)
7th Pay Commission Uniform Allowance: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கு. மத்திய அரசு ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் தாக்கம் பல மத்திய ஊழியர்கள் மீது இருக்கும். இந்த முக்கிய உத்தரவை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த உத்தரவு
மத்திய அரசு தற்போது பிறப்பித்துள்ள உத்தரவு 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஆடை அலவன்ஸுடன் தொடர்புடையது. இந்த உத்தரவின்படி, ஜூலை 2025 க்குப் பிறகு அரசுப் பணியில் சேரும் புதிய மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் முழு ஆடை அலவன்ஸ் கிடைக்காது. மாறாக, பணியில் சேரும் தேதியின்படி அதன் ஒரு பகுதியை மட்டுமே அவர்கள் பெறுவார்கள். ஆடை அலவன்ஸாக அவர்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது ஊழியரின் சேரும் தேதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
Dress Allowance: ஆடை கொடுப்பனவு யாருக்கு வழங்கப்படுகின்றது?
பணியின் போது நிலையான சீருடை அல்லது ஒரே வகையிலான ஆடை அணிய வேண்டிய ஊழியர்களுக்கு ஆடை அலவன்ஸ் வழங்கப்படுகிறது. இதில் ஆடை அலவன்ஸ், கிட் பராமரிப்பு, காலணிகள், கவுன்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் செலவும் அடங்கும். 7வது ஊதியக்குழுவில் இதற்கு ஒரு தெளிவான வகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு எவ்வளவு ஆடை அலவன்ஸ் கிடைக்கிறது?
உதாரணமாக,
- ராணுவம், விமானப்படை, கடற்படை, CAPF மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் ஆண்டுதோறும் ஆடை அலவன்ஸாக ரூ.20,000 பெறுகிறார்கள்.
- மறுபுறம், காவல்துறை, நர்சிங் ஊழியர்கள், சுங்கத்துறை, கார்ப்பரேட் சட்ட சேவை மற்றும் குடிவரவுத் துறை அதிகாரிகள் ஆண்டுதோறும் ரூ.10,000 பெறுகிறார்கள்.
- கீழ்நிலை பாதுகாப்பு ஊழியர்கள், ரயில் நிலைய மாஸ்டர்கள் மற்றும் கேன்டீன் ஊழியர்கள் போன்ற ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5,000 வழங்கப்படுகிறது.
புதிய விதிகளின் கீழ் ஆடை கொடுப்பனவு பெறுவது எப்படி
அரசாங்கத்தின் புதிய உத்தரவின்படி, ஜூலை 2025 க்குப் பிறகு பணியில் சேரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டு முழுவதற்குமான ஆடை கொடுப்பனவு கிடைக்காது. அவர்கள் சேர்ந்த மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு ஜூன் வரையிலான காலத்தின் அடிப்படையில் ஆடை அலவன்சுக்கான தொகையை பெறுவார்கள்.
Formula For Dress Allowance: ஆடை அலவன்சுக்கான சூத்திரம்
(ஆண்டு ஆடை கொடுப்பனவு ÷ 12) × பணியில் சேர்ந்ததிலிருந்து அடுத்த ஆண்டு ஜூன் வரை மீதமுள்ள மாதங்கள்
உதாரணமாக, ஒரு ஊழியர் செப்டம்பரில் வேலையில் சேர்ந்தால், செப்டம்பர் முதல் ஜூன் வரை மொத்தம் 10 மாதங்களுக்கு அவருக்கு கொடுப்பனவு கிடைக்கும்.
Retiring Employees: ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்
ஜூலை 2025 க்குப் பிறகு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, நிதி அமைச்சகத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. புதிய உத்தரவு வரும் வரை, பழைய விதிகள் பொருந்தும். தற்போதைய முறைப்படி, ஒரு ஊழியர் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு ஓய்வு பெற்றால், அவருக்கு முழு ஆடை கொடுப்பனவு வழங்கப்படும். அதே சமயம் டிசம்பர் மாதத்திற்குள் ஓய்வு பெறுபவர்களுக்கு பாதி கொடுப்பனவு கிடைக்கும்.
இந்த விதி ஏற்கனவே உள்ள ஊழியர்களுக்கும் பொருந்துமா?
இதுவரை வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, இந்த விதி ஜூலை 2025 க்குப் பிறகு மத்திய அரசு பணியில் சேரும் புதிய மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த மாற்றம் தற்போதுள்ள ஊழியர்களைப் பாதிக்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ