8th Pay Commission: நிதி அமைச்சகம் கமிஷனுக்கான 35 பணியிடங்களை நிரப்பும் பணியைத் தொடங்கியுள்ளது. இது அரசாங்கம் விரைவில் சம்பளக் குழுவின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை முறைப்படுத்தக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. 8வது ஊதியக் குழு தொடர்பான முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. 8வது ஊதியக் குழுவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல மத்திய அரசு பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு பயனளிக்கும் முடிவுகள்
நிதி அமைச்சகம் கமிஷனுக்கான 35 பணியிடங்களை நிரப்பும் பணியைத் தொடங்கியுள்ளது. இது அரசாங்கம் விரைவில் சம்பளக் குழுவின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை முறைப்படுத்தக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். இது நாடு முழுவதும் 47.85 லட்சம் மத்திய ஊழியர்களுக்கும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும்.
கமிஷனுக்கான 35 பணியிடங்களில் நியமனம்
8வது சம்பளக் குழுவிற்கான 35 பணியிடங்களில் நியமனங்கள் செய்யப்படும், இது டெப்யூடேஷன் அடிப்படையில் இருக்கும் என ஏப்ரல் 17, 2025 அன்று நிதி அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த அதிகாரிகளின் பதவிக்காலம் கமிஷன் உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து அதன் முடிவு வரை அமலில் இருக்கும்.
பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) வழிகாட்டுதல்களின்படி இந்த நியமனங்கள் செய்யப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான அதிகாரிகளின் பெயர்கள் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து கோரப்பட்டுள்ளன.
8வது சம்பளக் குழுவின் முக்கிய அம்சங்கள் என்னவாக இருக்கக்கூடும்?
8வது சம்பளக் குழுவில் சில முக்கியமான மாற்றங்கள் இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றில் மிக முக்கியமானது ஃபிட்மெண்ட் ஃபாக்டர்.
7th Pay Commission: 7வது ஊதியக்குழு நிர்ணயம் செய்த ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்ன?
7வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது 8வது ஊதியக்குழுவில் 2.85 ஆக அதிகரிக்கப்படும் என கூறப்படுகின்றது. இது அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்கும்.
DA Merger: அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா?
இது தவிர, தற்போதைய அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக அகவிலைப்படி மற்றும் பிற கொடுப்பனவுகளின் கணக்கீடு மாறும். வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) மற்றும் பயணப்படியிலும் (TA) மாற்றம் இருக்கும். புதிய சம்பள அளவின் அடிப்படையில் வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் பயணப் படி திருத்தப்படும். அதே நேரத்தில், ஓய்வூதியத் தொகையை அதிகரிக்கவும், சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதி செய்யவும் கமிஷன் சிறப்பு பரிந்துரைகளை வழங்கக்கூடும்.
Salary Hike: சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?
ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.50,000 ஆக இருந்து, அவர் டெல்லியில் (HRA 30 சதவீதம்) பணிபுரிந்தால், ஊதிய உயர்வுக்கான தோராயமான கணக்கீடு பின்வருமாறு இருக்கலாம்.
- அடிப்படை ஊதியம் × ஃபிட்மென்ட் காரணி (2.85) = ரூ. 1,42,500
+ HRA (15,000) = 1,57,500 (மதிப்பிடப்பட்ட மொத்த சம்பளம்)
இந்த புள்ளிவிவரங்கள் உதாரணத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ கணக்கீடுகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ