8th Pay Commission Latest News: 8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இருப்பினும், அதை சரியான நேரத்தில் அமல்படுத்துவதில் பல தடைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. 8வது ஊதியக்குழுவிற்கான உறுப்பினர்களின் நியமனமே இன்னும் நடக்காததால், அதன் அமலாக்கத்தில் சற்று தாமதம் ஏற்படக்கூடும் என கூறப்படுகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில், ஜனவரி 1, 2026 முதல் சம்பளம் அல்லது ஓய்வூதியம் அதிகரிக்கவில்லை என்றால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நிலுவைத் தொகையின் பலனைப் பெறுவார்களா என்ற கேள்வி ஊழியர்களின் மனதில் எழுகிறது.
Arrear Amount: ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரியர் தொகை கிடைக்குமா?
8வது ஊதியக்குழு அமல்படுத்தப்படுவதன் மூலம், சுமார் 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடிப் பலனைப் பெறுவார்கள். அதை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும், இடைப்பட்ட காலத்தின் நிலுவைத் தொகையை ஊழியர்கள் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஜனவரி 1, 2016 முதல் 7வது சம்பள கமிஷன் அமலுக்கு வந்தபோதும், ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 6 மாத நிலுவைத் தொகை வழங்கப்பட்டது.
Pensioners: இடையில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை கிடைக்குமா?
இதுவரை ஓய்வு பெறும் ஊழியர்கள் புதிய ஊதியக் குழுவின் பலனைப் பெற்று வந்துள்ளனர். ஆனால், இந்த அரியர் தொகையை பெற, ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட தேதிக்குப் பிறகு, அது அமலுக்கு வரும் தேதிக்கு முன்பே அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்பது நிபந்தனை. உதாரணமாக, 7வது ஊதியக் குழு (7th Pay Comission) ஜூலை 2016 முதல் அமல்படுத்தப்பட்டது, ஆனால் அது ஜனவரி 1, 2016 முதல் அமலுக்கு வந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், இடையில் சேவைக் காலம் முடிவடைந்த ஊழியர்களுக்கு புதிய ஊதியக் குழுவின் கீழ் நிலுவைத் தொகை மற்றும் பிற சலுகைகள் கிடைத்தன.
Salary Hike: 8வது ஊதியக் குழுவில் ஊழியர்களுக்கு 40-50% ஊதிய உயர்வு
8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, ஊழியர்களின் சம்பளம் 40 முதல் 50% வரை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இந்த முறை இதற்கான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.28 - 2.86 என்ற வரம்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அடிப்படை சம்பளத்தில் 40-50 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் வெவ்வேறு தர ஊதிய ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பது முடிவு செய்யப்படும்.
Fitment Factor: ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன?
ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது சம்பள ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு முக்கியமான கருவியாகும். இது சம்பள உயர்வுக்கான அளவுகோல்கள் என்ன என்பதைச் சொல்கிறது. மத்திய ஊழியர்களின் திருத்தப்பட்ட சம்பளம் இந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. புதிய அடிப்படை ஊதியத்தை தீர்மானிக்க இது தற்போதைய அடிப்படை ஊதியத்துடன் (7வது ஊதியக் குழுவின் கீழ்) பெருக்கப்படும். 8வது ஊதியக் குழுவிற்கான முன்மொழியப்பட்ட ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.28 முதல் 2.86 -க்குள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
Salary Calculation: ஃபிட்மென்ட் ஃபாக்டர் அடிப்படையில் சம்பளக் கணக்கீடு எவ்வாறு செய்யப்படும்?
ஒரு உதாரனத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். தற்போதைய சம்பளம் ரூ.18,000 உள்ள லெவல்-1 ஊழியரின் சம்பள கணக்கீட்டை இங்கே காணலாம்.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 என வைத்துக்கொள்வோம்
புதிய அடிப்படை ஊதியம் = 18,000 × 2.86 = 51,480
அதாவது ஊழியரின் புதிய அடிப்படை சம்பளம் ரூ.51,480 ஆக இருக்கும்.
இதனுடன் அகவிலைப்படி மற்றும் பிற கொடுப்பனவுகள் சேர்க்கப்பட்டு இறுதி சம்பளம் தீர்மானிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









