால், குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.360 சம்பள உயர்வு கிடைக்கும். 
- ஆண்டுக்கு இது ரூ.4,344 ஆக இருக்கும்.

DA Hike: டிஏ உயர்வு

சமீபத்திய டிஏ உயர்வு ஏழு ஆண்டுகளில் மிகக் குறைவு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 7வது சம்பளக் குழு அமலுக்கு வந்ததிலிருந்து, அரசாங்கம் அகவிலைப்படியை 3% அல்லது 4% உயர்த்தியுள்ளது. COVID-19 தொற்றுநோய் காலத்தில் மட்டுமே விதிவிலக்கு இருந்தது. ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை 18 மாதங்களுக்கு அகவிலைப்படியில் ஏற்படும் மாற்றங்களை அரசாங்கம் நிறுத்தியது.

ஆனால் அதன் பிறகு, மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படியை உயர்த்தும் பாரம்பரியத்தைத் தொடர்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஜூன் வரை அரையாண்டு காலத்திற்கு மார்ச் மாதத்தில் ஒரு முறை அகவிலைப்படி திருத்தம் அறிவிக்கப்படுகின்றது. அதே போல, ஜூலை முதல் டிசம்பர் வரையிலான இரண்டாம் அரையாண்டுக்கு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் திருத்தம் அறிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் அகவிலைப்படி உயர்வு கடந்த ஆண்டு அக்டோபரில் 3% ஆக அறிவிக்கப்பட்டது. வருமான வரி வழிகாட்டுதல்களின்படி, அகவிலைப்படிக்கு முழுமையாக வரி விதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | கௌதம் அதானிக்கு மேலும் சிக்கலா? இந்திய அரசின் உதவியை நாடிய அமெரிக்கா!

மேலும் படிக்க | மக்கள் அனைவருக்கும் இனி பென்ஷன் கிடைக்கும்: மத்திய அரசின் மெகா பரிசு.... புதிய ஓய்வூதியத் திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News