)
8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டவுடன் அரசு ஊழியர்கள் பெரிய சம்பள உயர்வை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களில் முக்கிய பங்கு வகிக்கும் அரசு ஆசிரியர்களுக்கும், புதிய ஊதியக் கட்டமைப்பு மிகப்பெரிய உயர்வைக் கொண்டுவரும்.
8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் சம்பளம் எவ்வளவு உயரும் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வரவில்லை. எனினும், இது குறித்து பல மதிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. பல தரகு நிறுவனங்கள் ஊதிய உயர்வை மதிப்பிடுவதற்கு தங்கள் சொந்த சூத்திரங்களைப் பயன்படுத்தி வருகின்றன. தரகு நிறுவனங்களும் பிற நிபுணர்களும் சம்பள உயர்வை நிர்ணயிக்கும் "ஃபிட்மென்ட் ஃபாக்டர்" அடிப்படையில் தங்கள் எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
8வது ஊதியக்குழுவில் வரவுள்ள சம்பள உயர்வால் மத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களும் பயனடைவார்கள். திருத்தப்பட்ட சம்பளத்தைக் கணக்கிடுவதில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த முறை, ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.83 முதல் 2.46 -க்குள் நிரணயிக்கப்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
- ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.83 ஆக இருந்தால், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் சம்பளம் சுமார் 14% உயரக்கூடும்.
- ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.15 ஆக இருந்தால், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான அதிகரிப்பு சுமார் 34% ஆக இருக்கக்கூடும்.
- கோடக் நிறுவன ஈக்விட்டிஸ் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.8 ஆக இருக்கும் என்றும், சுமார் 13% சம்பள உயர்வு இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது ஒரு பெருக்கியாகும். தற்போதைய அடிப்படை சம்பளத்துடன் ஃபிட்மென்ட் ஃபாக்டர் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படிகின்றது. உதாரணமாக, ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.8 ஆக இருந்தால், உங்கள் தற்போதைய அடிப்படை சம்பளம் 1.8 ஆல் பெருக்கப்படும்.
ஒரு புதிய ஊதியக் குழு செயல்படுத்தப்படும்போது, அப்போது இருக்கும் அகவிலைப்படி பொதுவாக ரீசெட் செய்யப்பட்டு அது புஜ்ஜியமாக்கப்படும். உதாரணமாக, 7வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.10,000 ஆக இருந்திருந்தால், அது 2.57 ஆல் பெருக்கப்பட்டு, அடிப்படை சம்பளம் ரூ.25,700 ஆக மாறியிருக்கும். ஆனால் டிஏ பூஜ்ஜியமாக ரீசெட் செய்யப்பட்டதால், கையில் கிடைக்கும் ஊதியத்தில் உண்மையான அதிகரிப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது.
8வது ஊதியக் குழுவிற்குப் பிறகு உங்கள் திருத்தப்பட்ட ஊதியத்தை மதிப்பிட, உங்கள் தற்போதைய அடிப்படை சம்பளத்தை திட்டமிடப்பட்ட ஃபிட்மென்ட் ஃபாக்டரால் பெருக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ