8வது ஊதியக்குழு: கிரேட் பே 1800-2800 ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கணக்கீடு

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு கிரேட் பே வாரியாக எவ்வளவு ஊதிய உயர்வு கிடைக்கும்? அலவன்சுகள் எவ்வளவு அதிகரிக்கும்? முழுமையான கணக்கீட்டை இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 15, 2025, 12:41 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான எதிர்பார்ப்புகள் என்ன?
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கணக்கீட்டை இங்கே காணலாம்..
  • ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் கணக்கீடுகள்.
8வது ஊதியக்குழு: கிரேட் பே 1800-2800 ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கணக்கீடு

8th Pay Commission Estimated Salary Hike: 8வது ஊதியக்குழுவின் உருவாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அனைத்து லெவல்களில் உள்ள ஊழியர்களுக்கும் பெரிய அளவில் சம்பள உயர்வு இருக்கும் என நம்பப்படுகின்றது. குரூப் டி அல்லது குரூப் சி, ஜூனியர் அதிகாரி அல்லது உயர் அதிகாரி என அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும், 8வது ஊதியக் குழு குறிப்பிடத்தக்க சம்பள உயர்வைக் கொண்டு வரும்.

Add Zee News as a Preferred Source

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கான எதிர்பார்ப்புகள்

அனைத்து பே கிரேட் அல்லது லெவல்களில் உள்ள ஊழியர்களும் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் பிற முக்கிய கொடுப்பனவுகள் பெரிய அளவில் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறார்கள். சம்பள உயர்வின் அளவு 8வது ஊதியக் கமிஷன் தீர்மானிக்கும் ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பொறுத்தது. இருப்பினும், 8வது சம்பளக் கமிஷன் இன்னும் உருவாக்கப்படாததால், ஊதிய உயர்வு விவரங்கள் பற்றி தெரிய சிறிது நேரம் ஆகலாம். குழு அமைக்கப்பட்ட பிறகு அது தனது அறிக்கையைத் தயாரிக்கும். அதன் பிறகு சம்பளத் திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும். 

Allowances: அலவன்சுகளிலும் ஏற்றம் இருக்கும்

அடிப்படை ஊதியத்துடன், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), போக்குவரத்து கொடுப்பனவு (TA), குழந்தை கல்வி கொடுப்பனவு (CEA) போன்ற ஊழியர்களின் கொடுப்பனவுகளும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன், ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய முறை (NPS) பங்களிப்பும் அவர்களின் திருத்தப்பட்ட அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப அதிகரிக்கும். அவர்களின் மத்திய அரசு சுகாதாரத் திட்ட (CGHS) கட்டணங்களும் திருத்தப்பட வாய்ப்புள்ளது.

Fitment Factor: ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் கணக்கீடுகள்
 
நீங்கள் கிரேடு பே 1800, 1900, 2000, 2400 அல்லது 2800 மத்திய அரசு ஊழியராக இருந்தால், உங்கள் அடிப்படை சம்பளம், HRA மற்றும் TA கொடுப்பனவுகள் எவ்வாறு திருத்தப்படும்? 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் உங்கள் புதிய NPS மற்றும் CHGS பங்களிப்புகள் என்னவாக இருக்கும்? இந்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

7th Pay Commission: 7வது ஊதியக்குழு HRA விகிதங்கள்

HRA ஒரு ஊழியரின் தரவரிசை மற்றும் அவர்கள் பணியமர்த்தப்படும் இடத்தைப் பொறுத்தது. 7வது ஊதியக் குழு HRA விகிதங்கள் அடிப்படை ஊதியத்தில் 8 சதவீதம் (Z வகுப்பு நகரங்களில் உள்ள ஊழியர்களுக்கு), அடிப்படை ஊதியத்தில் 16 சதவீதம் (Y வகுப்பு நகரங்களில் உள்ள ஊழியர்களுக்கு) மற்றும் அடிப்படை ஊதியத்தில் 24 சதவீதம் (X வகுப்பு நகரங்களில் உள்ள ஊழியர்களுக்கு) ஆக இருந்தன. 

கடந்த ஆண்டு HRA 50 சதவீதத்தை எட்டியபோது, HRA விகிதங்கள் முறையே 10 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 30 சதவீதமாக திருத்தப்பட்டன.

மத்திய அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு (TA)

ஒரு ஊழியர் அலுவலகத்திலிருந்து பணியிடத்திற்குச் செல்ல போக்குவரத்து கொடுப்பனவு (TA) அளிக்கப்படுகின்றது. 
இது ஒரு ஊழியரின் தரவரிசை மற்றும் அவர்கள் பயணிக்கும் இடத்தின் அடிப்படையிலும் வழங்கப்படுகிறது. நிலை 1-18 ஊழியர்களுக்கு TA ரூ.900 முதல் ரூ.7,200 வரை இருக்கும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான NPS பங்களிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 10 சதவீதத்தை தங்கள் NPS கணக்கில் செலுத்துகிறார்கள். அரசாங்கம் இதில் 14 சதவீதத்தை பங்களிக்கிறது. சம்பள ஆணையத்தில் சம்பளம் திருத்தப்பட்டவுடன், NPS பங்களிப்பும் திருத்தப்பட்ட ஊதிய விகிதத்திற்கு அதிகரிக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான CGHS கட்டணங்கள்

மத்திய அரசிடம் இந்தியா முழுவதும் பல CGHS மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. அங்கு மத்திய அரசு ஊழியர்கள் தாங்களாகவே சிகிச்சை பெறலாம். CGHS குழுவில் உள்ள மருத்துவமனைகளிலும் அவர்கள் சிகிச்சை பெறலாம். அரசாங்கம் இந்த ஊழியர்களிடமிருந்து ரூ.250-ரூ.1,000 வரம்பில் CGHS கட்டணங்களை வசூலிக்கிறது.

Salary Hike Calculation: ஊதிய உயர்வு கணக்கீடு

8வது ஊதியக்குழுவில், 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரில், கிரேடு பே 1800 (லெவல் 1, அடிப்படை ஊதியம் ரூ. 20,900 மற்றும் ரூ. 24,900), கிரேடு பே 1900 (லெவல் 2, அடிப்படை ஊதியம் ரூ. 23,100 மற்றும் ரூ. 28,400), கிரேடு பே 2000 (லெவல் 3, ரூ. 29,300 மற்றும் ரூ. 32,000), கிரேடு பே 2400 (லெவல் 4, அடிப்படை ஊதியம் ரூ. 32,300 மற்றும் ரூ. 36,400), மற்றும் கிரேடு பே 2800 (லெவல் 5, அடிப்படை ஊதியம் ரூ. 38,100 மற்றும் ரூ. 42,800) ஊழியர்களுக்கான மதிப்பிடப்பட்ட திருத்தப்பட்ட சம்பளம், HRA, TA, NHS மற்றும் CGHS தொகைகளை இந்த பதிவில் கணக்கிடலாம். இந்த கணக்கீட்டிற்கு, 24 சதவீத HRA மற்றும் ஹையர் TPTA நகரங்களின் TA ஐ எடுத்துக்கொள்ளலாம். 

GP 1800 (Level 1, basic Rs 20,900):GP 1800 -க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (நிலை 1, அடிப்படை ரூ. 20,900) 

 

திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ரூ.53,713
HRA ரூ.12,891.12
TA ரூ.1,350
மொத்த சம்பளம் ரூ.67,954.12
NPS ரூ.5,371.30
CGHS ரூ.250
நிகர சம்பளம் ரூ.62,332.82

GP 1800 (Level 1, basic Rs 24,900): GP 1800 -க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (நிலை 1, அடிப்படை ரூ. 24,900) 

திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ₹ 63,993
HRA ₹ 15,358.32
TA ₹ 3,600
மொத்த சம்பளம் ₹ 82,951.32
NPS ₹ 6,399.30
CGHS - ₹ 250
நிகர சம்பளம் ₹ 76,302.02

GP 1900 (Level 2, basic Rs 23,100): GP 1900 -க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (நிலை 2, அடிப்படை ரூ.23,100) 

திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ₹ 59,367
HRA ₹ 14,248.08
TA ₹ 3,600
மொத்த சம்பளம் ₹ 77,215.08
NPS ₹ 5,936.70
CGHS ₹ 250
நிகர சம்பளம் ₹ 71,028.38
 

GP 1900 (Level 2, basic Rs 28,400): GP 1900 -க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (நிலை 12 அடிப்படை ரூ. 28,400) 

திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ₹ 72,988
HRA ₹ 17,517.12
TA ₹ 3,600
மொத்த சம்பளம் ₹ 94,105.12
NPS ₹ 7,298.80
CGHS ₹ 250
நிகர சம்பளம் ₹ 86,556.32
 

GP 2000 (Level 3, basic Rs 29,300): GP 2000 -க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (நிலை 3, அடிப்படை ரூ. 29,300) 

திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ₹ 75,301
HRA ₹ 18,072.24
TA ₹ 3,600
மொத்த சம்பளம் ₹ 96,973.24
NPS ₹ 7,530.10
CGHS ₹ 250
நிகர சம்பளம் ₹ 89,193.14
 

GP 2000 (Level 3, basic Rs 32,000: GP 2000 -க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (நிலை 3, அடிப்படை ரூ. 32,000) 

திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ₹ 82,240
HRA ₹ 19,737.60
TA ₹ 3,600
மொத்த சம்பளம் ₹ 1,05,577.60
NPS ₹ 8,224.00
CGHS ₹ 250
நிகர சம்பளம் ₹ 97,103.60
 

GP 2400 (Level 4, basic Rs 32,300): GP 2400-க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (நிலை 4, அடிப்படை ரூ. 32,300) 

திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ₹ 83,011
HRA ₹ 19,922.64
TA ₹ 3,600
மொத்த சம்பளம் ₹ 1,06,533.64
NPS ₹ 8,301.10
CGHS ₹ 250
நிகர சம்பளம் ₹ 97,982.54
 

GP 2400 (Level 4, basic Rs 36,400): GP 2400-க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (நிலை 4, அடிப்படை ரூ. 36,400

திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ₹ 93,548
HRA ₹ 22,451.52
TA ₹ 3,600
மொத்த சம்பளம் ₹ 1,19,599.52
NPS ₹ 9,354.80
CGHS ₹ 250
நிகர சம்பளம் ₹ 1,09,994.72
 

GP 2800 (Level 5, basic Rs 38,100): GP 2800-க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (நிலை 5, அடிப்படை ரூ. 38,100​) 

திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ₹ 97,917
HRA ₹ 23,500.08
TA ₹ 3,600
மொத்த சம்பளம் ₹ 1,25,017.08
NPS ₹ 9,791.70
CGHS ₹ 250
நிகர சம்பளம் ₹ 1,14,975.38
 

GP 2800 (Level 5, basic Rs 42,800): GP 00-க்கான திருத்தப்பட்ட ஊதியம், கொடுப்பனவுகள் (நிலை 5, அடிப்படை ரூ. 42,800

திருத்தப்பட்ட அடிப்படை ஊதியம் ₹ 97,917
HRA ₹ 23,500.08
TA ₹ 3,600
மொத்த சம்பளம் ₹ 1,25,017.08
NPS ₹ 9,791.70
CGHS ₹ 250
நிகர சம்பளம் ₹ 1,14,975.38
 

மேலும் படிக்க | PM Kisan 20வது தவணை எப்போது வருகிறது? மத்திய அரசு கொடுத்த முக்கிய அப்டேட்

மேலும் படிக்க | ரூ.3,000 மாத ஓய்வூதியம்: மூத்த குடிமக்களுக்கான பெஸ்ட் ஓய்வூதியத் திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News