Monthly Pension: 7வது ஊதியக்குழுவில், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த ஓய்வூதியம் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலை நிவாரணம் (DR) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அகவிலை நிவாரணம் மாறிக்கொண்டே இருப்பதால், மொத்த ஓய்வூதியத் தொகையும் காலப்போக்கில் மாறுகிறது. ரூ.20,000, ரூ.35,000, ரூ.50,000 மற்றும் ரூ.75,000 அடிப்படை ஊதியங்களில் ஊழியர்களின் மொத்த மதிப்பிடப்பட்ட ஓய்வூதியம் எவ்வளவு இருக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.
7th Pay Commission: மாதாந்திர ஓய்வூதிய கணக்கீடுகள்
ஓய்வு பெற்ற பிறகு மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ஒரு முக்கிய வருமான ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. ஊழியர்களில் பெரும்பாலோர் NPS எனப்படும் தேசிய ஓய்வூதிய முறையை (New Pension System) பின்பற்றுகிறார்கள். பலர் OPS எனப்படும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் (Old Pension Scheme) கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். மேலும், இப்போது ஏப்ரல் 1, 2025 முதல் UPS, அதாவது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (Unified Pension Scheme) தேர்ந்தெடுக்கும் விருப்பமும் அவர்களுக்கு கிடைக்கும்.
OPS -இன் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களைப் பொறுத்தவரை, அவர்களின் தொடக்க மாதாந்திர ஓய்வூதியம், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 10 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஓய்வூதியதாரர் இறந்தால் OPS -இல் குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்படுகின்றது. ஆனால் ஓய்வு பெற்ற பிறகு அவர்கள் பெறும் ஒரே ஓய்வூதியம் அடிப்படை ஊதியம் மட்டுமல்ல. இதனுடன் அவர்களுக்கு அகவிலை நிவாரணமும் (Dearness Allowance) கிடைக்கின்றது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியக் கணக்கீடு
ஒரு ஊழியருக்கு ரூ.20,000, ரூ.35,000, ரூ.50,000, ரூ.65,000 அல்லது ரூ.80,000 அடிப்படை ஓய்வூதியம் இருந்தால் மதிப்பிடப்பட்ட மொத்த ஓய்வூதியம் என்னவாக இருக்கும்? இதற்கான கணகீட்டை இங்கே காணலாம்.
7th Pay Commission: 7வது ஊதியக் குழுவில் அடிப்படை ஓய்வூதிய வரம்பு
7வது ஊதியக் குழுவில், குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.9,000, அதிகபட்சம் ரூ.1,25,000. இந்த வரம்புகள் 2.57 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அடிப்படையாகக் கொண்டவை.
Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கான மொத்த ஓய்வூதியம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது
ஓய்வூதியதாரர்கள் அவர்களின் அடிப்படை ஓய்வூதியத்துடன் அகவிலை நிவாரணத்தையும் (DR) பெறுகிறார்கள். இரண்டின் கூட்டுத்தொகையும் அவர்களின் மொத்த ஓய்வூதியத் தொகையாகும்.
Dearness Relief: ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் ஏன் வழங்கப்படுகிறது?
10 ஆண்டு கால அளவு கொண்ட ஊதியக் குழு முழுவதும் ஓய்வூதியதாரர்களுக்கான அடிப்படை ஓய்வூதியம் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. ஆனால் இந்த ஆண்டுகளில், பணவீக்கம் உயரும். எனவே, அதிகரிக்கும் விலைவாசிக்கு ஏற்ப ஓய்வூதியத் தொகையை சரிசெய்ய ஊழியர்களுக்கு DR வழங்கப்படுகிறது.
அகவிலை நிவாரணம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
தொழிலாளர் பணியகம் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு- தொழில்துறை தொழிலாளர்கள் (AICPA-IW) தரவின் அடிப்படையில் டிஆர் கணக்கிடப்படுகிறது. இந்த குறியீடு அதிகரிக்கும் பணவீக்கத்தைக் குறிக்கிறது. மத்திய அரசு 6 மாதங்களுக்கு ஒரு முறை DR வரம்பை திருத்துகிறது.
தற்போதைய அகவிலை நிவாரண விகிதம் என்ன?
தற்போதைய அகவிலை நிவாரண விகிதம் 53 சதவீதமாகும். இது 2024 ஜூலை மாதம் மாற்றப்பட்ட அகவிலை நிவாரணமாகும். ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி, அகவிலை நிவாரண திருத்தம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
புதிய ஊதியக்குழு செயல்படுத்தப்படும்போது DR என்ன ஆகும்?
புதிய ஊதியக்குழு செயல்படுத்தப்படும்போது அகவிலை நிவாரணம் அடிப்படை ஓய்வூதியத்துடன் இணைக்கப்படும். இந்த தொகை புதிய ஊதியக்குழுவிற்கான புதிய அடிப்படை ஓய்வூதியமாக மாறும்.
- ரூ.20,000 அடிப்படை ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரருக்கான மொத்த ஓய்வூதியம்
மொத்த மதிப்பிடப்பட்ட ஓய்வூதியம் ரூ.30,600 ஆக இருக்கும்.
- ரூ.35,000 அடிப்படை ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரருக்கான மொத்த ஓய்வூதியம்
மொத்த மதிப்பிடப்பட்ட ஓய்வூதியம் ரூ.53,850 ஆக இருக்கும்.
- ரூ.50,000 அடிப்படை ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரருக்கான மொத்த ஓய்வூதியம்
மொத்த மதிப்பிடப்பட்ட ஓய்வூதியம் ரூ.76,500 ஆக இருக்கும்.
- ரூ.65,000 அடிப்படை ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரருக்கான மொத்த ஓய்வூதியம்
மொத்த மதிப்பிடப்பட்ட ஓய்வூதியம் ரூ.99,450 ஆக இருக்கும்.
- ரூ.80,000 அடிப்படை ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரரின் மொத்த ஓய்வூதியம்
மொத்த மதிப்பிடப்பட்ட ஓய்வூதியம் ரூ.1,24,000 ஆக இருக்கும்.
மேலும் படிக்க | SIP vs PPF: ரூ.10,000 முதலீட்டை ரூ.50 லட்சமாக பெருக்க உதவும் முதலீடு எது?
மேலும் படிக்க | NSC vs FD: மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற முதலீட்டு திட்டம் எது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









