)
8th Pay Commission Pension Hike: இன்னும் சில வாரங்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல வித முக்கிய செய்திகள் கிடைக்கவுள்ளன. அடுத்த சில வாரங்களில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- ஆக்ஸ்ட், செப்டம்பர் மாதங்களில் 8வது ஊதியக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- அதன் பின்னர் குழு, பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்து தங்கள் பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும்.
- மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பரிந்துரைகள் அமலுக்கு வரும்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 8வது ஊதியக்குழுவில் பல வித நற்செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றில், அவர்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கக்கூடிய முக்கியமான சில சாத்தியமான அறிவிப்புகள் இவை:
- மிகப்பெரிய ஓய்வூதிய உயர்வு
- கம்யூடட் ஓய்வூதிய விதிகளில் மாற்றம்.
- கூடுதல் ஓய்வூதிய விதிகளில் மாற்றம்.
- பழைய ஓய்வூதியத் திட்டம்
- ஊதிய உயர்வும் ஓய்வூதிய உயர்வும் 8வது ஊதியக்குழுவால் நிர்ணயிக்கப்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை சார்ந்திருக்கும்.
- 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 3.0 அல்லது அதற்கு மேல் இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- ஒரு உதாரணத்தின் மூலம் ஓய்வூதிய உயர்வு கணக்கீட்டை புரிந்துகொள்ளலாம்.
- பல்வேறு ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களில், அடிப்படை ஊதியமாக ரூ.ரூ.30,000 பெறும் ஓய்வூதியதாரர்க்களின் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கிம் என இங்கே காணலாம்.
1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.57,600
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.62,400
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.68,400
2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.77,100
3.00 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.90,000
- மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும்போது, தங்கள் ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தமாகப் பெற்றுக்கொள்ளும் வசதி அவர்களுக்கு அளிக்கப்படுகின்றது.
- இது கம்யுடேஷன் ஆஃப் பென்ஷன் என அழைக்கப்படுகிறது.
- இந்த ஓய்வூதிய மாற்றத்தை தேர்வு செய்தால், அதற்கு பதிலாக, எடுக்கப்பட்ட தொகை மாதா மாதம் ஓய்வூதியத்திலிருந்து சிறிது சிறிதாக கழிக்கப்படும். அரசு 15 வருட காலத்தில் அந்த தொகையை மீட்டெடுக்கிறது.
- அதன் பிறகு, ஊழியர்கள் முழு ஓய்வூதியத்தை பெறத் தொடங்குகிறார்கள்.
- இந்த கம்யூடட் பென்ஷன் மீட்பு காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது.
- இந்த முறை இதற்கு ஒப்புதல் கிடைக்கலாம் என நம்பப்படுகின்றது.
- ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியம் பெறுவதற்கான தற்போதைய வயது வரம்பைக் குறைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது.
- கூடுதல் ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயது தற்போது 80 ஆக உள்ளது.
- இதை 65 ஆக குறைக்க கோரிக்கை உள்ளது. அதாவது 65 வயதில் 5% கூடுதல் ஓய்வூதியமும், 70 வயதில் 10% கூடுதல் ஓய்வூதியமும், 75 வயதில் 15% கூடுதல் ஓய்வூதியமும், 80 வயதில் 20% கூடுதல் ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என ஊழியர் அமைப்புகள் கோரி வருகின்றனர்.
- தற்பொது 80 வயதில் 20% கூடுதல் ஓய்வூதியமும், 85 வயதில் 30% கூடுதல் ஓய்வூதியமும், 90 வயதில் 40% கூடுதல் ஓய்வூதியமும், 95 வயதில் 50% கூடுதல் ஓய்வூதியமும், 100 வயதில் 100% கூடுதல் ஓய்வூதியமும் வழங்க அரசு ஒப்புதல் உள்ளது.
- பங்களிப்பு அடிப்படையில் உள்ள NPS ஐ அகற்றி, CCS (ஓய்வூதியம்) விதிகள் 1972/2021 இன் கீழ் முன்னர் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
- OPS மீண்டும் வந்தால், ஓய்வூதியதாரர்களின் நன்மைகள் அதிகமாகும்.
- இதன் மூலம் உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைப்பதோடு, சந்தை சார்ந்த சிக்கல்களையும் சந்திக்க வேண்டி இருக்காது.
சுருக்கமாக....
- 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பல வித நற்செய்திகள் காத்திருக்கின்றன.
- இவை அவர்களது ஓய்வுக்கு பிறகான வாழ்க்கையில் புதிய தெம்பை அளிக்கும்.
- மாதா மாதம் கிடைக்கும் ஓய்வூதியத்தின் அளவிலும் அதிகரிப்பு காத்திருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ