)
DA Hike Latest News: 7வது ஊதியக் குழுவின் கீழ் ஜூலை 2025 க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். டிஏ உயர்வுக்கு இப்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு 3 சதவீத உயர்வை அனுமதித்துள்ளதாகவும் பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி 3% அதிகரிக்கப்படால், மொத்த அகவிலைப்படி 55% -இலிருந்து 58% ஆக அதிகரிக்கும்.
8வது ஊதியக் குழு ஜனவரி 2026 முதல் அமலுக்கு வருவதால், வது ஊதியக்குழுவின் கீழ் இது கடைசி அகவிலைப்படி திருத்தமாகும். இந்த உயர்வு 48 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கும் 66 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் இது அவர்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும்.
தொழிலாளர் பணியகம் சமீபத்தில் ஜூன் 2025க்கான CPI-IW தரவை வெளியிட்டது. ஜூன் எண்கள் மே மாதத்தை விட ஒரு புள்ளி அதிகரித்து குறியீட்டெண் 145.0 ஆக இருக்கிறது. இதன் அடிப்படையில், அகவிலைப்படி 58 சதவீதத்தை எட்டும் என்பது உறுதியாகியுள்ளது. இது முந்தைய 55 சதவீதத்திலிருந்து 3 சதவீதம் அதிகமாகும்.
- செயல்படும் தேதி: ஜூலை 1, 2025
- அமைச்சரவை ஒப்புதல்: செப்டம்பர் 2025 இல் எதிர்பார்க்கப்படுகிறது
- செலுத்தப்படும் மாதம்: அக்டோபர் 2025
- நிலுவைத் தொகை: ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2025
அதாவது, ஊழியர்கள் தங்கள் அக்டோபர் சம்பளத்தில் திருத்தப்பட்ட அகவிலைப்படியுடன், அதிகரித்த ஊதியம் மற்றும் கடந்த மூன்று மாத டிஏ அரியர் (DA Arrears) தொகையையும் சேர்த்து பெறுவார்கள்.
- ஜூலை 1, 2025: அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும் மாதம்
- செப்டம்பர் 2025: அமைச்சரவை ஒப்புதல் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது
- அக்டோபர் 2025: புதிய அகவிலைப்படி வரவு வைக்கப்பட்ட முதல் சம்பளம் வரும்
- அக்டோபர் 2025: ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான மொத்த நிலுவைத் தொகையும் வழங்கப்படும்
சில உதாரணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000:
- பழைய அகவிலைப்படி (55 சதவீதம்) = ரூ.9,900
- புதிய அகவிலைப்படி (58 சதவீதம்) = ரூ.10,440
- அகவிலைப்படியில் அதிகரிப்பு = மாதத்திற்கு ரூ.540
அடிப்படை ஓய்வூதியம் ரூ.20,000:
- பழைய அகவிலைப்படி (55 சதவீதம்) = ரூ.11,000
- புதிய அகவிலைப்படி (58 சதவீதம்) = ரூ.11,600
- அகவிலைப்படியில் அதிகரிப்பு = மாதத்திற்கு ரூ.600
பொதுவாக, அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புகளை மத்திய அரசு அமைச்சரவை கூட்டம் வாயிலாக வெளியிடும். இந்த முறையும் அப்படியே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் விலைவாசியை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அளிக்கப்படுகின்றது. ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி திருத்தப்படுகின்றது. வாழ்க்கைச் செலவில் ஏற்படும் மாற்றங்களை அளவிடும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI-IW) பயன்படுத்தி அகவிலைப்படி விகிதம் கணக்கிடப்படுகிறது.
ஜூலை 2025 டிஏ உயர்வு சுருக்கமாக....
- ஜூலை 2025 -க்கான டிஏ உயர்வுக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.
- தீபாவளிக்கு முன்னதாக இந்த நற்செய்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- ஜூலை 2025 -இல் அகவிலைப்படி 3% அதிகரிக்கும் என்பது AICPI எண்களின் மூலம் தெளிவாகியுள்ளது.
- இதன் மூலம் மாத சம்பளத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் காணப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ