)
8th Pay Commission Pension: 8வது ஊதியக்குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்தது முதல், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இடையில் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றிய பேச்சுகளே அதிகமாக உள்ளன.
பெரும்பாலானவர்களின் கவனம் ஊதிய உயர்வு பற்றி இருந்தாலும், இந்த முறை, ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை ஊழியர்களை விட அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், 8வது ஊதியக்குழுவில், ஓய்வூதியதாரர்கள் மீதான கவனமும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் ஓய்வூதியதாரர்களின் போர்ட்டலின்படி, அக்டோபர் 30, 2025 நிலவரப்படி மொத்தம் 68.72 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சமாக உள்ளது.
8வது ஊதியக்குழுவிற்கான விதிமுறைகளை (TOR) அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. அறிக்கையைத் தயாரிப்பதற்கு 18 மாத காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஊதியக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இதற்கான முழுமையான கணக்கிட்டை இந்த பதிவில் காணலாம். அதற்கு முன், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்றால் என்ன என புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஊதிய மற்றும் ஓய்வூதிய உயர்வில் இதன் பங்கு மிக முக்கியமானது.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பழைய அடிப்படை சம்பளம் அல்லது அடிப்படை ஓய்வூதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தீர்மானிக்கப்படுகின்றது. 7வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. அதாவது ஒருவரின் பழைய அடிப்படை சம்பளம் ₹10,000 ஆக இருந்தால், புதிய சம்பளம் ₹10,000 × 2.57 = ₹25,700 ஆக உயரும். 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92-3.00 -க்குள் இருக்கும் என்ற கணிப்புகள் உள்ளன. எனினும், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்த இறுதி முடிவு அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு எடுக்கப்படும்.
பரிந்துரை விதிமுறைகளில் ஓய்வூதிய உயர்வு மட்டுமல்லாமல், ஓய்வூதியதாரர்களுக்கான இன்னும் பல முக்கிய முடிவுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.
- Pension Hike: ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியத்தில் ஏற்றம்
- Commuted Pension: கம்யூடட் பென்ஷன் விதிகளில் மாற்றம். மாற்றப்பட்ட ஓய்வூதியத்தை மீட்டெடுக்கும் காலத்தை குறைக்கும் பரிந்துரை உள்ளது.
- Additional Pension: ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் ஓய்வூதியம் 80 வயதுக்கு பதிலாக 65 வயதிலேயே தொடங்க வேண்டும் என்றும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் பரிந்துரைகப்பட்டுள்ளது.
- Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுத்தல் (ஜனவரி 1, 2004 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்டவர்களுக்கு).
- CGHS: CGHS மருத்துவ வசதிகள், பணமில்லா சிகிச்சை.
- Dearness relief: அடிப்படை ஓய்வூதியத்துடன் அகவிலை நிவாரணத்தை இணைத்தல்.
ஃபிட்மென்ட் ஃபாக்டரை அடிப்படையாகக் கொண்ட முழுமையான கணக்கீட்டை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு நபரின் பழைய அடிப்படை ஊதியம் ₹40,000 என்று வைத்துக்கொள்வோம், ஓய்வூதியம் (50%) ₹20,000 ஆக இருக்கும்.
8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 - 3.00 -க்குள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. அந்த நிலையில், அடிப்படை ஓய்வூதியம் ரூ.30,000 வாங்கும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என இங்கே காணலாம்.
1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.57,600,
2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.62,400,
2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.68,400,
2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.77,100,
2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.85,800,
3.00 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.90,000
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ