)
8th Pay Commission Salary Hike: இந்த தீபாவளிக்கு முன்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு பற்றிய ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 8வது ஊதியக் குழு தொடர்பாக மோடி அரசு ஒரு முக்கிய முடிவை எடுக்கக்கூடும் என்ற பேச்சு உள்ளது. அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் கமிஷன் அமைக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது நீண்டகால ஊகங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படலாம். பரிந்துரைகள் மற்றும் சம்பள உயர்வுகள் பெறப்படுவதற்கு நேரம் எடுக்கும் என்றாலும், இந்த முறை செயல்முறையை விரைவுபடுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனவரியில் 8வது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று அரசாங்கம் சூசகமாக கூறியது, ஆனால் அதன் விதிமுறைகள் (ToR) அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த தீபாவளிக்குள் கமிஷன் அமைப்பது குறித்த முறையான அறிவிப்பு சாத்தியமாகும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
- ஊழியர் சங்கங்களின் அழுத்தம் அதிகரித்துள்ளது.
- 7வது சம்பள கமிஷனின் காலக்கெடு 2026 இல் முடிவடையும்.
- பல மாநிலங்களில் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அளிக்க அரசாங்கம் விரும்புகிறது.
- நவம்பர் 2025 க்குள் ஆணையம் அமைக்கப்பட்டால், பரிந்துரைகள் அடுத்த 8-10 மாதங்களுக்குள், அதாவது 2026 இறுதிக்குள் தயாராகிவிடும்.
- முந்தைய ஊதியக் குழுக்களை பார்த்தால், 7வது ஊதியக் குழு அதன் பரிந்துரைகளை உருவாக்கி சமர்ப்பிக்க சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. இருப்பினும், இந்த முறை 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஊழியர்கள் புதிய ஊதியத்தின் பயனை அடைவார்கள். ஏனெனில், இதன் பரிந்துரைகளை விரைவாகத் தயாரிக்கும் திட்டத்தில் அரசாங்கம் உள்ளது.
8வது ஊதியக்குழுவில் யாரது ஊதியம் எவ்வளவு உயரும் என்பதுதான் முக்கிய கெள்வியாக உள்ளது. 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக இருகக்க்கூடும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது இறுதி பரிந்துரைகளைப் பொறுத்தது. இந்த முறை சம்பளக் குழு செயல்பாட்டில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க அரசாங்கம் விரும்புகிறது. கமிஷன் அமைக்கப்பட்டவுடன் அறிக்கையின் பணிகள் தொடங்கும் வகையில் முன்கூட்டியே தரவுகளைத் தயாரிக்க அமைச்சகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது குழு அமைக்கப்படுவது முதல் அதன் அமலாக்கம் வரையிலான பயணத்தின் காலம் முன்பை விட குறைவாக இருக்கும்.
- சம்பள சீர்திருத்த செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
- 2026-27 ஆம் ஆண்டில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வுக்கான பாதை தெளிவாக இருக்கும்.
- கூடிய விரைவில் ஊழியர்களுக்கு அதிகரித்த ஊதியம் கிடைக்கும்.
- மத்திய அரசு 8வது சம்பள கமிஷனை ஜனவரி 2025 இல் அறிவித்தது. ஆனால், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை.
- முதல் அத்தியாவசிய நடவடிக்கை, குறிப்பு விதிமுறைகளை (ToR) இறுதி செய்து உறுப்பினர்களை நியமிப்பதாகும், அந்த வேலை இன்னும் முழுமையடையவில்லை.
- தீபாவளிக்குள் ஒரு அறிவிப்பு வெளியிடப்படும் என வெகுவாக எதிர்பார்க்கப்படுகின்றது.
- முந்தைய கமிஷன்களின் அனுபவம், ஒரு சம்பள கமிஷன் முழுமையாக செயல்படுத்தப்பட 2-3 ஆண்டுகள் ஆகும் என்று நமக்குச் சொல்கிறது.
- 7வது சம்பள கமிஷன் பிப்ரவரி 2014 இல் உருவாக்கப்பட்டது, நவம்பர் 2015 இல் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது, ஜனவரி 1, 2016 அன்று செயல்படுத்தப்பட்டது - அதாவது முழுமையான செயலாக்கத்திற்கு தோராயமாக 33 மாதங்கள் ஆயின.
- இதேபோல், 8வது கமிஷன் அதே வேகத்தில் செயல்பட்டால், தீபாவளிக்குள் அறிவிப்பு வந்தால், இது 2027 ஆம் ஆண்டில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
ஆனால் இந்த முறை, அரசாங்கம் வித்தியாசமான மனநிலையில் உள்ளது. தீபாவளியை ஒட்டி இந்த உருவாக்கம் அங்கீகரிக்கப்பட்டாலும், முழு பரிந்துரைகளும் விரைவாக வரும் என கூறப்படுகின்றதூ. 8வது ஊதியக்குழுவை 8-12 மாத காலக்கெடுவில் செயல்படுத்தும் திட்டம் உள்ளதாக கூறப்படுகின்றது.
- அரசு மாநிலங்கள், அமைச்சகங்கள் மற்றும் ஊழியர் அமைப்புகளுடன் ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது.
- 8வது ஆணையத்தின் பரிந்துரைகள் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில்/2027 ஆம் ஆண்டின் முற்பகுதியில் செயல்படுத்தப்படலாம் என்று கோடக் நிறுவன பங்கு அறிக்கை தெரிவிக்கிறது.
- சில ஆய்வாளர்கள் சுமார் 30–34% சம்பள உயர்வு இருக்கும் என்று கணித்துள்ளனர்.
- அடிப்படை பணிகள் நடந்து வருகின்றன, ஆனால் "அறிவிப்பு + பரிந்துரைகளை செயல்படுத்துதல்" என்ற முக்கியமான கட்டம் இன்னும் துவங்கவே இல்லை.
- 8வது ஊதியக்குழுவிற்கான ரோட் மேப்பை இறுதி செய்ய அமைச்சரவை அல்லது ஆலோசனைக் குழு கூட்டம் நடத்தப்படலாம்.
- அந்தக் கூட்டத்தில் ToR அங்கீகரிக்கப்படலாம், மேலும் உறுப்பினர்களுக்கான தேர்வு செயல்முறை தொடங்கப்படலாம்.
- புதிய ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அல்லது குறைந்தபட்ச ஊதியம் பற்றிய குறிப்புகள் கிடைக்கக்கூடும்.
- அடிப்படை ஊதியத்தில் அதிகரிப்பு + புதிய ஃபிட்மெண்ட் ஃபாக்டர்
- DA, HRA, TA மற்றும் பிற அலவன்சுகளில் திருத்தங்கள்.
- பழைய பரிந்துரைகளுடன் ஒப்பிடும்போது மேம்பட்ட ஊதிய கட்டமைப்பு.
- ஜனவரி 2026 முதல் அரியர் தொகை.
- ToR மற்றும் உறுப்பினர் ஒப்புதலில் தாமதங்கள்
- நிதி அழுத்தம்: பட்ஜெட்டில் ஊதிய உயர்வுகளின் சுமையை சரிசெய்தல்
- மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே ஒருமித்த கருத்து
- பணியாளர் கோரிக்கைகள் மற்றும் வளங்களை சமநிலைப்படுத்துதல்
- இணக்க முறை, கிரேடிங் முறை, லெவல்களின் இணைப்பு போன்றவற்றில் உள்ள சர்ச்சைகள்
8வது ஊதியக்குழு அமலாக்கம் சுருக்கமாக....
- ஊதியக்குழு என்பது மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவாகும். இது அரசு ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களை பரிந்துரைக்கிறது.
- ToR (குறிப்பு விதிமுறைகள்) என்பது ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் நோக்கத்தை அமைக்கும் ஆவணம்.
- புதிய ஊதியத்தை தீர்மானிக்க பழைய அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்படுகிறது,
- சம்பள உயர்வு அல்லது திருத்தம் தாமதமாகும்போது, அதன் அசல் தேதியிலிருந்து (8வது ஊதியக்குழுவில் ஜனவரி 2026) அரியர் தொகை அளிக்கப்படுகின்றது.
- மத்திய அரசு நல்ல பரிந்துரைகளை வழங்கினால், மாநிலங்களிலும் இதேபோன்ற சம்பள சீர்திருத்தங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ