8th Pay Commission: வரும் வாரங்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. 8வது ஊதியக்குழு குறித்த சில முக்கிய முடிவுகள் விரைவில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Dearness Allowance: அகவிலைப்படி அதிகரிப்பு
கடந்த வாரம், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் 2% உயர்வை அங்கீகரித்தது. அதன் பிறகு மொத்த அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக உயர்ந்துள்ளது. அகவிலைப்படி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது, இது வீட்டு வாடகைப் படி (HRA) மற்றும் பயணப் படி (TA) போன்ற பிற சம்பளக் கூறுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
DA Arrears: டிஏ அரியர்
மத்திய அரசு ஊழியர்கள் புதுப்பிக்கப்பட்ட அகவிலைப்படியை ஜனவரி 2025 முதல் பெறுவார்கள். ஆகையால் ஜனவரி முதலான டிஏ அரியர் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும்.
DA Hike: அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பு எப்போது?
அகவிலைப்படிக்கான அடுத்த திருத்தம் நவம்பர் 2025 இல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஜூலை 2025 முதல் அமலுக்கு வரும். டிசம்பர் 2026 முதல் 7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) காலம் முடிவடைகிறது. ஜனவரி 2026 முதல் 8வது ஊதியக் குழுவின் பரிதுரைகள் அமலுக்கு வர வேண்டும். இதனால், ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு 7வது ஊதியக் குழுவின் கீழ் இறுதி அகவிலைப்படி புதுப்பிப்பாக இருக்கும். பணவீக்கத்தால் சம்பளத்தில் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க அகவிலைப்படி மிக முக்கியமானதாக பார்க்கப்படௌகின்றது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு
ஜனவரி மாதம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடி 8வது ஊதியக் குழுவை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்தார். இருப்பினும், 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 8வது ஊதியக் குழுவுடன் தொடர்புடைய செலவுகள் குறிப்பிடப்படவில்லை. ஆகையால், இது ஏப்ரல் 2026 -க்கு பிறகு அல்லது ஜனவரி 2027 -இல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
Fitment Factor: ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன?
ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான திருத்தப்பட்ட அடிப்படை சம்பளத்தை நிர்ணயிக்கும் ஒரு பெருக்கி ஆகும். 7வது ஊதியக் குழு அனைத்து ஊழியர்களுக்கும் 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரை பரிந்துரைத்தது. 6வது ஊதியக் குழு சுமார் 1.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டரைக் கொண்டிருந்தது. 8வது ஊதியக் குழு 2.28 முதல் 2.86 வரையிலான ஃபிட்மென்ட் ஃபாக்டரை முன்மொழியக்கூடும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள், இது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 40-50% அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் காரணி மொத்த சம்பளத்திற்கும் பொருந்தாது, அடிப்படை சம்பளத்திற்கு பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Salary Hike: 8வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
8வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளின் மூலம், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் கணிசமான உயர்வை எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். முதன்மையாக ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பு காரணமாக நல்ல சம்பள உயர்வு இருக்கும் என நம்பப்படுகின்றது. குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.40,000 ஐத் தாண்டும் என்றும், அதன் பின்னர், சலுகைகள், கொடுப்பனவுகள் மற்றும் செயல்திறன் தொடர்பான ஊதியத்திலும் மேம்பாடுகள் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
உதாரணமாக, தற்போது ரூ.20,000 அடிப்படை சம்பளம் பெறும் ஒரு ஊழியரின் சம்பளம் ரூ.46,600 முதல் ரூ.57,200 வரை உயரக்கூடும். இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.
Pension Hike: ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
- ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை: ரூ. 9,000.
- மதிப்பிடப்பட்ட ஃபிட்மென்ட் ஃபாக்டர்: 2.86 சதவீதம்
- ஓய்வூதியத்தில் 186 சதவீதம் அதிகரிப்பு
- மதிப்பிடப்பட்ட சேமிப்புத் தொகை: ரூ. 25,740
- ஓய்வூதிய உயர்வு: 16,740.
8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி (DA) எவ்வாறு தீர்மானிக்கப்படும்?
8வது ஊதியக்குழுவில், அதாவது, ஜனவரி 1, 2026 முதல் அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படும் என்பதை இன்னும் அரசாங்கம் குறிப்பிடவில்லை. இது வழக்கமாக, தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI-IW) அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றது. வரவிருக்கும் 8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீட்டு சூத்திரத்தில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
Fitment Factor Calculator: 8வது ஊதியக் குழுவிற்கான ஃபிட்மெண்ட் ஃபாக்டர் கணக்கீடு
8வது ஊதியக் குழு 2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பரிந்துரைத்தால், அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.18,000 இலிருந்து ரூ.51,480 ஆக உயரும். இது சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. அதாவது, புதிய அடிப்படை சம்பளம், பழைய அடிப்படை சம்பளத்தை ஃபிட்மெண்ட் ஃபாக்ட்ரால் பெருக்கி கணக்கிடப்படுகின்றது.
புதிய அடிப்படை சம்பளம் = பழைய அடிப்படை சம்பளம் x 2.86
புதிய அடிப்படை சம்பளம் = ரூ..9,000 x 2.86 = ரூ.36,000
மேலும் படிக்க | ரேஷன் கார்டில் பெயர் நீக்கமா? வீட்டில் இருந்தபடியே செய்யலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









