குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: வருகிறது டிஏ அரியர் தொகை.... எப்போது, எவ்வளவு? கணக்கீடு இதோ

7th Pay commission, DA Arrears: ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2025 ஆகிய மாதங்களுக்கான டிஏ மற்றும் டிஆர் அரியர் தொகை கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 5, 2025, 03:33 PM IST
  • டிஏ அரியர் எப்போது கிடைக்கும்?
  • அகவிலைப்படியில் குறைந்த ஏற்றம் ஏன்?
  • அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா?
குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: வருகிறது டிஏ அரியர் தொகை.... எப்போது, எவ்வளவு? கணக்கீடு இதோ

7th Pay commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. கூடிய விரைவில் அவர்களுக்கு அகவிலைப்படியுடன் நிலுவைத் தொகையும் கிடைக்கும். 3 மாத நிலுவைத் தொகைகள் ஒன்றாக விடுவிக்கப்படும். மத்திய அரசு சமீபத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியை திருத்தியமைத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவை 2% அதிகரிக்கப்பட்டுள்ளன.

Add Zee News as a Preferred Source

Dearness Allowance: அகவிலைப்படி அதிகரிப்பு

இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) 53% -இல் இருந்து 55% ஆக ஏற்றம் கண்டுள்ளது. இருப்பினும், 2 சதவீத அதிகரிப்பு கடந்த 7 ஆண்டுகளில் மிகக் குறைவான ஒரு அதிகரிப்பாகும். மேலும், இந்த முறை, மார்ச் மாத இறுதியில் அரசாங்கம் அதற்கு ஒப்புதல் அளித்தது. எனவே அதற்கான தொகை ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 48.6 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 66.5 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இந்த அதிகரிப்பு அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ.6,614 கோடி சுமையை ஏற்படுத்தும்.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ​​எவ்வளவு தொகை கிடைக்கும்? எப்போது கிடைக்கும்?

புதிய அகவிலைப்படி (DA) ஜனவரி 1, 2025 முதல் பொருந்தும். அதனால், ஊழியர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2025 ஆகிய மாதங்களுக்காக டிஏ அரியர் தொகை கிடைக்கும்.

DA Arrears: டிஏ அரியர்

- அடிப்படை சம்பளம் ரூ.18,000 உள்ள ஊழியர்களுக்கு மாத சம்பளத்தில் ரூ.360 அதிகரிக்கும்.
- இந்த வகையில், மூன்று மாதங்களுக்கான அவர்களது மொத்த டிஏ நிலுவைத் தொகை ரூ.1080 ஆக இருக்கும். 
- அதற்கான தொகையும் ஏப்ரல் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். 

Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கான கணக்கீடு

- ரூ.9,000 அடிப்படை ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.180 கூடுதலாக கிடைக்கும்.
- 3 மாத டிஏ அரியர் தொகையாக, ரூ.540 கிடைக்கும். 

DA Hike: டிஏ உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டடுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. இப்போது அடுத்த அதிகரிப்பு ஜூலை-டிசம்பர் 2025 க்கு இருக்கும். இது வழக்கமாக அக்டோபர்-நவம்பர் 2025 க்குள் அறிவிக்கப்படும்.

2% டிஏ உயர்வு: அகவிலைப்படியில் குறைந்த ஏற்றம் ஏன்?

அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) படி, ஜனவரி 2025 முதல் DA/DR 2% அதிகரித்துள்ளது. டிசம்பர் 2024 இல், AICPI-IW எண் 143.7 புள்ளிகளாக இருந்தது. இதன் காரணமாக DA கணக்கீடு 55.98% ஐ எட்டியது. ஆனால், அரசாங்க விதிகளின்படி, தசம புள்ளிக்குப் பிறகு உள்ள எண் அகவிலைப்படியில் சேர்க்கப்படுவதில்லை. எனவே அது 55% ஆக மட்டுமே அதிகரித்தது.

78 மாதங்களில் இல்லாத அளவு குறைவு

கடந்த சில ஆண்டுகளில், அகவிலைப்படி 3 அல்லது 4 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது. ஆனால் 78 மாதங்களில் (ஆறரை ஆண்டுகளில்) முதல் முறையாக 2% மட்டுமே அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அகவிலைப்படி 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. அப்போதிருந்து, 3 அல்லது 4 சதவீத தொடர்ச்சியான அதிகரிப்பு இருந்து வருகிறது. புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, அகவிலைப்படி அதிகரிப்பின் அடிப்படையில் ஊழியர்கள் பயனடைவார்கள். 8வது சம்பளக் குழு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது, ஆனால், அந்த அறிவிப்புக்குப் பிறகு, அகவிலைப்படி 2% மட்டுமே உயர்த்தப்பட்டது ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Zero Dearness Allowance: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா?

8வது சம்பளக் குழு அமல்படுத்தப்படும்போது, அகவிலைப்படி கணக்கீடு மீண்டும் ஒருமுறை மாறக்கூடும். அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும் என்ற விவாதம் நடந்து வருகிறது. இது சம்பள அமைப்பை மீட்டமைக்கும். மேலும் அகவிலைப்படி மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும். ஆனால், இது முற்றிலும் குழுவின் பரிந்துரைகளைப் பொறுத்தது. 

Base Year: அடிப்படை ஆண்டு

அரசாங்கம் 8வது சம்பளக் குழுவை அமல்படுத்தும்போது, ​​அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்கு அதன் அடிப்படை ஆண்டையும் மாற்றலாம் என கூறப்படுகின்றது. இதன் காரணமாகவும் அகவிலைப்படி கணக்கீடு பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | EPS Pension: ரூ.35,000 அடிப்படை ஊதியம், 30 ஆண்டு சர்வீஸ்... கார்ப்பஸ், மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

மேலும் படிக்க | வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு தங்கத்தை வரி இல்லாமல் கொண்டு வர முடியும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News