)
8th Pay Commission Merger of Pay Scales: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தினம் தினம் இது தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், தற்போதும் ஒரு மிகப்பெரிய அப்டேட் கிடைத்துள்ளது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த முக்கிய செய்தி
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் ஏற்படும் மாற்றம் மட்டுமல்லாமல் இந்த முறை ஊதிய நிலையின் முழு கட்டமைப்பிலும் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் காணலாம். இதற்கான ஒரு பரிந்துரை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது செயல்படுத்தப்பட்டால், நிலை 1 முதல் நிலை 6 வரை ஊழியர்கள் மிகப்பெரிய அளவில் பலனடைவார்கள். இந்த 6 லெவல்களை இணைத்து 3 நிலைகளாக குறைக்க திட்டம் உள்ளது.
Merging of Pay Levels: ஊதிய நிலைகளின் இணைப்பு
ஊதிய நிலைகள் இணைக்கப்பட்டால், அடிப்படை சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படலாம். மேலும், பதவி உயர்வுகளுக்கான வாய்ப்புகளும் இதன் மூலம் விரைவாகும். ஊதிய நிலைகளை இணைப்பது என்றால் என்ன? இது எவ்வாறு நடக்கும்? இதனால் ஊழியர்களின் ஊதிய அமைப்பில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
8வது ஊதியக் குழு எப்போது செயல்படுத்தப்படும்?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 10 வருடங்களுக்கும் ஒரு முறை புதிய ஊதியக் குழுக்கள் அமைக்கபப்டுகின்றன. இதன் மூலம் அவர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றில் திருத்தங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. 8வது ஊதியக்குழு குறித்த அறிவிப்பை மத்திய அரசு ஜனவரி 16, 2025 அன்று வெளியிட்டது. அதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும் சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழு மூலம் நேரடியாகப் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Fitment Factor: ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் முக்கியத்துவம் என்ன?
பொதுவாக ஊதியக்குழுக்கள் ஃபிட்மென்ட் ஃபாக்டர் (அடிப்படை சம்பளத்தை நிர்ணயிக்கும் காரணி) மற்றும் குறைந்தபட்ச ஊதியம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, 7வது சம்பளக் குழுவில், 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூலம் அடிப்படை சம்பளம் ரூ.7,000 இலிருந்து ரூ.18,000 ஆக அதிகரித்தது. 8வது சம்பளக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 - 2.86 என்ற வரம்பில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் அடிப்படையில் சம்பளத்தில் நல்ல அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நிலை-1 ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 இலிருந்து குறைந்தபட்சமாக ரூ.34,560 ஆக அதிகரிக்கக்கூடும். ஆனால் இந்த முறை ஊதிய நிலைகள் இணைக்கப்பட்டு மற்றொரு பெரிய மாற்றமும் வரக்கூடும்.
பரிந்துரைகளின் படி, தற்போதுள்ள ஊதிய மேட்ரிக்ஸின் ஆரம்ப 6 நிலைகளை 3 நிலைகளாகக் குறைக்க முடிவு செய்யப்படலாம். இந்த இணைப்பு இந்த வழியில் நிகழலாம்.
புதிய லெவல் A (முன்மொழியப்பட்டது):
தற்போதுள்ள லெவல் 1 மற்றும் லெவல் 2 ஐ இணைத்து லெவல் A உருவாக்கப்படும்.
புதிய லெவல் B (முன்மொழியப்பட்டது):
தற்போதுள்ள லெவல் 3 மற்றும் லெவல் 4 ஐ இணைத்து லெவல் B உருவாக்கப்படும்.
புதிய லெவல் C (முன்மொழியப்பட்டது):
தற்போதுள்ள லெவல் 5 மற்றும் லெவல் 6 ஐ இணைத்து லெவல் C உருவாக்கப்படும்.
ஊதிய நிலைகளை இணைப்பதால் ஊழியர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?
நிலை இணைப்புக்கான திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், அது பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக தற்போது குறைந்த ஊதிய அளவுகளில் உள்ள ஊழியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
- Salary Hike: அடிப்படை சம்பளத்தில் பெரிய ஏற்றம் ஏற்படும்
இரண்டு நிலைகள் இணைக்கப்படும்போது, புதிய இணைக்கப்பட்ட மட்டத்தின் தொடக்க அடிப்படை ஊதியம் பொதுவாக இரண்டு நிலைகளின் உயர்விற்கு இணையாகவோ அல்லது சற்று அதிகமாகவோ அமைக்கப்படும்.
உதாரணம்: தற்போது, ஒரு லெவல் 1 ஊழியரின் மாத அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகவும், லெவல் 2 ஊழியரின் மாத அடிப்படை சம்பளம் ரூ.19,900 ஆகவும் உள்ளது. லெவல் 1 மற்றும் லெவல் 2 ஐ இணைப்பதன் மூலம் ஒரு 'புதிய லெவல் A' உருவாக்கப்பட்டால், இந்த 'புதிய லெவல் A'வின் ஆரம்ப அடிப்படை சம்பளம் ரூ.19,900 அல்லது அதற்கும் மேல் இருக்கலாம். இதன் பொருள், தற்போதுள்ள லெவல் 1 ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் நல்ல அதிகரிப்பைப் பெறுவார்கள்.
இதேபோல், லெவல் 3 (ரூ21,700) மற்றும் லெவல் 4 (ரூ.25,500) ஆகியவற்றின் இணைப்பால் உருவாக்கப்படும் 'புதிய லெவல் B' -க்கும் அதிக தொடக்க ஊதியம் இருக்கும், இது லெவல் 3 ஊழியர்களுக்கு பயனளிக்கும்.
மேலும் லெவல் 5 (ரூ.29,200) மற்றும் லெவல் 6 (ரூ.35,400) இணைப்பால் உருவாக்கப்படும் 'புதிய லெவல் C'-யில், லெவல் 5 ஊழியர்களின் அடிப்படை ஊதியமும் அதிகரிக்கும்.
- Promotions: விரைவான பதவி உயர்வுகள் மற்றும் சிறந்த வளர்ச்சி
நிலைகளின் எண்ணிக்கை குறைவதால், அடுத்த நிலையை அடைவதற்கான செயல்முறை வேகமாகும். தற்போது, ஒரு ஊழியர் பல சிறிய நிலைகளைக் கடக்க வேண்டும், ஆனால் நிலை இணைப்பிற்குப் பிறகு, நிலைகளின் எண்ணிக்கை குறையும்.
1. பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் நேரம் குறையும்:
இரண்டு நிலைகளுக்கு இடையிலான தூரத்தை ஒரு பதவி உயர்வு மூலம் எட்ட முடியும்.
2. அதிக பொறுப்புகள் மற்றும் உயர் பதவிகள்:
இணைக்கப்பட்ட நிலையில் பணியாளர் அதிக பொறுப்பைப் பெறலாம், இது அவரது கரியர் ப்ரொஃபைலை மேம்படுத்தும்.
3. ஊதிய வளர்ச்சியின் வேகம் துரிதப்படுத்தப்படும்:
ஒவ்வொரு பதவி உயர்விலும் வரும் சம்பள உயர்வு அதிகமாகலாம்.
ஊதிய முரண்பாடுகள் குறையும்
சில நேரங்களில் வெவ்வேறு ஆனால் நெருக்கமான நிலைகளுக்கு இடையே சம்பளத்தில் சிறிய வேறுபாடுகள் இருக்கும். லெவல்கள் இணைக்கப்படுவதால் இந்த முரண்பாடுகளை நீங்கி, மிகவும் தர்க்கரீதியான மற்றும் நெறிப்படுத்தப்பட்ட சம்பள அமைப்பு உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ