8வது உதியக்குழு: 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு குட் நியூஸ்.... எகிறப்போகும் மாத சம்பளம்

8th Pay Commission: 8வது உதியக்குழுவில் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது பற்றி தெரிந்துகொள்ள மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 11, 2025, 05:12 PM IST
  • 8வது ஊதியக் குழு முக்கிய அப்டேட்.
  • ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் சம்பள உயர்வு.
  • 8வது ஊதியக் குழு பரிந்துரைகள் மூலம் வரக்கூடிய ஊதிய உயர்வு எவ்வளவு?
8வது உதியக்குழு: 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு குட் நியூஸ்.... எகிறப்போகும் மாத சம்பளம்

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அடுத்து வரும் சில வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு வந்தது. அதைத் தொடர்ந்து இந்த மாதம் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Add Zee News as a Preferred Source

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் ஆதரவு

இதற்கிடையில், 8வது உதியக்குழுவில் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது பற்றி தெரிந்துகொள்ள மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். பணவீக்கம் நாளுக்கு நாள் வாழ்க்கையை கடினமாக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8வது ஊதியக்குழு அதீத நம்பிக்கையை அளித்துள்ளது. 

நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் விரைவில் எண்ணற்ற குடும்பங்களுக்கு புன்னகையை வரவழைக்கக்கூடும். நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் இந்த உயர்வு பெரிய நிவாரணமாக அமையும்.

7th Pay Commission: 7வது சம்பளக் குழுவின் கீழ் வந்த அகவிலைப்படி உயர்வு

சமீபத்தில், 7வது சம்பளக் குழுவின் கீழ், அரசாங்கம் 2% அகவிலைப்படி உயர்வை (DA Hike) அங்கீகரித்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 55% ஆக அதிகரித்தன. இதன் விளைவாக, ரூ.18,000 அடிப்படை சம்பளம் பெறும் ஒரு லெவல் 1 அரசு ஊழியர் இப்போது அகவிலைப்படி உட்பட ரூ.27,900 பெறுவார். இந்தத் திருத்தம் 8வது ஊதியக் குழுவில் அடுத்து என்ன நடக்கக்கூடும் என்பது பற்றிய விவாதங்களையும் உற்சாகத்தையும் தூண்டியுள்ளது.

Salary Hike: 8வது ஊதியக் குழு பரிந்துரைகள் மூலம் வரக்கூடிய ஊதிய உயர்வு

8வது ஊதியக் குழு பரிந்துரைகளும் முந்தைய ஊதியக்குழுக்களைப் போலவே அதே கட்டமைப்பைப் பின்பற்றலாம் என கூறப்படுகின்றது. இந்த கட்டமைப்பின் படி, அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்பட்டு, அதன் பின்னர், அதில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்படுகின்றது. 

Fitment Factor: ஃபிட்மென்ட் ஃபாக்டர் 

ஃபிட்மென்ட் ஃபாக்டர் இறுதி சம்பளத்தை மாற்றியமைக்கும் முக்கிய பெருக்கியாகும். 7வது ஊதியக் குழுவில் 2.57 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்பட்டது. 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 வரை இருக்கலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் சம்பள உயர்வு

- ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்படால், சம்பளம் ரூ.53,568 ஆக உயரும்.
- 2.57 ஃபிட்மெண்ட் ஃபாக்டர் சம்பளத்தை ரூ.71,703 ஆக அதிகரிக்கும்.
- ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆனால், சம்பளம் ரூ.79,794 ஆக உயரக்கூடும்.

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.18,000 ஆக உள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மாற்றத்தால் இந்த தொகை பெரிய அளவில் அதிகரிக்கும்.

ஜனவரி 2025 இல் 8வது ஊதியக் குழு அமைப்பதாக அரசாங்கம் அறிவித்த போதிலும், குழு உறுப்பினர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படவில்லை. இந்த மாதம் குழு அமைக்கப்படும் என்றும், ஆணையம் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் பரிந்துரைகளை முன்வைக்க வாய்ப்புள்ளதாகவும், ஜனவரி 1, 2027 முதல் இது முழுமையாக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், 8வது ஊதியக்குழுவின் நன்மைகளின் நிலுவைத் தொகை ஜனவரி 2026 முதல் கிடைக்கும்.

மேலும் படிக்க | குட் நியூஸ்!! அரசு ஊழியர்களுக்கு இனி இந்த அலவன்ஸ் ஆண்டுக்கு 2 முறை கிடைக்கும்

மேலும் படிக்க | பங்குச் சந்தை சரிவிலும்... ஆண்டுக்கு 32% வருமானம் தந்த டாப் 5 ம்யூச்சுவல் பண்டுகள் இவை தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News