)
8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக் குழுவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 8வது ஊதியக் குழு ஜனவரி 16, 2025 அன்று அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து, ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில், 8வது ஊதியக் குழு தொடர்பாக மத்திய அரசு விரைவில் புதிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
8வது ஊதியக் குழு செயல்பாட்டில் உள்ள தடைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்பப்படுகிறது. சமீபத்தில், நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் ஆணையம் தொடர்பான அறிவிப்பு நிலுவையில் இருப்பதாகக் கூறினார். இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை, ஆனால் ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, தீபாவளிக்குள் மத்திய அரசு ஆணையம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால், இப்போது கண்டிப்பாக மத்திய அரசு நவம்பரில் அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. பீகார் தேர்தல் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். 8வது சம்பளக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த ஊதியக்குழு ஆணையத்தை அமைக்கும் பணிகளை அரசாங்கம் இன்னும் தாமதிக்க முடியாது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வருமானம் 10 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு புதிய சம்பளக் குழு மூலம் தீர்மானிக்கப்படுகிறது. 7வது ஊதியக்குழு செயல்படுத்தப்பட்டபோது, அடிப்படை ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களில் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பெற்றனர். இந்த முறையும் அதே எதிர்பார்ப்பு உள்ளது.
8வது ஊதியக்குழுவில் பல மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 8வது ஊதியக்குழுவில் பயணக் கொடுப்பனவுகள், சிறப்புப் பணி கொடுப்பனவுகள், சிறிய பிராந்திய கொடுப்பனவுகள் மற்றும் சில துறை சார்ந்த கொடுப்பனவுகள் (பழைய தட்டச்சு/எழுத்தர் கொடுப்பனவு போன்றவை) ஆகியவை நீக்கப்பட்டு, அவற்றுக்கு பதிலாக, ஒருங்கிணைந்த, அதிக நன்மை அளிக்கக்கூடிய அலவன்சுகள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது. இருப்பினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்த முறையும் ஊதியக் கட்டமைப்பை பகுப்பாய்வு செய்து எளிமைப்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்.
8வது சம்பளக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.8 முதல் 2.86-க்குள் இருக்கும் என எதிர்பார்கப்படுகின்றது. இது நடந்தால் அடிப்படை சம்பளம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ரூ.18,000 அடிப்படை சம்பளம் பெறும் நிலை-1 மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.51,000ஆக உயரும்.
அடிப்படை ஊதிய உயர்வுக்கான சூத்திரம்:
பழைய அடிப்படை ஊதியம் X ஃபிட்மெண்ட் ஃபாக்டர் = புதிய அடிப்படை ஊதியம்
ஃபிடெட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால்,
புதிய அடிப்படை ஊதியம் = 18,000 X 2.86 = 51,480
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ