8வது ஊதியக்குழு: ரூ.18,000 அடிப்படை ஊதியம் ரூ.79,794 ஆக உயரும்... எப்படி? கணக்கீடு இதோ

8th Pay Commission:புதிய ஊதியக்குழுவின் பரிந்துரைகள் எப்படி இருக்கும்? ஊதியம், ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? முக்கிய மாற்றங்கள் ஏதேனும் இருக்குமா? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 10, 2025, 12:22 PM IST
  • புதிய சம்பளக் குழு ஏன் அவசியம்?
  • அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா அகவிலைப்படி?
  • பல்வேறு ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் ஊதிய உயர்வு கணக்கீடுகள் என்ன?
8வது ஊதியக்குழு: ரூ.18,000 அடிப்படை ஊதியம் ரூ.79,794 ஆக உயரும்... எப்படி? கணக்கீடு இதோ

8th Pay Commission: 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் தொடர்பான செய்திகளுக்காக சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். புதிய ஊதியக்குழுவின் பரிந்துரைகள் எப்படி இருக்கும்? ஊதியம், ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? முக்கிய மாற்றங்கள் ஏதேனும் இருக்குமா? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

8வது ஊதியக் குழு அமைக்கப்படும் அறிவிப்பு இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டாலும், குழுவின் உறுப்பினர்களை அரசாங்கம் இன்னும் நியமிக்கவில்லை. அடுத்த ஆண்டுக்குள் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்துவதற்கான பரிந்துரைகளை குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்னும் குழு உறுப்பினர்களே நியமிக்கப்படாததால், முழுமையான அமலாக்கம் ஜனவரி 2027 முதல் இருக்கக்கூடும் என சில நிபுணர்கள் கருதுகிறார்கள். 

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய கவனம்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய விவாதங்களில் ஒன்று, அகவிலைப்படி (DA) அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறு பற்றியது. சமீபத்திய 2% அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, அகவிலைப்படி தற்போது 55% ஆக உள்ளது.

DA Merger with Basic Salary: அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா அகவிலைப்படி?

முந்தைய ஊதியக் குழுக்களின் கீழ், ஃபிட்மென்ட் ஃபாக்டர் ஊதிய நிரணயத்தில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு அடிப்படை சம்பளம் அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்டது. 8வது ஊதியக் குழுவும் இதே அணுகுமுறையை பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அடிப்படை ஊதியம் அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்ட பிறகு அது பயன்படுத்தப்பட்டால், ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறைவாக இருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Dearness Allowance

- 7வது ஊதியக் குழுவின் கீழ் லெவல் 1 அரசு ஊழியருக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆகும்.
- மேலும் 55% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தால், அது ரூ.27,900 ஆக உயரும்.
- கடந்த கால அனுபவத்தின்படி, ஃபிட்மென்ட் ஃபாக்டர் (Fitment Factor) ரூ.18,000 க்கு பதிலாக ரூ.27,900 இல் பயன்படுத்தப்படலாம். 
- அந்த நிலையில், புதிய ஊதியக் குழு 1.92 - 2.86 -குள் ஃபிட்மென்ட் ஃபாக்டரை பரிந்துரைக்கலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Sakary Hike: பல்வேறு ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் ஊதிய உயர்வு கணக்கீடுகள்

- 1.92 இன் ஃபிட்மென்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்பட்டால், சம்பளம் ரூ.53,568 ஆக உயரும்.
- ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆக அதிகரித்தால் (முன்பு இருந்தது போல), சம்பளம் ரூ.71,703 ஆக அதிகரிக்கும். 
- ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆனால், சம்பளம் ரூ.79,794 ஆக மாறக்கூடும். 

அதாவது, இன்று ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எதிர்காலத்தில் ரூ.53,000 முதல் ரூ.79,000 வரை சம்பளம் பெற வாய்ப்புள்ளது.

ஜனவரி 16 அன்று, அரசாங்கம் 8வது சம்பளக் குழுவை அமைப்பதாக அறிவித்தது. குழுவின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அரசு கூறியது. இந்த மாதம் இந்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

புதிய சம்பளக் குழு ஏன் அவசியம்?

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடு செய்ய, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அவ்வப்போது ஊதிய உயர்வும், ஓய்வூதிய உயர்வும் தேவைப்படுகின்றது. இதன் காரணமாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் உருவாக்கப்பட்டு சம்பள கட்டமைப்புகள் திருத்தப்படுகின்றன. இதற்கு முன், சம்பளத்தில் கடைசியாக பெரிய மாற்றம் ஜனவரி 2016 இல் செய்யப்பட்டது. இது நடந்து சுமார் 9 ஆண்டுகள் ஆகின்றன. ஓய்வூதியதாரர்களும் தற்போதைய வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப தங்கள் மாதாந்திர ஓய்வூதியத்தை மேம்படுத்த விரும்புகிறார்கள். சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மை எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், 8வது சம்பளக் குழு 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தனது பரிந்துரைகளை வழங்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இது முழுமையாக ஜனவரி 2027 முதல் அமலுக்கு வரலாம். எனினும், 8வது சம்பளக் குழு பலன்களுக்கான நிலுவைத் தொகை ஜனவரி 1, 2026 முதல் வழங்கப்படும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழுவில் சில ஊழியர்களுக்கு குறைகிறதா ஓய்வூதியம்? நிதி அமைச்சர் அளித்த முக்கிய அப்டேட்

மேலும் படிக்க | ஓய்வூதியம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம்: வங்கிகளுக்கு RBI புதிய வழிகாட்டுதல்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News