7வது ஊதியக்குழு: அரசின் புதிய CGHS உத்தரவு... மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்

7th Pay Commission CGHS Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு CGHS தொடர்பான ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 20, 2025, 03:08 PM IST
  • மத்திய அரசு ஊழியரா நீங்கள்?
  • உங்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது.
  • மத்திய அரசு சுகாதாரத் திட்டம் பற்றிய அப்டேட் இதோ.
7வது ஊதியக்குழு: அரசின் புதிய CGHS உத்தரவு... மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்

7th Pay Commission: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய அரசு பணிகளில் இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கு CGHS தொடர்பான ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

Central Government Health Scheme: மத்திய அரசு சுகாதாரத் திட்டம்

சமீபத்தில் மத்திய அரசின் சுகாதாரத் திட்ட (CGHS) அட்டை வழங்குவது தொடர்பாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. மாதாந்திர சம்பள கழிப்புகளில் CGHS-க்கு பங்களிப்பு கழிக்கப்படும் ஊழியர்கள் தானாகவே CGHS சேவை அட்டையைப் பெற உரிமையுடையவர்கள் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. 

CGHS Card: சிஜிஎஹ்எஸ் அட்டை

அத்தகைய ஊழியர்கள் சிஜிஎஹ்எஸ் அட்டைக்கு விண்ணப்பிக்காவிட்டாலும் இது அவர்களுக்கு பொருந்தும். இதற்கு விண்ணப்பிக்காததால் ஊழியர்கள் சுகாதாரப் பலன்களை நியாயமற்ற முறையில் இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த முடிவின் நோக்கமாகும்.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய முடிவு

பல மத்திய அரசு ஊழியர்கள் CGHS -க்கு பங்களிப்பு செய்தாலும், அதன் அட்டைக்கு விண்ணப்பிக்கத் தவறிவிடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் CGHS வசதிகளுக்கான அணுகலை நிறுத்துவது நியாயமற்றது என்று அமைச்சகம் கருதியுள்ளது. CGHS அட்டையை தானாக வழங்குவதன் நோக்கம் இந்த நிலைமையை மேம்படுத்துவதாகும். 

CGHS -க்கு பங்களிக்கும் எந்தவொரு ஊழியரும் அவர்களுக்குத் தகுதியான சலுகைகளை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். CGHS ஒரு கட்டாய சுகாதாரத் திட்டமாகும். CGHS மருந்தக திட்டத்தின் கீழுள்ள பகுதிகளில் வசிக்கும் ஊழியர்களுக்கு இதற்கான பங்களிப்பு கழிப்புகள் தானாகவே தொடங்கும். இந்த ஊழியர்கள் CGHS அட்டைக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

Health Ministry: சுகாதார அமைச்சகம் கூறியது என்ன?

ஒரு அரசு ஊழியரின் மாத சம்பளத்திலிருந்து CGHS பங்களிப்பு கட்டாயமாக கழிக்கப்படுமானால், அவர் அட்டை பெற விண்ணப்பிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவருக்கு CGHS வசதிகளின் பலனை மறுப்பது நியாயமற்றது என அமைச்சகம் கருதுகிறது. இது தவிர, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு CGHS அட்டைகள் தானாகவே வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு சுகாதார அமைச்சகம் நிர்வாகக் கிளைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

CGHS என்றால் என்ன?

CGHS திட்டம் என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு சுகாதாரத் திட்டமாகும். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மலிவு விலையில் மருத்துவ ஆலோசனை, சிகிச்சை, பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் கிடைக்கின்றன. இது ஒரு வகையான முழுமையான மருத்துவ சேவையாக பார்க்கப்படுகின்றது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக இந்த திட்டம் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.

8வது ஊதியக்குழுவில் CGHS -இல் மாற்றங்கள் பற்றியும் பேசப்படுகின்றது. கடந்த மூன்று சம்பள கமிஷன்களும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு புதிய சுகாதாரத் திட்டத்தைத் தொடங்க பரிந்துரைத்தன. 8வது ஊதியக்குழு பரிந்திரைகளிலும் இது இடம்பெறும் என கூறப்படுகின்றது.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: 4 நல்ல செய்திகள், ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட், விவரம் இதோ

மேலும் படிக்க | EPF Claim நிராகரிக்கப்படுவதற்கான சில முக்கிய காரணங்களும்... தீர்வுகளும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News