8வது ஊதியக்குழு: Fitment Factor காரணமாக வரலாறு காணாத ஊதிய உயர்வு, எவ்வளவு தெரியுமா?

8th CPC Latest News: இந்த முறை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 இலிருந்து 2.86 ஆக அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது. இது செயல்படுத்தப்பட்டால், மிகக் குறைந்த மட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 லிருந்து ரூ.51,480 ஆக உயரும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 9, 2025, 01:19 PM IST
  • ஃபிட்மென்ட் ஃபாக்டரில் ஏற்படவுள்ள மாற்றம் பெரிய நன்மையை அளிக்கும்.
  • அரசு விரைவில் விரிவான தகவல்களை வழங்கும்.
  • அகவிலைப்படியும் அதிகரிக்கும்.
8வது ஊதியக்குழு: Fitment Factor காரணமாக வரலாறு காணாத ஊதிய உயர்வு, எவ்வளவு தெரியுமா?

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப் பெரிய மற்றும் மகிழ்ச்சியான அறிவிப்பு வந்துள்ளது. 8வது சம்பளக் குழுவை அமைக்க மத்திய அரசு ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இந்த தகவலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மேலும் இந்த அறிவிப்பு 2025 பட்ஜெட்டுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. இது கோடிக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முகங்களில் மீண்டும் புன்னகையை வரவழைத்தது. இந்த ஆணையம் செயல்படுத்தப்படும் சரியான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அல்லது 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இது செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்கள் எவ்வாறு பயனடைவார்கள்?

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியங்களில் சரியான நேரத்தில் திருத்தங்களைச் செய்வதற்காக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு புதிய ஊதியக்குழுவை அமைக்கின்றது. இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிதி நிலையை மேம்படுத்தி பணவீக்கத்திலிருந்து நிவாரணம் அள்ளிக்கின்றது. இந்த வகையில், இப்போது 8வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது, இது 7வது சம்பளக் குழுவிற்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட அடுத்த பெரிய நடவடிக்கையாகும்.

8வது ஊதியக் குழு தொடர்பான முக்கிய தகவல்கள்

- தற்போதுள்ள ஊதியக்குழு: 7வது ஊதியக்குழு
- புதிய ஊதியக்குழுவுக்கான அறிவிப்பு: 8வது ஊதியக்குழு ஜனவரியில் அறிவிக்க்கப்பட்டது.
- அமலுக்கு வரும் ஆண்டு: 2026 இல் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
- சாத்தியமான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம்: ரூ.18,000 லிருந்து ரூ.51,480 ஆக உயர்வு.
- ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: 2.57 இலிருந்து 2.86 ஆக உயர்வு
- பயனாளிகள்: சுமார் 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்.
- தாக்கம்: சம்பளம், ஓய்வூதியம், அகவிலைப்படி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் தாக்கம்.

Fitment Factor: ஃபிட்மென்ட் ஃபாக்டரில் ஏற்படவுள்ள மாற்றம் பெரிய நன்மையை அளிக்கும்

8வது சம்பளக் குழுவின் கீழ் மிகப்பெரிய மாற்றத்தை ஃபிட்மென்ட் ஃபாக்டரில் காணலாம். இது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை நிர்ணயிக்கும் ஒரு குணகம் ஆகும். இந்த முறை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 இலிருந்து 2.86 ஆக அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது. இது செயல்படுத்தப்பட்டால், மிகக் குறைந்த மட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 லிருந்து ரூ.51,480 ஆக உயரும். இந்த மாற்றம் ஊழியர்களின் நிதி நிலையை முற்றிலுமாக மாற்றும்.

Pension Hike: ஓய்வூதிய உயர்வு

ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அதிகரிப்பால் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய நன்மை ஏற்படும். 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், உதாரணமாக, ரூ.50,000 ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியம் சுமார் ரூ.14,3000 ஆக அதிகரிக்கும். அதாவது ஓய்வூதியத்தில் ரூ.93,000 அதிகரிப்ப்பு இருக்கும்.

Dearness Allowance: அகவிலைப்படி அதிகரிக்கும்

8வது ஊதியக் குழு அமல்படுத்தப்படுவதால், சம்பளம் மட்டுமல்ல, அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவையும் அதிகரிக்கப்படும். இது ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நேரடியாகப் பயனளிக்கும். அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். அரசாங்கம் 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படியை மாற்றியமைக்கிறது. ஆனால் புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, அதில் அதிக ஸ்திரத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு விரைவில் விரிவான தகவல்களை வழங்கும்

8வது ஊதியக் குழுவில் நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் பங்கு பற்றிய தகவல்கள் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்குப் பிறகு ஆணையம் செயல்படத் தொடங்கும், மேலும் பல்வேறு வகை ஊழியர்களுக்கு விரிவான அறிக்கை தயாரிக்கப்படும்.

மேலும் படிக்க | இந்தியா–பாகிஸ்தான் போர் பதட்டத்தின் தாக்கமாக தங்கம் விலை அதிரடியாக குறைந்தது!

மேலும் படிக்க | SIP vs NPS: மாதம் ரூ.7000 முதலீட்டை... ரூ.1.1 கோடியாக பெருக்க உதவும் திட்டம் எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News