8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதிய குழுவின் அமலாக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 8வது ஊதிய குழுவில் பல புதிய அம்சங்களும் அறிமுகம் செய்யப்படக்கூடும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டமும் அடங்கும். இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி
கடந்த காலங்களில் மூன்று ஊதியக் குழுக்கள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை துவக்க வேண்டும் என்று பரிந்துரைத்தன. அரசாங்கங்கள் அத்தகைய திட்டத்தைக் கொண்டிருப்பதில் ஆர்வம் காட்டிய போதிலும், அது குறித்து எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அந்த பரிந்துரைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
Central Government Health Scheme: மத்திய அரசு சுகாதாரத் திட்டம்
தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் உள்ளனர். இது வரையறுக்கப்பட்ட வரம்பைக் கொண்டுள்ளது. ஆகையால், அரசாங்கம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூடியதாரர்களுக்கு ஒரு தனி சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கடந்த காலங்களில் ஊதியக் குழுக்கள் உணர்ந்து அதற்கான பரிந்துரைகளையும் வழங்கி உள்ளன.
சுகாதார காப்பீட்டு திட்டம் குறித்து முந்தைய ஊதியக் குழுக்களின் கருத்து என்னவாக இருந்தது? ஊதியக்குழுக்கள் என்னென்ன பரிந்துரைகளை வழங்கின? 8வது ஊதியக்குழுவில் புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படுமா? அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
4th Pay Commission: 4வது ஊதியக் குழு
மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு ஆகும் செலவை திருப்பி செலுத்தும் முறையான மெடிகல் ரியம்பர்ஸ்மெண்ட் முறைக்கு பதிலாக, அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் மற்றும் முறைகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று நான்காவது ஊதியக்குழு பரிந்துரைத்தது.
6th Pay Commission: 6வது ஊதியக் குழு
6வது ஊதிய குழுவும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது. ஊழியர்கள் பரிந்துரைக்கப்பட்ட பங்களிப்பை செலுத்துவதற்கு உட்பட்டு, அத்தகைய திட்டம் ஊழியர்களுக்கு தானாக கிடைக்க வேண்டும் என்று ஆறாவது ஊதியக்குழு கூறியது. இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பணியில் சேரும் புதிய அரசு ஊழியர்களுக்கு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது. காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு மருத்துவ காப்பீட்டை வழங்கவும் 6வது ஊதியக்குழு மேலும் பரிந்துரைத்தது.
7th Pay Commission: 7வது ஊதியக் குழு
அனைத்து ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் நீண்ட காலத்திற்கு முழுமையான காப்பீட்டை வழங்குவதற்கு சுகாதார காப்பீடு "மிகவும் உகந்த வழி" என்று 7வது ஊதியக்குழு குறிப்பிட்டது.
Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கான பரிந்துரை
"மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த ஆணையம் தீவிரமாக பரிந்துரைக்கிறது," என்று 7வது ஊதியக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்தகைய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை, CGHS பகுதிகளுக்கு வெளியே வசிக்கும் ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக 7வது ஊதியக்குழு ஒரு நடவடிக்கையை பரிந்துரைத்தது. "இந்த ஓய்வூதியதாரர்களின் மருத்துவத் தேவையை பணமில்லா அடிப்படையில் பூர்த்தி செய்வதற்காக CGHS ஏற்கனவே CS (MA)/ECHS இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகளை பட்டியலிட வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைக்கிறது." என 7வது ஊதியக்குழு தெரிவித்தது.
"இது அருகிலுள்ள CGHS மையங்களின் நிர்வாகத் திறனை வலுப்படுத்துவதை உள்ளடக்கும். இருப்பினும், இந்த ஓய்வூதியதாரர்களின் நிலுவையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதில் இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும்" என்று அது மேலும் கூறியது.
ஜனவரி 2025 இல், , சுகாதார அமைச்சகம் CGHS-ஐ மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சுகாதார காப்பீட்டுத் திட்டம் (CGEPHIS) என்ற காப்பீட்டு அடிப்படையிலான திட்டத்துடன் மாற்ற திட்டமிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் (IRDAI) பதிவுசெய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இருப்பினும், இந்தத் திட்டம் குறித்து அரசாங்கத்திடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இன்னும் வரவில்லை.
இப்போது 8வது ஊதியக் குழு அமைக்கப்பட உள்ளதால், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சுகாதார காப்பீட்டு திட்ட பிரச்சினையில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









