7வது ஊதியக்குழு: ஜூலையில் 2 பரிசுகள்..... அகவிலைப்படி உயர்வுடன் இதுவும் கிடைக்கும்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் எவ்வவவு  அதிகரிக்கும்? 2 அல்லது 3 சதவீதம்? AICPI குறியீடு தரவுகள் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 18, 2025, 03:11 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.
  • அடுத்த டிஏ உயர்வு எப்போது நடக்கும்?
  • அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
7வது ஊதியக்குழு: ஜூலையில் 2 பரிசுகள்..... அகவிலைப்படி உயர்வுடன் இதுவும் கிடைக்கும்

7th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஜனவரி 2025 -இல் அகவிலைப்படி 2% அதிகரித்ததை தொடர்ந்து, தற்போது ஜூலை 2025 முதல் அகவிலைப்படி 3% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான AICPI தரவுகளிலிருந்து இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை.

Add Zee News as a Preferred Source

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உய்ரவு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை திருத்தப்படுகின்றன. மார்ச் மாதத்தில், ஜனவரி 2025 முதலான அகவிலைப்படி 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இப்போது அடுத்த அகவிலைப்படி திருத்தம் ஜூலை 2025 முதல் அமலுக்கு வரும். இது செப்டம்பர் அல்லது அக்டோபரில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DA Hike: டிஏ உயர்வு எவ்வளவு இருக்கும்?

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் எவ்வவவு  அதிகரிக்கும்? 2 அல்லது 3 சதவீதம்? AICPI குறியீடு தரவுகள் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

- ஜனவரி 2025 இல் AICPI குறியீடு 143.2
- பிப்ரவரியில் AICPI குறியீடு 142.8
- மார்ச்சில் AICPI குறியீடு 143.0 
- ஏப்ரல் மாதத்தில் 0.5 புள்ளிகள் அதிகரித்து 143.5 ஆக உள்ளது. டிஏ மதிப்பெண்ணை 57.95% ஆக உயர்ந்துள்ளது. இது 2 முதல் 3% வரையிலான டிஏ உயர்வை குறிக்கிறது.

இருப்பினும், மே மற்றும் ஜூன் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. அவை முறையே ஜூன் 30 மற்றும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். இதற்குப் பிறகுதான் ஜூலை 2025 முதல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெளிவாகத் தெரியும். மே-ஜூன் மாத புள்ளிவிவரங்களில் அதிகரிப்பு இருந்தால், ஜூலை மாதத்தில் 3% டிஏ அதிகரிப்பு உறுதியானதாகக் கருதப்படுகிறது. இந்த தரவில் சரிவு ஏற்பட்டால், ஜனவரி மாதத்தைப் போலவே, டிஏ % வரை அதிகரிக்கலாம். இருப்பினும், ஜூலை மாதத்தில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Salary Hike: ஊதிய உயர்வு

அகவிலைப்படி 2% அதிகரித்தால், 18,000 அடிப்படை சம்பளம் பெறுபவர்களுக்கு ரூ.10,260 அளவிலான நன்மையும், 3% அதிகரித்தால், ரூ.10,440 அளவிலான நன்மையும் கிடைக்கும். 

DA Arrears: டிஏ அரியர்

அகவிலைப்படியின் புதிய விகிதங்கள் ஜூலை 2025 முதல் பொருந்தும். இது தீபாவளியை ஒட்டி நடைபெறும் மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஜூலை முதலான டிஏ அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும்.

Dearness Allowance Calculation: அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியைக் கணக்கிட ஒரு சூத்திரம் உள்ளது. 

அகவிலைப்படி % = [{கடந்த 12 மாதங்களுக்கான 12 மாத சராசரி AICPI-IW (அடிப்படை ஆண்டு 2001=100) – 261.42}/261.42×100]

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த சூத்திரம் பொருந்தும். 

மேலும் படிக்க | ITR Filing: CA உதவி இல்லாமல் ITR தாக்கல் செய்வது எப்படி? எளிய செயல்முறை இதோ

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழுவில் அதிரடி ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்கள் ஹேப்பி, லெவல் வாரியான கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News