8th Pay Commission: 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பல முக்கிய அறிவிப்புகளுக்காக காத்திருக்கிறார்கள். அவற்றில் முக்கியமான ஒன்று கம்யூடட் பென்ஷனின் கால அளவு. 8வது உதியக்குழுவில் கம்யூடட் ஓய்வூதுயத்தை மீட்டெடுப்பதற்கான கால அளவு 15 ஆண்டுகளுக்குப் பதிலாக 12 ஆண்டுகளில் குறைக்கப்படுமா? இதற்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.
Commutation Pension
மத்திய அரசு ஊழியர்களுக்கான கம்யூடேஷன் ஓய்வூதியக் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைப்பது குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. 8வது ஊதியக்குழுவுக்கு முன்னதாக இது குறித்த பேச்சுகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. கம்யூட்டேஷன் ஓய்வூதியக் காலத்தை 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்று ஊழியர் அமைப்புகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஏனெனில் கம்யூட்டேஷன் தேதியிலிருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அது மீட்டெடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம், SCOVA (தன்னார்வ நிறுவனங்களின் நிலைக்குழு) 34வது கூட்டத்தில் ஓய்வூதியக் கம்யூட்டேஷன் காலத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுப்பப்பட்டது.
What is Commuted Pension
கம்யூடட் ஓய்வூதியம் என்றால் என்ன? இதற்கு ஓய்வூதிய மாற்றம் என்று பொருள். கம்யூடட் பென்ஷன் அதாவது மாற்றப்பட்ட ஓய்வூதியம் என்பது ஊழியர்கள் மொத்த தொகையுல் பெறும் முன்பணமாகும். இதன் கீழ் ஊழியர்களின் ஓய்வூதியத்தின் ஒரு பகுதி வழக்கமான மாதாந்திர ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்குப் பதிலாக முன்கூட்டியே மொத்தத் தொகையாக வழங்கப்படுகின்றது. இந்த தொகை ஓய்வூதியதாரரின் வயதின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. முன்னரே கொடுக்கப்பட்ட தொகைக்கான ஒரு சதவிகிதம் மாத ஓய்வூதியத்திலிருந்து கழிக்கப்படுகின்றது. பின்னர் அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, பொதுவாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஊழியர்களுக்கு அளிக்கப்படுகின்றது. இந்த கால அளவை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Finance Ministry: மாற்றப்படும் ஓய்வூதியம் குறித்த நிதித்துறை கூறியது என்ன?
11 மார்ச் 2025 அன்று நடைபெற்ற SCOVA கூட்டத்தில், கம்யூடட் பென்ஷம் அதாவது மாற்றப்பட்ட ஓய்வூதியம் குறித்த பிரச்சினை எழுப்பப்பட்டது. அப்போது நிதித்துறை இதை 8வது ஊதியக் குழுவின் குறிப்பு விதிமுறைகளில் (ToR) சேர்க்கலாம் என்று தெரிவித்திருந்தது. இதனால், இந்த பிரச்சினை SCOVA கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டது. 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மூலம் மட்டுமே இப்போது இது குறித்து முறையான முடிவை எடுக்க முடியும் என நிதித்துறை கருதுகிறது.
Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு கம்யூடட் ஓய்வூதியம் தொடர்பாக உள்ள பிரச்சினை என்ன?
ஓய்வு பெற்றவர்களுக்கு, முன்னர் பெறப்பட்ட ஓய்வூதிய முன்பணத்தை மீண்டும் வழங்குவதற்கான கால அளவை 15 ஆண்டுகளுக்கு பதிலாக 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்று ஊழியர் அமைப்புகள் அரசாங்கத்தியம் கோரிக்கை விடுத்து வருகின்றன. 8வது ஊதியக் குழுவை உடனடியாக நிறுவி, தங்கள் கோரிக்கைகளையும் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். தேசிய கவுன்சில் (பணியாளர் தரப்பு) கூட்டு ஆலோசனை அமைப்பு (NCJCM) முன்பு மத்திய அரசை மாற்றப்பட்ட ஓய்வூதிய மறுசீரமைப்பு காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைக்க வலியுறுத்தியது. எனினும் அந்தக் கால மாற்றத்திற்கான எந்த காரணத்தையும் சுட்டிக்காட்டவில்லை.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு கம்யூடட் பென்ஷன் ஏன் 12 ஆண்டுகளாக மாற்றப்பட வேண்டும்?
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கத்திற்கு மத்தியில் 15 ஆண்டு ஓய்வூதிய குறைப்பு நியாயமற்றது என்று கூறி, இதை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என ஊழியர்கள் வாதிடுகின்றனர். கூடுதலாக, அவர்கள் பணியில் இருக்கும்போது, ஊழியர்கள் ஏற்கனவே வரிகள் மற்றும் விலக்குகளின் பளுவை சுமக்கின்றானர். 12 ஆண்டு மறுசீரமைப்பு காலம் லட்சக்கணக்கான ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
ஓய்வூதிய மாற்று காலம்: வரலாற்று பின்னணி
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, 1981 ஆம் ஆண்டு மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதிய மாற்ற) விதிகளின் விதி 10A ஐ திருத்தி 38 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஓய்வூதிய மாற்ற விதிகளை ஆராயுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது. கூடுதலாக, 1986 ஆம் ஆண்டு பொது காரண (மேற்பார்வை) வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏன் இந்தப் பிரச்சினையில் புதிய பார்வையைக் கோருகிறது என்பதை கோடிட்டுக் காட்டும் விரிவான குறிப்பை கூட்டமைப்பு இணைத்துள்ளது. ஏனெனில் கடந்த 38 ஆண்டுகளில் பல அளவுருக்கள் மாறிவிட்டன.
கூட்டமைப்பு தனது கடிதத்தில், 5வது சம்பளக் குழு அறிக்கையை மேற்கோள் காட்டியது. இது மாற்றப்பட்ட ஓய்வூதிய மறுசீரமைப்புக்கான 15 ஆண்டுகளை 12 ஆண்டுகளாகக் குறைக்க பரிந்துரைத்திருந்தது. குறிப்பின்படி, மத்திய அரசு அதை ஏற்கவோ நிராகரிக்கவோ இல்லை.
இந்தப் பிரச்சினையில் அரசின் கருத்து என்ன?
பிரதமர் நரேந்திர மோடி 8வது ஊதியக்குழுவை அமைக்க ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தார். இது ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. அரசாங்கம் தற்போது ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முடிவு செய்து வருகிறது. இருப்பினும், ஓய்வூதிய மாற்றம் மற்றும் மறுசீரமைப்பு காலம் குறித்து எந்த முறையான அறிவிப்பும் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், 8வது சம்பளக் குழுவை நிறுவுவதற்கான ஒப்புதலுடன், அரசாங்கம் மாற்றப்பட்ட ஓய்வூதிய மறுசீரமைப்பு காலத்தை 15 லிருந்து 12 ஆண்டுகளாகக் குறைக்கும் என பொருளாதார வல்லுநர்களும், ஊழியர்களும், ஊழியர் சங்கங்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | ஃபுட் டெலிவரியில் களம் இறங்கும் Rapido.. முதலில் இந்த ஊரில் தான் அறிமுகம்
மேலும் படிக்க | PM Kisan 20வது தவணை சிக்காமல் கிடைக்க, இந்த 5 விஷயங்கள செய்வது அவசியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









