குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: ஹோலிக்கு முன் 3 குட் நியூஸ் காத்திருக்கு.. வரும் வாரம் அட்டகாசம்!

7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றை அதிகரிக்கும். இதன் காரணமாக 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 8, 2025, 02:40 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.
  • அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
  • அறிவிப்பு எப்போது?
குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: ஹோலிக்கு முன் 3 குட் நியூஸ் காத்திருக்கு.. வரும் வாரம் அட்டகாசம்!

7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரவிருக்கும் வாரம் பல வித நல்ல செய்திகளை கொண்டு வரும். ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு இந்த வாரம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக, அதாவது மார்ச் 14 ஆம் தேதிக்கு முன் இந்த அறிவிப்பு வரக்கூடும்.

Add Zee News as a Preferred Source

Dearness Allowance: அகவிலைப்படி அதிகரிப்பு

7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றை அதிகரிக்கும். இதன் காரணமாக 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறுவார்கள். ஆண்டுக்கு 2 முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை அதிகரிக்கப்படுகின்றன.

DA Hike: டிஏ உயர்வு எவ்வளவு இருக்கும்?

இந்த முறை வழக்கத்தை போல அகவிலைப்படி 3 அல்லது 4 சதவீதம் உயராது என பரவலாக கூறப்படுகின்றது. புதிய விகிதங்கள் ஜனவரி 2025 முதல் அமலுக்கு வரும். எனினும் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றியும் அகவிலைப்படி உயர்வு தேதி பற்றியும் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? இதற்கான தோராயமான கணக்கீடு என்ன? இதன் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி எவ்வளவு உயரும்?

ஹோலி பண்டிகைக்கு முன், மோடி அரசு மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 2 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அகவிலைப்படி 53% ஆக உள்ளது. டிஏ 2% அதிகரிகப்பட்டால், மொத்த அக்கவிலைப்படி 55% ஆக உயரும். இதன் பிறகு அகவிலைப்படி 55 சதவீதமாக அதிகரிக்கும். டிஏ உயர்வு 2% ஆக இருந்தால், குறைவான சம்பள உயர்வே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

DA Arrears: டிஏ அரியர்

அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு இந்த மாதம் வந்தாலும், ஜனவரி முதலான மாதங்களுக்கான அகவிலைப்படி அரியர் தொகை வழங்கப்படும். ஏனெனில் ஜனவரி 2025 முதல் இந்த ஆண்டின் முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு அமலுக்கு வரும்.

Salary Hike: ஊதிய உயர்வு

ஊழியர்களின் சமப்ள உயர்வு எவ்வளவு இருக்கும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.40,000 ஆக இருந்தால், 2% அகவிலைப்படி உயர்வுக்கு பிறகு அவரது சம்பளத்தில் மாதம் ரூ.800 அதிகரிப்பு இருக்கும். ஆண்டு சம்பள உயர்வு ரூ.9600 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊதிய உயர்வு மற்றும் டிஏ அரியர் ஆகியவை ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அளிக்கும்.

8th Pay Commission: 8வது ஊதியக்குழு

கூடிய விரைவில் 8வது ஊதியக் குழு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி மாதம் 8வது ஊதியக் குழுவிற்கு மத்திய அரசு ஓப்புதல் அளித்தது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளித்தது. தற்போது குழு அமைக்கப்பட்டு அந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 7வது ஊதியக் குழு டிசம்பர் 31, 2025 உடன் நிறைவடையும். 8வது ஊதியக்குழு ஜனவரி 1, 2026 முதல் அமல்படுத்தப்பட வேண்டும். புதிய ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்  ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் இருக்கும். 

மேலும் படிக்க | பணி ஓய்வுக்கு பின் மாதா மாதம் ரூ.60,000 வருமானம் கேரண்டி: இதில் முதலீடு செய்தால் போதும்

மேலும் படிக்க | EPFO ​​3.0... மாறும் விதிகள்... கூடும் வசதிகள்... அமைச்சர் கூறிய முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News