7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி-ஜூன் 2025 காலத்திற்கான அகவிலைப்படி 2% அதிகரிக்கப்பட்டது. இது சுமார் 7 ஆண்டுகளில் மிகக் குறைந்த அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிகரிப்புக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 55% ஆக அதிகரித்துள்ளன.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த எதிர்பார்ப்பு என்ன?
ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி அதிகரிப்புக்கு பிறகு, அடுத்ததாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பு என்ன? ஜூலை 2025 -க்கான டிஏ உயர்வு பற்றிய பேச்சு இப்போதே தொடங்கிவிட்டது. இதற்கான அறிவிப்பு இந்த ஆண்டு அக்டோபரில் தீபாவளியை ஒட்டி வரும் என நம்பப்படுகின்றது. அடுத்த முறை அகவிலைப்படி 3% முதல் 4% வரை உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.
Dearness Allowance: ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு எவ்வளவு இருக்கும்?
இதற்கிடையில், பிப்ரவரி 2025 -க்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI-IW) தரவு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதில் மீண்டும் சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜூலையில் அகவிலைப்படி உயர்வை பாதிக்கலாம்.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வைத் தீர்மானிப்பதற்கான முக்கிய அளவீடாக AICPI-IW உள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்கு, அதாவது மார்ச், ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் நுகர்வோர் பணவீக்கம் மேலும் குறைந்தால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மீண்டும் குறைவாகனே இருக்கும்.
"பிப்ரவரி 2025க்கான அகில இந்திய CPI-IW 0.4 புள்ளிகள் குறைந்து 142.8 (நூற்று நாற்பத்திரண்டு புள்ளி எட்டு) ஆக உள்ளது" என்று தொழிலாளர் பணியகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் கடைசி டிஏ உயர்வு
ஜூலை 2025 -க்கான டிஏ உயர்வு அக்டோபரில் தீபாவளியை ஒட்டி அறிவிக்கப்படும். 8வது சம்பளக் குழு ஜனவரி 2026 இல் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதால். ஆகையால், ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு 7வது ஊதியக்குழுவின் கடைசி டிஏ உயர்வாக இருக்கலாம். இருப்பினும், புதிய சம்பளக் குழு 2027 க்கு முன்பு செயல்படுத்தப்படாது என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
DA Hike: டிஏ உயர்வு ஜூலையில் மீண்டும் குறைவாகவே இருக்குமா?
AICPI-IW என்ற குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிப்பு முடிவு செய்யப்படுகிறது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் பணியகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி:
- பிப்ரவரி 2025 இல் AICPI-IW 0.4 புள்ளிகள் குறைந்து 142.8 ஆக உள்ளது.
- ஜனவரி 2025 இல் இது 143.2 ஆக இருந்தது.
பிப்ரவரி 2025 இன் ஆண்டு பணவீக்கம் (Year-on-Year Inflation) 2.59% ஆகக் குறைந்துள்ளது.
= பிப்ரவரி 2024 இல் 4.90% ஆக இருந்தது.
டிஏ உயர்வு ஊழியர்களுக்கு ஏன் முக்கியமாகிறது?
மத்திய அரசு அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணத்தை வழங்குகிறது. இது அடிப்படை சம்பளத்தின் ஒரு பகுதியாகும். பணவீக்கம் காரணமாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் சிக்கலை தீர்க்க அகவிலைப்படி வழங்கப்படுகின்றது. இதில் AICPI-IW தரவு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இதன் அடிப்படையில் அரசாங்கம் DA மற்றும் DR ஐக் கணக்கிடுகிறது.
மேலும் படிக்க | லட்சங்களில் வருமானம் கிடைக்க.. நீங்கள் கட்டாயம் வேண்டிய 5 முதலீடுகள் இவை தான்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









