8வது ஊதியக்குழு: மாதம் ரூ.14,000 - ரூ.19,000 கூடுதலாக கிடைக்கும்... அறிக்கையில் குட் நியூஸ்

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உயரும்? இதன் அடிப்படை என்னவாக இருக்கும்? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 27, 2025, 01:43 PM IST
  • சம்பள உயர்வுக்கும் பட்ஜெட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
  • கோல்ட்மேன் சேக்ஸ் நடத்திய பகுப்பாய்வு.
  • ஃபிட்மெண்ட் ஃபார்டர் எவ்வளவு இருக்கும்?
8வது ஊதியக்குழு: மாதம் ரூ.14,000 - ரூ.19,000 கூடுதலாக கிடைக்கும்... அறிக்கையில் குட் நியூஸ்

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்து வரும் சில வாரங்கள் மிகவும் முக்கியமானவையாக இருக்கும். வரும் நாட்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சில முக்கிய செய்திகள் கிடைக்கவுள்ளன. 8வது ஊதியக்குழு குறித்த சில முக்கிய விவரங்கள் பற்றி வரும் வாரங்களில் தெரிய வரக்கூடும்.

Add Zee News as a Preferred Source

Pay Commission: ஊதியக்குழுக்கள்

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அலவன்சுகளில் மாற்றங்களை மதிப்பீடு செய்து அரசுக்கு பரிந்துரைக்க ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. பொதுவாக, பொருளாதாரம், பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு புதிய ஊதியக்குழு அதன் பரிந்துரைகளை அரசுக்கு வழங்குகிறது.

7th Pay Commission: 7வது ஊதியக்குழு

தற்போது, ​​7வது ஊதியக் குழு நடைமுறையில் உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 8வது சம்பள ஆணையத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. 8வது சம்பள ஆணையம் செயல்படுத்தப்பட்டவுடன், மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க சம்பள உயர்வு கிடைக்கும் என்ற அதிக நம்பிக்கை உள்ளது. இந்த புதிய ஆணையத்தால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு

8வது ஊதியக்குழு மூலம் பரிந்துரைக்கப்படும் சம்பள உயர்வுகள் பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பொறுத்தது. உதாரணமாக, மாதத்திற்கு ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் ஒரு அரசு ஊழியர் புதிய பட்ஜெட்டின் அடிப்படையில் அவர்களின் சம்பளத்தில் மாறுபாடுகளைக் காணலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

Goldman Sachs: கோல்ட்மேன் சேக்ஸ் நடத்திய பகுப்பாய்வு

முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சேக்ஸ் தற்போது சராசரியாக ரூ.1 லட்சம் மாத சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களைப் பற்றிய ஆழமான பகுப்பாய்வை நடத்தியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த பகுப்பாய்வு ஒரு உதாரணமாகச் செயல்படுகிறது. ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கும் ஒரு ஊழியர் மாதத்திற்கு ரூ.14,000 முதல் ரூ.19,000 வரை கூடுதல் சலுகைகளைப் பெற வாய்ப்புள்ளதாக இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Salary Hike: சம்பள உயர்வுக்கும் பட்ஜெட்டுக்கும் உள்ள தொடர்பு

மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வுக்கும் பட்ஜெட்டுக்கும் அதிக தொடர்பு உள்ளது. 

- அரசு 1.75 லட்சம் கோடி பட்ஜெட்டை ஒதுக்கினால், தற்போது மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் சம்பளம் ரூ.1,14,600 ஆக உயரும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 
- பட்ஜெட் ரூ.2 லட்சம் கோடியை எட்டினால், சம்பளம் ரூ.1,16,700 ஆக அதிகரிக்கும்,
- ரூ.2.25 லட்சம் கோடியாக பட்ஜெட் இருந்தால், ஊதியம் ரூ.1,18,800 ஆக உயரக்கூடும்.

8வது சம்பள ஆணையத்திற்கான குழு ஏப்ரல் 2025 இல் அமைக்கப்படும் என்றும், அதன் பரிந்துரைகள் 2026 அல்லது 2027 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. எனினும், இது குறித்து அரசின் தரப்பில் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

Fitment Factor: ஃபிட்மெண்ட் ஃபார்டர் எவ்வளவு இருக்கும்?

2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு 2016 இல் செயல்படுத்தப்பட்ட 7வது ஊதியக்குழு சம்பள உயர்வை தீர்மானிக்க 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரை பயன்படுத்தியது. இது குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தியது. 8வது ஊதியக் குழு, ஃபிட்மென்ட் ஃபாக்டரை தீர்மானிக்க ஊழியர் சங்கங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருடன் கலந்தாலோசிக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது. 

8வது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கான 3 சாத்தியக்கூறுகள் மதிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் 1.92, 2.08 மற்றும் 2.86 ஆகியவை அடங்கும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 -இலிருந்து ரூ.51,480 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஏப்ரல் 1 முதல் புதிய வருமான விதிகள் அமல்... தெரிந்துள்ள வேண்டிய 10 விஷயங்கள்

மேலும் படிக்க | UPS முக்கிய அப்டேட்: இந்த அரசு ஊழியர்களுக்கு உத்தரவாத ஓய்வூதியம் கிடைக்காது, காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News