7th Pay Commission: லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம (டிஆர்) உயர்வு குறித்து மத்திய அமைச்சரவை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அறிவிப்பு எப்போது வரும்? அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Dearness Allowance: அகவிலைப்படி அதிகரிப்பு
ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி மற்றும் அகவிலிலை நிவாரண (Dearness Relief) அறிவிப்பை மத்திய அரசு கூடிய விரைவில் வெளியிடும். மார்ச் மாத சம்பளத்தில் மத்திய அரசு ஊழியர்கள் உயர்த்தப்பட்ட ஊதியத்தையும் இரண்டு மாத நிலுவைத் தொகையையும் அதாவது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான அகவிலைப்படி அரியர் தொகையையும் பெறுவார்கள். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்கள் 7 ஆண்டுகளில் மிகக் குறைந்த டிஏ உயர்வைப் பெறுவார்கள்
இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்கள் கடந்த 7 ஆண்டுகளில் மிகக் குறைந்த டிஏ உயர்வை பெற வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த முறை மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஆர் (DR) 2 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிகிறது. இது 7 ஆண்டுகளில் மிகக்குறைந்த டிஏ உயர்வாக இருக்கும்.
எனினும், இது குறித்த மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இதற்கு முன் ஜூலை 2018 -இல் 2% டிஏ உயர்வு இருந்தது.
DA Hike: டிஏ உயவு
இதற்கு முன்னர் அக்டோபர் 2024 -இல் டிஏ உயர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி (DA) அதிகரிப்பை மத்திய அமைச்சரவை அங்கீகரித்தது. அதன் பிறகு 50 சதவிகிதமாக இருந்த மொத்த அகவிலைப்படி 55% ஆக அதிகரித்தது.
அகவிலைப்படி உயர்வு எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது?
அகவிலைப்படி (DA) உயர்வுகள் சராசரி அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டவை. தொழில்துறை தொழிலாளர்களுக்கான (CPI-IW), இது வாழ்க்கைச் செலவில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கிறது. அரசாங்கம் ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் DA/DR -இல் மாற்றங்களை செய்கிறது. இருப்பினும், இதற்கான அறிவிப்புகள் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படுகின்றன.
தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (2016=100):
டிசம்பர், 2024க்கான அகில இந்திய CPI-IW 0.8 புள்ளிகள் குறைந்தன. 2024 நவம்பரில் 144 ஆக இருந்த புள்ளிகள் டிசம்பரில் 143.7 ஆக குறைந்தன.
Salary Hike: அகவிலைப்படி 2% அதிகரித்தால் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
ரூ.18,000 அடிப்படை சம்பளம் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ.360 அதிகரிக்கும். தற்போது, அவர்கள் 53% அகவிலைப்படியின் படி ரூ.9,540 பெற்று வருகிறார்கள். அகவிலைப்படி 2% அதிகரித்தால், அகவிலைப்படி தொகை ரூ.9,900 ஆக உயரும்.
மேலும் படிக்க | ரூ.55 டெபாசிட், மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம்: மத்திய அரசின் மாஸ் திட்டம்
மேலும் படிக்க | SIP Vs Top-Up SIP: 20 ஆண்டுகளில் ரூ.1 கோடி பணம் சேர்க்க... எது பெஸ்ட் முதலீடு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









