)
8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பல மாதங்களாக 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக காத்திருக்கிறார்கள். ஜனவரி மாதம் இதற்கான அறிவிப்பு வந்தது. ஆனால், அதன் பிறகு புதிய ஊதியக்குழுவின் அப்டேட்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பது குறித்து பல ஊகங்கள் நாளுக்கு நாள் வந்த வண்ணம் உள்ளன. இது புதிய அடிப்படை ஊதியத்தை தீர்மானிக்கும் காரணியான ஃபிட்மெண்ட் ஃபாக்டரை சார்ந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இதற்கான கணக்கீடு என்ன? இது எந்தெந்த காரணிகளை சார்ந்திருக்கும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கணக்கீடுகளை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு மத்திய அரசு ஊழியரின் ஊதியம் ரூ.50,000 என வைத்துக்கொள்வோம். 8வது ஊதியக்குழுவில் இவருக்கான ஊதிய உயர்வு கணக்கீட்டை இங்கே காணலாம்.
எந்த ஒரு ஊதியக்குழுவின் ஊதிய கட்டமைப்பிலும் ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ஏனெனில், பழைய அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் கணக்கிடப்படுகின்றது.
- 7வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- 8வது ஊதியக் குழுவில் (மதிப்பிடப்பட்டுள்ளது): இன்னும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் பற்றிய எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் கடந்த கால போக்குகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில், இது சுமார் 1.92 மடங்காக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
- ஆகையால், 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டரை அடிப்படையாகக் கொண்டு இந்த உதாரணத்திற்கான முழு கணக்கீட்டை செய்யலாம்.
- இன்று 50-55 ஆயிரம் ரூபாய்க்கு இடையில் மொத்த சம்பளம் வாங்க்கும் ஊழியர்கள், 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊதிய நிலை 5 இன் கீழ் வருகிறார்கள்.
- இவர்களின் தற்போதைய அடிப்படை ஊதியம் ரூ.29,200 ஆகும்.
8வது ஊதியக் குழுவில், இந்த ஊழியர்களின் சம்பளத்தில் எவ்வளவு பெரிய மாற்றம் வரும் என்பதை இங்கே காணலாம்.
| சம்பளத்தின் பகுதி | 7வது ஊதியக்குழு | 8வது ஊதியக்குழு (மதிப்பீடு) |
| பே லெவல் | லெவல் 5 | லெவல் 5 |
| அடிப்படை ஊதியம் | ₹29,200 | ₹56,064 (₹29,200 x 1.92) |
| அகவிலைப்படி (DA) | ₹14,600 (50% என மதிப்பிடப்பட்டுள்ளது) | ₹0 (அடிப்படையில் இணைக்கப்படும்) |
| வீட்டு வாடகை படி (HRA) | ₹7,884 (X-நகரம் @27%) | ₹16,819 (புதிய அடிப்படைப் படியில் X-நகரம் @30%) |
| பயணப் படி (TA) | ₹2,700 (₹1800 + DA) | ₹2,500 (மதிப்பிடப்பட்ட திருத்தப்பட்ட விகிதம்) |
| மொத்த சம்பளம் | ₹54,384 மாதத்திற்கு | ₹75,383 மாதத்திற்கு |
(துறப்பு: இந்தக் கணக்கீடு முழுமையாக அனுமானிக்கப்பட்ட ஒரு மதிப்பீடு ஆகும். சம்பளக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு HRA மற்றும் TA விகிதங்கள் மாறக்கூடும்.)
அட்டவணையில் உள்ளதைப் போல, இன்று ஒரு ஊழியரின் மொத்த சம்பளம் ரூ.54,384 ஆக இருந்தால், 8வது ஊதியக்குழுவிற்குப் பிறகு, அவரது மொத்த சம்பளம் ரூ.75,383 ஆக அதிகரிக்கலாம். இது மாதத்திற்கு சுமார் ரூ.21,000 நேரடி அதிகரிப்பாகும்.
ஆம்! பொதுவாக புதிய ஊதியக்குழு செயல்படுத்தப்பட்டவுடன், அகவிலைப்படி (DA) பூஜ்ஜியமாக்கபட்டு, அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுகிறது. பின்னர் அகவிலைப்படி கணக்கீடு 1%, 2%, 3% என தொடங்குகிறது.
8வது ஊதியக்குழுவால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியமும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் அதிகரிப்பது மட்டுமல்லாமல் அவர்களின் நிதி நிலையும் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ.50,000 - ரூ.55,000 சம்பாதிக்கும் ஒரு ஊழியரின் சம்பளத்தில் ரூ.20,000 க்கும் அதிகமான உயர்வு அவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய நேர்மறையான திருப்பத்தைக் கொண்டுவரும் என்பதைக் காட்டுகிறது. இது அவர்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்கான திட்டமிடலையும் சாத்தியமாக்கும். இப்போது ஊழியர்கள் அரசாங்கத்தின் அடுத்த கட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். இது விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
8வது ஊதியக்குழு சமீபத்திய அப்டேட்ஸ் சுருக்கமாக.....
- பொதுவாக 10 வருடங்களுக்கு ஒரு முறை, புதிய ஊதியக்குழு அமைக்கப்படுகின்றது. ஆகையால், 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மீது அனைவரின் கவனமும் உள்ளது. புதிய ஊதியக் குழுவில் புதிய அடிப்படை ஊதியத்தை தீர்மானிக்க தற்போதுள்ள அடிப்படை ஊதியம் இதனுடன் பெருக்கப்படுகிறது.
- ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் போதெல்லாம், அது அனைத்து மத்திய ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.
- வழக்கமாக, புதிய ஊதியக் குழுவில் HRA விகிதங்களும் திருத்தப்படுகின்றன, அவை நகர வகையின் அடிப்படையில் (X, Y, Z) தீர்மானிக்கப்படுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ