மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக்: மிகக்குறைந்த டிஏ உயர்வு, AICPI எண்கள் மூலம் வந்த ஏமாற்றம்

7th Pay Commission: இந்த முறை அகவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த அதே அளவிலான உற்சாகத்தை ஏற்படுத்தாமல் போகலாம். இதற்கான காரணம் என்ன? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 25, 2025, 04:51 PM IST
  • அகவிலைப்படி எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும் என தகவல்.
  • மத்திய அரசு ஊழியர்கள் அறிவிப்பை எப்போது எதிர்பார்க்கலாம்?
  • டிஏ உயர்வு 2% ஆக இருந்தால் ஊதியம் எவ்வளவு உயரும்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக்: மிகக்குறைந்த டிஏ உயர்வு, AICPI எண்கள் மூலம் வந்த ஏமாற்றம்

7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அடுத்த மாதம் தங்கள் அகவிலைப்படி குறித்த சில குறிப்பிடத்தக்க செய்திகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஹோலிக்கு முன் அரசு அகவிலைப்படி (DA) உயர்வை அறிவிக்கக்கூடும் என்ற நம்பிக்கை ஊழியர்கள் இடையே உள்ளது. இருப்பினும், இந்த முறை அகவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த அதே அளவிலான உற்சாகத்தை ஏற்படுத்தாமல் போகலாம். இதற்கான காரணம் என்ன? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்கள் அறிவிப்பை எப்போது எதிர்பார்க்கலாம்?

தற்போது, ​​7வது ஊதியக் குழு நாட்டில் செயல்பாட்டில் உள்ளது. 8வது ஊதியக் குழுவிற்கான பணிகளை அரசாங்கம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. இது விரைவில் அமலுக்கு வரும். தற்போதைய 7வது ஊதியக் குழுவின் கீழ், அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை ஆண்டுக்கு இரண்டு முறை அதிருத்தப்படுகின்றது. முதல் மாற்றம் ஜனவரி 1 ஆம் தேதி முதலும், இரண்டாவது மாற்றம் ஜூலை 1 ஆம் தேதி முதலும் அமலுக்கு வரும். 2025 ஆம் ஆண்டிற்கான முதல் மாற்றம் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 2025 இல் வர வாய்ப்புள்ளது.

Dearness Allowance: அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டும் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. சராசரி AICPI தரவைப் பயன்படுத்தி, அரசாங்கம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை DA மற்றும் DR-க்கான விகிதங்களை மதிப்பாய்வு செய்து நிர்ணயிக்கிறது. அதாவது ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது.

அகவிலைப்படி எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும் என தகவல்

ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரையிலான AICPI தரவு, ஜனவரி 2025 இல் DA/DR எவ்வளவு உயரும் என்பதைத் தீர்மானிக்கும். AICPI டிசம்பர் 2024 இல் 0.8 புள்ளிகள் குறைந்து 143.7 ஆக உள்ளதாக தொழிலாளர் பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. பணவீக்கம் குறைந்து வருவதால், இந்த முறை அகவிலைப்படியில் வெறும்  2% அதிகரிப்பு இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். எனினும், 3% உயர்வு சாத்தியம் இல்லை என்றும் கூற இயலாது என அவர்கள் கூறியுள்ளனர். தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 53% ஆக உள்ளது.

AICPI: ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள்

ஜூலை முதல் நவம்பர் 2024 வரையிலான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI) தரவு, 2025 ஜனவரியில் அகவிலைப்படி (DA) அல்லது அகவிலை நிவாரணம் (DR) குறைந்தது 3% உயரக்கூடும் என்று பரிந்துரைத்தது. இருப்பினும், டிசம்பர் தரவு வெளியிடப்பட்ட பிறகு, 3% டிஏ உயர்வுக்கான வாய்ப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன. கடந்த அக்டோபரில், அரசாங்கம் அகவிலைப்படியை 3% உயர்த்தி, அதை 50% இலிருந்து 53% ஆக அதிகரித்தது.

DA Hike: டிஏ உயர்வு 2% ஆக இருந்தால் ஊதியம் எவ்வளவு உயரும்?

- ஜனவரி 2025 இல் அகவிலைப்படி 2% அதிகரித்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 உள்ள அரசு ஊழியர்களுக்கு ரூ.360 அதிகரிப்பு இருக்கும். 
- ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners), இந்த உயர்வு ரூ.180 ஆக இருக்கும். 
- அவர்களது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 என்பது குறிப்பிடத்தக்கது.

(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.)

மேலும் படிக்க | PM Kisan 19வது தவணை இன்னும் வரவில்லையா? கவலை வேண்டாம், இதை செய்தால் போதும்

மேலும் படிக்க | SBI Mutual Fund: மாதம் ரூ.250 முதலீடு போதும்... ரூ.29 லட்சமாக பெருகும்... முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News