8வது ஊதியக்குழு: முக்கிய 15 ToR பரிந்துரைகள்..... அரசு ஒப்புதல் கிடைத்தால் ஊழியர்களுக்கு ஜாக்பாட்

8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் கீழ் செய்யப்பட வேண்டிய மாற்றங்களுக்கான பரிந்துரைகளை NC-JCM மத்திய அரசுக்கு அளித்துள்ளது. அரசாங்கத்துடன் பகிரப்பட்டுள்ள 15 முக்கிய பரிந்துரைகளை பற்றி இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 24, 2025, 12:16 PM IST
  • சூடுபிடிக்கும் 8வது ஊதியக் குழு பணிகள்.
  • மாநிலங்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்வி.
  • நிதி அமைச்சக இணை அமைச்சர் அளித்த விரிவான பதிலை இங்கே காணலாம்.
8வது ஊதியக்குழு: முக்கிய 15 ToR பரிந்துரைகள்..... அரசு ஒப்புதல் கிடைத்தால் ஊழியர்களுக்கு ஜாக்பாட்

8th Pay Commission Details of ToR proposal: 8வது ஊதியக் குழு தொடர்பான பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இது குறித்த பல அப்டேட்களை மத்திய அரசு தொடர்சியாக அளித்து வருகின்றது. 8வது மத்திய ஊதியக் குழுவிற்கான குறிப்பு விதிமுறைகளை (ToR) உருவாக்குவதற்காக தேசிய கூட்டு ஆலோசனை அமைப்புக் குழுவின் (NC-JCM) ஊழியர்கள் தரப்பிலிருந்து பரிந்துரைகளைப் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Add Zee News as a Preferred Source

NC-JCM என்றால் என்ன?

- NC-JCM என்பது அரசாங்கத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையிலான உரையாடலுக்கான ஒரு தளமாகும்.

- பொதுவான நலன் மற்றும் ஊழியர் நலன் தொடர்பான விஷயங்கள் குறித்த விவாதங்களை இந்த அமைப்பு முவைக்கின்றது.

மாநிலங்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்வி

- மாநிலங்களவை உறுப்பினர் புவனேஸ்வர் கலிதா எழுப்பிய கேள்விக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது.

- 8வது ஊதியக் குழு ToR-க்கு NC-JCM இன் ஊழியர்கள் தரப்பிலிருந்து வந்துள்ள குறிப்பிட்ட பரிந்துரைகள் குறித்து உறுப்பினர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

- இந்த பரிந்துரைகள் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படுகிறதா இல்லையா என்றும் அவர் அரசாங்கத்திடம் கேட்டார்.

8வது ஊதியக் குழு ToR குறித்த கேள்விக்கு அரசாங்கத்தின் பதில்

- நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில், நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, பங்குதாரர் ஆலோசனையின் ஒரு பகுதியாக NC-JCM இன் ஊழியர்கள் தரப்பிலிருந்து அரசாங்கம் பரிந்துரைகளைப் பெற்றுள்ளதாக ஒப்புக்கொண்டார்.

- 8வது ஊதியக் குழு ToR-க்கான ஆலோசனை செயல்முறை குறித்த மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் மாநிலங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களிடமிருந்து உள்ளீடுகள் கோரப்பட்டுள்ளதாகக் கூறினார்.

NC-JCM இன் ஊழியர்கள் தரப்பு அரசாங்கத்துடன் 15 முக்கிய பரிந்துரைகளை பகிர்ந்துகொண்டுள்ளது. NC-JCM இன் ToR முன்மொழிவு, 8வது ஊதியக் குழுவின் கீழ் எந்த வகை ஊழியர்கள் சலுகைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற விவரங்களை வழங்கியது. அரசாங்கத்துடன் பகிரப்பட்டுள்ள 15 முக்கிய பரிந்துரைகளை பற்றி இங்கே காணலாம்:

1. ஊழியர் வகைகளின் பரந்த கவரேஜ்

8வது ஊதியக் குழு மத்திய அரசு (தொழில்துறை மற்றும் தொழில்துறை அல்லாத), அகில இந்திய சேவைகள், பாதுகாப்பு மற்றும் துணை ராணுவப் படைகள், கிராமப்புற டாக் சேவகர்கள், யூனியன் பிரதேச ஊழியர்கள், தணிக்கை மற்றும் உச்ச நீதிமன்ற ஊழியர்கள், ஒழுங்குமுறை அமைப்பு ஊழியர்கள் (RBI தவிர்த்து) மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஊழியர்களை உள்ளடக்கியது என்று NC-JCM முன்மொழிந்துள்ளது.

2. 1.1.2026 தேதியிட்ட திருத்தப்பட்ட ஊதிய தொகுப்பு

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், அனைத்து உள்ளடக்கப்பட்ட ஊழியர்களுக்கும் விரிவான திருத்தப்பட்ட ஊதிய அமைப்பை ஆணையம் உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

3. நவீன தேவைகளின் அடிப்படையில் வாழ்க்கை ஊதியம்

2019 தொழிலாளர் அமைச்சக பரிந்துரைகளுக்கு ஏற்ப, ஒழுக்கமான மற்றும் கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கவும், 1957 Aykroyd சூத்திரத்தை திருத்தவும், ஒரு குடும்பத்திற்கு 3.6 நுகர்வு அலகுகளைப் பயன்படுத்தவும் NC-JCM ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.

4. குறைந்த ஊதிய நிலைகளை இணைத்தல்

ஊதிய மேட்ரிக்ஸை சிறப்பான வகையில் மாற்ற, லெவல் 1 ஐ வெவல் 2 உடன், வெவல் 3 ஐ வெவல் 4 உடன், மற்றும் வெவல் 5 ஐ வெவல் 6 உடன் இணைக்க கவுன்சில் பரிந்துரைத்தது.

5. MACP கட்டமைப்பில் சீர்திருத்தம்

மாற்றியமைக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட தொழில் முன்னேற்றம் (MACP) திட்டத்தில் முரண்பாடுகளை சரிசெய்யவும், தெளிவாக வரையறுக்கப்பட்ட படிநிலையில் குறைந்தது மூன்று பதவி உயர்வுகளை உறுதி செய்யவும் பரிந்துரைக்கப்படுள்ளது.

6. உடனடி இடைக்கால நிவாரணம்

ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் கவுன்சில் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது.

7. ஊதியம்/ஓய்வூதியத்துடன் DA மற்றும் DR இணைப்பு

அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைப்படி நிவாரணம் (DR) ஆகியவற்றின் பொருத்தமான சதவீதத்தை இணைக்க கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

8. 7வது ஊதியக்குழுவின் முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டும்

7வது ஊதியக் குழுவின் ஒழுங்கின்மை மற்றும் JCM கூட்டங்களில் எழுப்பப்பட்ட தீர்க்கப்படாத முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய ஆணையத்தை கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.

9. மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியப் பலன்கள்

சிறந்த ஓய்வூதிய விதிமுறைகள், கம்யூடட் பென்ஷனை விரைவாக மீட்டெடுப்பது (12 ஆண்டுகளுக்குப் பிறகு), மற்றும் கடந்த மற்றும் எதிர்கால ஓய்வூதியதாரர்களிடையே சமத்துவம், ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஓய்வூதியம் மதிப்பாய்வு செய்யப்படுதல் ஆகியவையும் பரிந்துரைகளில் அடங்கும்.

10. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க கோரிக்கை

பங்களிப்பு NPS ஐ அகற்றி, CCS (ஓய்வூதியம்) விதிகள் 1972/2021 இன் கீழ் முன்னர் வரையறுக்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது ஒரு முக்கிய கோரிக்கையாக உள்ளது.

11. CGHS மற்றும் மருத்துவ சலுகைகள்

CGHS தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தவும், நிலையான மருத்துவக் கொடுப்பனவை (FMA) அதிகரிக்கவும், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பணமில்லா, தொந்தரவு இல்லாத மருத்துவ சேவையை உறுதி செய்யவும் கவுன்சில் கோரியுள்ளது.

12. முதுகலை பட்டம் வரை கல்வி கொடுப்பனவு

மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு முதுகலை பட்டம் வரை குழந்தைகள் கல்வி கொடுப்பனவு மற்றும் விடுதி மானியத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

13. அன்வான்ஸ் தொகைகளின் அறிமுகம்

சம்பள ஆணையம் புதிய தேவை அடிப்படையிலான முன்பணங்களை அறிமுகப்படுத்தவும், முன்பு நிறுத்தப்பட்டவற்றை மீட்டெடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

14. ரயில்வே ஊழியர்களுக்கான ரிஸ்க் அலவன்ஸ்

சவாலான சூழ்நிலையில் 24×7 பணிபுரியும் அனைத்து இந்திய ரயில்வே ஊழியர்களுக்கும் ரிஸ்க் மற்றும் ஹார்ட்ஷிப் அலவன்சுகளை வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

15. பாதுகாப்பு பணியாளர்களுக்கு சிறப்பு ரிஸ்க் அலவன்ஸ்

வெடிபொருட்கள் மற்றும் ரசாயனங்கள் போன்ற அபாயகரமான பொருட்களுடன் பணிபுரியும் பாதுகாப்பு நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் தனி ரிஸ்க் அலவன்ஸ், காப்பீட்டு பாதுகாப்பு மற்றும் போதுமான இழப்பீடு பெற வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

8வது ஊதியக்குழு பரிந்துரைகள்: சுருக்கமாக....

- பங்குதாரர் ஆலோசனையின் ஒரு பகுதியாக NC-JCM இன் ஊழியர்கள் தரப்பிலிருந்து அரசாங்கம் பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

- 15 முக்கிய பரிந்துரைகளை NC JCM அரசுக்கு அளித்துள்ளது.

- இவற்றை அரசு ஏற்றுக்கொண்டால், அது மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப் பெரிய நிவாரணமாக இருக்கும்.

மேலும் படிக்க | PM Kisan 20வது தவணை கிடைக்க செய்ய வேண்டிய 3 முக்கிய பணிகள்

மேலும் படிக்க | EPFO Higher Pension: மக்களவையில் வெளிவந்த தகவல், 11,01,582 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News