அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், PF உறுப்பினர்களுக்கு மார்சில் மெகா குட் நியூஸ்

7th Pay Commission: சமீபத்தில் சம்பள வகுப்பினருக்கு மத்திய அரசு பெரிய பரிசை வழங்கியது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 10, 2025, 04:18 PM IST
  • மார்ச் மாதம் முக்கிய அறிவிப்புகள்.
  • இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் வட்டி.
  • அகவிலைப்படி எவ்வளவு உயரும்?
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், PF உறுப்பினர்களுக்கு மார்சில் மெகா குட் நியூஸ்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. மார்ச் மாதம் ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் EPFO ​​கணக்கு வைத்திருப்பவர்கள் இரண்டு குறிப்பிடத்தக்க சலுகைகளைப் பெறக்கூடும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அப்டே

சமீபத்தில் சம்பள வகுப்பினருக்கு மத்திய அரசு பெரிய பரிசை வழங்கியது. இந்த மாதம் 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வரி விலக்கு வருமானத்தின் வரம்பு 12 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு மார்ச் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.

Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதிய உயர்வு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கும்போதெல்லாம் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் (Dearness Relief) அதிகரிக்கும். அந்த வகையில் மார்ச் மாதம் ஓய்வூதியதாரர்களுக்கும் நல்ல செய்தி காத்திருக்கிறது.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் வட்டி

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை தவிர, இபிஎஃப் சந்தாதாரர்களுக்கும் நல்ல செய்தி காத்திருக்கிறது. மார்ச் மாதம் 2024-25 நிதியாண்டிற்கான PF வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை அரசு உயர்த்தக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dearness Allowance: அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?

மோடி அரசாங்கம் ஹோலிக்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் நிவாரணத்தை 3% உயர்த்தக்கூடும் என்று கூறப்படுகின்றது. அப்படி நடந்தால், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவை 56% ஆக அதிகரிக்கும். இந்த மாற்றம் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் கீழ் செய்யப்படும். இந்த ஏற்றம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும். 

EPFO Interest Rate: இபிஎஃப்ஓ வட்டி விகிதம்

கூடுதலாக, 2024-25 நிதியாண்டிற்கான PF வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அரசு இப்போது அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து விவாதிக்க பிப்ரவரி 28 ஆம் தேதி ஒரு முக்கியமான கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

DA Hike: ஆண்டுக்கு 2 முறை டிஏ உயர்வு

மத்திய அரசு வழக்கமாக, அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அரையாண்டு தரவுகளின் அடிப்படையில், அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்களை ஆண்டுக்கு இரண்டு முறை மதிப்பாய்வு செய்கிறது. இந்த மாற்றங்கள் வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் அமலுக்கு வருகின்றன. பொதுவாக, இவற்றுக்கான அறிவிப்புகள் மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளிவருகின்றன.

AICPI Index: ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள்

ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரையிலான AICPI குறியீட்டுத் தரவுகளின் அடிப்படையில், ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயரும். ஜூலை முதல் நவம்பர் வரையிலான புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ​​AICPI குறியீடு 144.5 ஐ எட்டியுள்ளது, டிஏ ஸ்கோர் 55.05% ஆக உள்ளது. இது அகவிலைப்படியில் 3% உத்தரவாதமான அதிகரிப்பைக் குறிக்கிறது. புதிய விகிதங்கள் ஹோலி பண்டிகையையொட்டி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

DA Arrears: டிஏ அரியர்

அகவிலைப்படி ஊயர்வு ஜனவரி 2025 இல் நடைமுறைக்கு வரும் என்பதால், ஊழியர்களுக்கு ஜனவரி முதல், அதாவது இரண்டு மாத டிஏ நிலுவைத் தொகையும் கிடைக்கும்.

அகவிலைப்படி 3% உயர்ந்தால், குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.540 அதிகரிக்கும், ரூ.2,50,000 சம்பாதிக்கும் உயர் பதவியில் உள்ளவர்களுக்கு கூடுதலாக ரூ.7,500 கிடைக்கும். ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் பயனடைவார்கள், அவர்களின் ஓய்வூதியம் ரூ.270 அதிகரித்து ரூ.3,750 ஐ எட்ட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | SBI UPI வரம்பை நிமிடங்களில் அதிகரிக்கலாம்: இப்படி செய்தால் போதும்

மேலும் படிக்க | PM Kisan 19வது தவணை இந்த நாளில் வருகிறது: இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது.... இதுதான் காரணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News