8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் பற்றிய செய்திகளுக்காக காத்திருக்கிறார்கள். அவர்களது காத்திருப்பு இப்போது முடிவுக்கு வரப்போகிறது. 8வது சம்பள கமிஷனுக்கான குழு ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்படும். இதற்குப் பிறகு இந்த குழு அதன் பரிந்துரைகளை உருவாக்கும் பணிகளை செய்யத் தொடங்கும்.
8வது ஊதியக் குழு: ஜனவரி மாதம் கிடைத்த ஒப்புதல்
ஜனவரி மாதம் 8வது ஊதியக்குழுவை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 7வது சம்பளக் குழுவின் காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடையும். புதிய சம்பளக் குழு ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், குழு அமைக்கப்பட்ட பிறகு, அதன் இறுதி அறிக்கை வர சுமார் 15-18 மாதங்கள் ஆகலாம். குழு தனது பரிந்துரைகளை ஏப்ரல்-மே 2026 க்குள் சமர்ப்பிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அதன் இறுதி அறிக்கை வர இன்னும் சிறிது காலம் எடுக்கும். இந்த காரணங்களால், 8வது ஊதியக்குழு 2027 ஆம் ஆண்டுக்குள், அல்லது ஜனவரி 2027 முதல் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Dearness Allowance Basic Salary Merger: அகவிலைப்படி அடிப்படடை ஊதியத்துடன் இணைக்கப்படுமா?
இதற்கிடையில், புதிய ஊதியக் குழு வரும்போது அகவிலைப்படி அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கப்படுமா என்பது குறித்து மற்றொரு விவாதம் வேகமெடுத்து வருகிறது. புதிய ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீட்டை (டிஏ கணக்கீடு) அரசாங்கம் மாற்றுமா என்ற கேள்வியும் உள்ளது. இதற்காக, அரசு அகவிலைப்படியின் அடிப்படை ஆண்டை மாற்றக்கூடும் என கூறப்படுகின்றது. இதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? இதைப் பற்றி இங்கே புரிந்துகொள்ளலாம்.
Base Year: அடிப்படை ஆண்டு மாற்றப்படலாம்
AICPI-IW தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. முதல் சம்பள கமிஷன் முதல் இப்படித்தான் நடக்கிறது. எதிர்காலத்திலும் இதே போன்ற கணக்கீடுகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்படும்போது, அகவிலைப்படி கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டை அரசாங்கம் மாற்றக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் போது மாற்றப்பட்ட அடிப்படை ஆண்டு
தற்போது, AICPI-IW-க்கான அடிப்படை ஆண்டு 2016 ஆக உள்ளது. இது 2016 ஆம் ஆண்டில் 7வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட போது மாற்றப்பட்டது. 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட பிறகு அரசாங்கம், அடிப்படை ஆண்டை மாற்றக்கூடும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் பணவீக்கத்தை சமாளிக்க அளிக்கப்படும் அகவிலைப்படியின் அடிப்படை ஆண்டையும் அதற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என்பது நிபுணர்களின் வாதமாக உள்ளது. இதன் அடிப்படையில் அகவிலைப்படிக்கான அடிப்படை ஆண்டு 2026 ஆக மாற வாய்ப்பு உள்ளது.
Dearness Allowance Calculation: அகவிலைப்படி கணக்கீடு எவ்வாறு மாறும்?
பணவீக்கத்தை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் பணவீக்கம் வேகமாக அதிகரித்துள்ளது. ஆனால், அடிப்படை ஆண்டு காரணமாக, அகவிலைப்படியை அளவிடுவதற்கான அடிப்படை அப்படியே உள்ளது. அகவிலைப்படி விகிதங்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்படுகின்றன. அரசாங்கம் AICPI-IW-ஐ அடிப்படையாக வைத்திருக்கவும் சாத்தியம் உள்ளது. ஆனால், அரசு அடிப்படை ஆண்டை மாற்றினால், முழு கணக்கீடும் மாறக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், அகவிலைப்படி பூஜ்ஜியமாகிவிடும். மேலும் அகவிலைப்படி புதிதாக 1%, 2% என்று கணக்கிடப்படும்.
பழைய அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா?
8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 -க்குள் அமல்படுத்தப்பட்டால், தற்போதைய நிலவரப்படி, அகவிலைப்படி 58%-61% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது ஊழியர்களின் சம்பளத்தில் செலுத்தப்பட வேண்டும். ஆனால், அடிப்படை ஆண்டு மாறினால் பழைய அகவிலைப்படி இணைக்கப்படலாம். இருப்பினும், அரசாங்கம் இன்னும் இது பற்றி முறையாக எதையும் கூறவில்லை. இவை அனைத்தும் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகுதான் முடிவு செய்யப்படும்.
Zero Dearness Allowance: அகவிலைப்படி எப்போது பூஜ்ஜியமானது?
7வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2016 முதல் அமல்படுத்தப்பட்டன. அந்த நேரத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 125% ஆக இருந்தது. 7வது ஊதியக் குழு இந்த 125% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து புதிய ஊதிய அமைப்பில் சேர்த்தது. அதாவது, புதிய சம்பள மேட்ரிக்ஸில் DA பூஜ்ஜியமாக்கப்பட்டது. மேலும் அகவிலைப்படி புதிய அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது.
Basic Pay Structure: புதிய அடிப்படை ஊதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது
6வது சம்பளக் குழுவின் போது, சம்பள அமைப்பு 'சம்பளக் குழுவிற்குள் ஊதியம்' (Pay in the Pay Band) மற்றும் 'தர ஊதியம்' (Grade Pay) ஆகியவற்றைக் கொண்டிருந்தது. 7வது சம்பளக் குழு இந்த இரண்டையும் இணைத்து ஒருங்கிணைந்த 'அடிப்படை ஊதியத்தை' (Basic Pay) உருவாக்கியது. இந்தப் புதிய அடிப்படை ஊதியத்தில், பழைய அடிப்படை ஊதியம் மற்றும் 125% அகவிலைப்படி சேர்க்கப்பட்டு, அதன் மூலம் ஊழியர்களின் மொத்த சம்பளம் அதிகரித்தது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான பே மேட்ரிக்ஸ் எவ்வாறு மாறியது?
7வது ஊதியக் குழு ஒரு புதிய பே மேட்ரிக்ஸை அறிமுகப்படுத்தியது. அதில் சம்பளம் வெவ்வேறு நிலைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது. இந்த மேட்ரிக்ஸ் அனைத்து கிரேடுகளிலும் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளுக்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்கியது.
8வது ஊதியக்குழுவில், பழைய அடிப்படை ஆண்டை மாற்றி அரசாங்கம் முழு அகவிலைப்படி கணக்கீட்டையும் மாற்றுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் 8வது சம்பளக் குழுவின் குழு என்ன மாதிரியான பரிந்துரைகளை வழங்குகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் வந்த பிறகுதான், ஊதிய அமைப்பில் என்ன மாறும், எவ்வளவு மாறும் என்பது தெளிவாகத் தெரியும்.
மேலும் படிக்க | PPF கணக்கில் இதை செய்ய இனி கட்டணம் இல்லை: நிதி அமைச்சர் அளித்த குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









