8th Pay Commission Latest News: லெவல் 1 முதல் லெவல் 18 வரை உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் 7வது மற்றும் 8வது ஊதியக்குழுவிற்கான சம்பள ஒப்பீடுகளை இந்த பதிவில் காணலாம்.

8th Pay Commission Salary Hike: 8வது சம்பள கமிஷனின் அடுத்த கட்டத்திற்கு மோடி அரசு இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முக்கிய முடிவு சுமார் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் நேரடியாக பயனளிக்கும்.
மத்திய அரசு கமிஷனின் குறிப்பு விதிமுறைகளை (ToR) அங்கீகரித்துள்ளது. அதாவது சம்பள உயர்வு செயல்முறை இப்போது முழுமையாக தொடங்கிவிட்டது. 8வது சம்பள கமிஷனின் கீழ் ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல் எழுத்தர்கள் வரை அனைத்து லெவல் ஊழியர்களுக்கும் சம்பளம் எவ்வளவு உயரும் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கும்.
8வது சம்பள கமிஷன் என்றால் என்ன? 10 வருடங்களுக்கு ஒரு முறை, அரசு ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதிய சலுகைகளை புதுப்பிக்க மத்திய அரசு ஒரு புதிய சம்பள கமிஷனை அமைக்கிறது. 7வது சம்பள கமிஷன் ஜனவரி 2016 இல் செயல்படுத்தப்பட்டது. 10 ஆண்டுகால விதிமுறையை கணக்கிட்டால், 8வது ஊதியக்குழு ஜனவரி 2026 இல் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதன் செயல்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இதன் உண்மையான அமலாக்கத்தில் சற்று தாமதம் ஏற்படலாம். ஆனால், இதன் நன்மைகளுக்கான அரியர் தொகை ஜனவரி 2026 முதல் கிடைக்கும்.
8வது ஊதியக்குழுவின் கணக்கீடுகளுக்கான ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 முதல் 3.0 -க்குள் இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பெரும்பாலான நிபுணர்கள் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.46 -இல் நிர்ணயிக்கப்படும் என கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, 7வது ஊதியக் குழுவுடன் ஒப்பிடும்போது அடிப்படைச் சம்பளம் தோராயமாக 2.46 மடங்கு அதிகரிக்கக்கூடும்.
உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ₹25,000 என்றால், 8வது ஊதியக் குழுவிற்குப் பிறகு அது தோராயமாக ₹61,500 ஆக அதிகரிக்கக்கூடும்.
லெவல் 1 முதல் லெவல் 18 வரை உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் 7வது மற்றும் 8வது ஊதியக்குழுவிற்கான ஒப்பீடுகளை இங்கே காணலாம்.
லெவல் 1 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 18,000, 8வது ஊதியக்குழு- 44,300
லெவல் 2 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 19,900, 8வது ஊதியக்குழு- 49,000
லெவல் 3 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 21,700, 8வது ஊதியக்குழு- 53,500
லெவல் 4 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 25,500, 8வது ஊதியக்குழு- 62,800
லெவல் 5 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 29,200, 8வது ஊதியக்குழு- 71,900
லெவல் 6 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 35,400, 8வது ஊதியக்குழு- 87,100
லெவல் 7 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 44,900, 8வது ஊதியக்குழு- 1,10,600
லெவல் 8 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 47,600, 8வது ஊதியக்குழு- 1,17,200
லெவல் 9 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 53,100, 8வது ஊதியக்குழு- 1,30,400
லெவல் 10 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 56,100, 8வது ஊதியக்குழு- 1,37,800
லெவல் 11 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 67,700, 8வது ஊதியக்குழு- 1,66,500
லெவல் 12 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 78,800, 8வது ஊதியக்குழு- 1,93,700
லெவல் 13 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 1,23,100, 8வது ஊதியக்குழு- 3,02,200
லெவல் 14 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 1,44,200, 8வது ஊதியக்குழு- 3,54,200
லெவல் 15 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 1,82,200, 8வது ஊதியக்குழு- 4,48,700
லெவல் 16 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 2,05,400, 8வது ஊதியக்குழு- 5,05,600
லெவல் 17 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 2,25,000, 8வது ஊதியக்குழு- 5,53,500
லெவல் 18 ஊழியர்கள்: 7வது ஊதியக்குழு- 2,50,000, 8வது ஊதியக்குழு- 6,15,000
குறிப்பு: இந்த மதிப்பீடுகள் 2.46 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரை அடிப்படையாகக் கொண்டவை.
- எழுத்தர்கள், குரூப் டி மற்றும் ஜூனியர் உதவியாளர்களின் சம்பளம் ₹18,000 இலிருந்து ₹44,000 ஆக அதிகரிக்கலாம்.
- செக்ஷன் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர் நிலை ஊழியர்களின் சம்பளம் ₹44,000 லிருந்து ₹1.1 லட்சமாக உயர வாய்ப்புள்ளது.
- ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் உயர் அதிகாரிகளின் (நிலைகள் 13 முதல் 18 வரை) அடிப்படை சம்பளம் ₹3 லட்சத்திலிருந்து ₹6 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவது அரசாங்கத்தின் மீது குறிப்பிடத்தக்க நிதிச் சுமையை ஏற்படுத்தும். 8வது சம்பள கமிஷன் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ₹1.5 லட்சம் கோடிக்கு மேல் கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஊழியர்களின் செலவின சக்தியை அதிகரிப்பதன் மூலம் இது பொருளாதாரத்தையும் அதிகரிக்கும்.
ஆணையம் இந்த குழு அமைக்கப்பட்ட தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் அதன் பரிந்துரைகளை வழங்கும். அதன் பிறகு மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கும். அதாவது 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இது முழுமையாக நடைமுறைக்கு வரக்கூடும். எனினும், ஜனவரி 2026 முதல் புதிய சம்பளம் செயல்படுத்தப்பட்டு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரிய தொகை கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ