)
8th Pay Commission Latest News: மத்திய அரசு உழியரா நீங்கள்? உங்கள் வீட்டில் யாரேனும் மத்திய அரசு பணிகளில் பணிபுரிகிறார்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம், ஊதிய உயர்வு, இதில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் ஆகியவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு பணிகளில் பணிபுரிபவர்களுக்கு ஊதியக்குழு பல வித மேம்படுத்தல்களுக்கான சிறந்த வாய்ப்பாக அமைகிறது. ஊதியகுழுக்கள் ஊழியர்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கான நம்பிக்கையை அளிக்கின்றன. ஒவ்வொரு சம்பளக் கமிஷனிலும், சம்பளம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கின்றது.
தற்போது 8வது ஊதியக்குழு பற்றிய பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு ஜனவரி 2025 -இல் வந்தது. எனினும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிக மெதுவாகவே நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு 8வது ஊதியக்குழு தொடர்பான அடுத்த அப்டேட்டை எப்பொது அளிக்கும் என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
சமீபத்தில், தேசிய கவுன்சில் கூட்டு ஆலோசனை அமைப்பின் (NC-JCM) செயலாளர் (பணியாளர் பக்கம்) ஷிவ் கோபால் மிஸ்ரா, 8வது சம்பளக் கமிஷன் ஜனவரி 2026 முதல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார். கடந்த முறை 7வது ஊதியக்குழு ஜூலை 2016 இல் செயல்படுத்தப்பட்டது. எனினும், அதன் பரிந்துரைகள் ஜனவரி 2016 முதல் அமலுக்கு வந்தன என்று அவர் கூறுகிறார். இதுபோன்ற சூழ்நிலையில், ஊழியர்கள் சரியான நேரத்தில் நிவாரணம் பெற இந்த முறையும் அதே முறையை பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
எனினும், இந்த முறை 8வது ஊதியக்குழுவின் நடவடிக்கைகள் மிக மெதுவாகவே நடந்துவருகின்றன. குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனம் இன்னும் நடக்கவில்லை. குறிப்பு விதிமுறைகளும் (ToR) இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில், இது 2026 ஜனவரி முதல் அமலுக்கு வருவது மிக கடினம் என கருதப்படுகின்றது. 2026 ஆம் ஆண்டின் மத்தியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது அமலுக்கு வரக்கூடும் என கூறப்படுகின்றது. எனினும், இதன் நன்மைகள் 2026 ஜனவரி முதல் கிடைக்கும்.
- இந்த முறை மத்திய அரசு உழியர்களுக்கு 30 முதல் 34 சதவீதம் வரை சம்பள உயர்வு சாத்தியம் என்றும் JCMிவ் கோபால் மிஸ்ரா கூறியுள்ளார்.
- இந்த உயர்வு கிடைத்தால், அது ஊழியர்களின் நிதி நிலையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சந்தையிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
- எனினும், இது குறித்து அரசாங்கத்திடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வரவில்லை.
- இந்த முறை அரசாங்கத்தின் மீதான அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது என்பது ஊழியர் அமைப்புகளின் செயல்பாட்டிலிருந்து தெளிவாகிறது.
- பல மாநிலங்களில் தேர்தல்களும் நெருங்கிவிட்டன.
- ஆகையால், இந்த பிரச்சினை அரசியல் ரீதியாகவும் முக்கியமானதாக இருக்கலாம்.
- 8வது ஊதியக்குழு தொடர்பான கோரிக்கையை அரசாங்கம் எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
- ஜனவரி 2026 முதல் 8வது சம்பள ஆணையம் செயல்படுத்தப்படுமா?
- லட்சக்கணக்கான ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுமா?
- தற்போது, நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் 8வது ஊதியக்குழு எப்போது செயல்படுத்தப்படும் என்பது பற்றிய விவாதம் மட்டுமே உள்ளது.
8வது ஊதியக்குழு: சுருக்கமாக...
- மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது உதியக்குழுவின் அமலாக்கத்திற்காக காத்திருக்கிறார்கள்.
- உறுப்பினர்களின் நியமனம் இன்னும் நடக்கவில்லை.
- குறிப்பு விதிமுறைகளும் (ToR) இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
- இவற்றுக்கான பணிகளை அரசு விரைந்து செய்யும் என கூறப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ