8th Pay Commission: நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட காலமாக 8வது ஊதியக்குழுவின் உருவாவதற்காகக் காத்திருக்கின்றனர். இது அமல்படுத்தப்பட்ட பிறகு, அவர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகளில் பெரிய அதிகரிப்பு இருக்கும். இதற்கிடையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது ஊதியக்குழு குறித்து நாடாளுமன்றத்தில் ஒரு பெரிய புதுப்பிப்பை வழங்கினார். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Finance Minister Nirmala Sitharaman: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது என்ன?
8வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகள் குறித்து பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) உள்ளிட்ட பல முக்கிய அமைச்சகங்களிடமிருந்து உள்ளீடுகள் கோரப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார். கமிஷனின் பரிந்துரைகள் அரசாங்கத்தால் பெறப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த முழுமையான தெளிவு கிடைக்கும்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்கள்
தற்போது இந்தியாவில் சுமார் 36.57 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் (மார்ச் 1, 2025 வரை) மற்றும் 33.91 லட்சம் ஓய்வூதியதாரர்கள் (டிசம்பர் 31, 2024 வரை) இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தவிர, பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அந்த துறையின் ஓய்வூதியதாரர்களும் இந்த ஊதியக் குழுவின் மூலம் பயனடைவார்கள்.
New Pay Commission: 2025 ஜனவரியிலேயே 8வது சம்பளக் குழுவை அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது
மத்திய அரசு ஓய்வூதிய சமத்துவத்திற்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று நிதியமைச்சர் மாநிலங்களவையில் தெளிவுபடுத்தினார். 2025 ஜனவரியிலேயே 8வது சம்பளக் குழுவை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்ததாகவும் அவர் கூறினார்.
Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் சமமான பலன்கள் கிடைக்கும்
ஊதியக்குழுவின் நோக்கம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் படிகளை திருத்தியமைப்பதாகும். அனைத்து அரசு ஓய்வூதியதாரர்களும் சமமான சலுகைகளைப் பெறுவதையும், அவர்களிடையே எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்யும் வகையில் மக்களவை நிறைவேற்றிய நிதி மசோதாவில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் கூறினார்.
ஓய்வூதியம் தொடர்பாக என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?
ஜனவரி 1, 2016 க்கு முன்னும் பின்னும் ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஓய்வூதியதாரர்களும் ஒரே மாதிரியான ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். புதிய விதிகளின் கீழ் எந்தவொரு ஓய்வூதியதாரரின் தற்போதைய ஓய்வூதியத் தொகையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பாதுகாப்பு துறை ஓய்வூதியதாரர்களுக்கு வெவ்வேறு விதிகள் பொருந்தும் என்பதால் இது அவர்களைப் பாதிக்காது.
7வது ஊதியக் குழுவில் ஓய்வூதிய பாகுபாடு முடிவுக்கு வந்தது
ஜனவரி 1, 2006 க்கு முன்னும் பின்னும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தில் 6வது சம்பளக் குழு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிதியமைச்சர் கூறினார். அந்த நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இந்த விதிகளை அமல்படுத்தியது. இருப்பினும், மோடி அரசாங்கத்தின் முதல் பதவிக்காலத்தில் 7வது சம்பளக் குழு இந்தப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வந்து, ஜனவரி 1, 2016க்கு முன்னும் பின்னும் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை சமமாக்கியது.
8வது சம்பள கமிஷன் குழு விரைவில் அமைக்கப்படும்
8வது மத்திய ஊதியக் குழுவிற்கு விரைவில் ஒரு தலைவர் மற்றும் குறைந்தது இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். இந்தக் குழு, சம்பளம் மற்றும் ஓய்வூதிய திருத்தம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி, அதன் பரிந்துரைகளை வழங்கும். இதற்குப் பிறகு அரசாங்கம் இந்தப் பரிந்துரைகளைப் பரிசீலித்து, பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும்.
Salary Hike: மிகப்பெரிய ஊதிய உயர்வு
8வது சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்ட பிறகு, லட்சக்கணக்கான ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படக்கூடும். சம்பள் உயர்வு, 8வது ஊதியக் குழுவில் நிர்ணயிக்கப்படவுள்ள ஃபிட்மென்ட் ஃபாக்டரை பொறுத்து இருக்கும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்து 3 வெவ்வேறு மதிப்பீடுகள் உள்ளன. இவற்றில் 1.92, 2.08 மற்றும் 2.86 ஆகியவை அடங்கும். அதிகபட்சமாக. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 -இலிருந்து ரூ.51,480 ஆக அதிகரிக்கலாம்.
மேலும் படிக்க | SIP Mutual Fund: ஆயிரங்களை கோடிகளாக்கும் எஸ்ஐபி மந்திரம்... 5 காரணங்கள் இது தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









