)
8th Pay Commission Salary Hike: 2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது. புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்கப்போகும் செய்திகள் என்ன? 8வது ஊதியக்குழுவில் ஊழியர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்? சம்பளமும், ஓய்வூதியமும் எவ்வளவு அதிகரிக்கும்? 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் ஊழியர்களின் நிதி சிக்கல்களுக்கு நிவராணம் அளிக்குமா? இவை அனைத்தை பற்றியும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் முக்கியமான ஆண்டாக இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம், மத்திய அரசு 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு ஆண்டின் இறுதியில், சில நாட்களுக்கு முன் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனம் நடந்தது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், 8வது ஊதியக்குழுவின் அறிவிப்பு லட்சக்கணக்கான மக்களை உற்சாகப்படுத்தியது.
அகவிலைப்படி இணைப்பு, ஃபிட்மென்ட் ஃபாக்டரில் மாற்றம், சுமார் 25-34% சம்பள உயர்வு என 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்கு பிறகு பல நன்மைகள் காத்திருக்கின்றன. தோராயமாக 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதுயதாரர்களும் இதனால் பயனடைவார்கள், புதிய ஊதியக்குழுவின் அமைப்பு மத்திய அரசுக்கு ₹1.8 லட்சம் கோடி சுமையை ஏற்படுத்தும்.
அகவிலைப்படி 50% -ஐ எட்டும்பொது அது பொதுவாக அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுகின்றது. தற்போது அகவிலைப்படி 58% -இல் உள்ளது. இப்போது புதிய ஊதியக்குழுவும் அமலுக்கு வரவுள்ளதால், 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும்போது அப்போதுள்ள அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கபடும் என நம்பப்படுகின்றது. அதன் பிறகு அகவிலைப்படி கணக்கீடு மீணும் 0% -இலிருந்து தொடங்கும். இது மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும்.
7வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது குறைந்தபட்ச சம்பளத்தை ₹18,000 ஆக மாற்றியது. 8வது ஊதியக்குழுவில் இது 1.8 முதல் 3.0 -க்குள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இதன் விளைவாக சம்பளம் 14-54% வரை ஏற்றம் காணலாம்.
8வது ஊதியக் குழுவில், அகவிலைப்படி இணைப்பு காரணமாக அடிப்படை ஊதியம் அதிகரிக்கும். புதிய ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் கூடுதல் அதிகரிப்பு இருக்கும். மொத்தத்தில் சம்பளத்தில் 25-34% அதிகரிப்பு இருக்கலாம் என்றும், குறைந்தபட்ச சம்பளம் ₹26,000-₹27,000 ஆக உயரலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படி நிவாரணம் இணைப்பாலும், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மாற்றத்தாலும் பயனடைவார்கள்.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி சில உதாரணங்கள் மூலம் புரிந்துகொள்ளலாம். லெவல் 1 ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு கணக்கீட்டை இங்கே காணலாம்:
லெவல் 1 ஊழியர்கள்: அடிப்படை ஊதியம் - ₹18,000
தற்போதைய (2025) நிலை:
அடிப்படை ஊதியம் = ₹18,000 + DA 58% (₹10,440) = ₹28,440.
HRA 30% (₹5,400),
TA ₹1,350
மொத்த சம்பளம் = ₹35,190.
NPS கழிக்கப்பட்ட பிறகு தோராயமாக ₹32,000 சம்பளம் கிடைக்கும்
8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்கு பிறகு
ஃபிட்மென்ட் ஃபாக்டர் - 3.0 (மதிப்பிடப்பட்டுள்ளது)
அடிப்படை ஊதியம் = (₹18,000 + DA இணைக்கப்பட்டது) x 3.0 = ₹54,000.
புதிய அகவிலைப்படி = 0% இல் தொடங்கும்
HRA = 30% (₹16,200),
TA = ₹1,800
மொத்த சம்பளம் = ₹72,000.
நிகர சம்பளம் = தோராயமாக ₹65,000 (சுமார் 30% உயர்வு).
8வது CPC மதிப்பிடப்பட்ட அடிப்படை (2026) உயர்வு (%) 1 நிலை-1 ₹18,000 ₹26,000-₹27,000 44-50% 2 நிலை-5 ₹29,200 ₹45,000-₹50,000 30-34% 3 நிலை-10 ₹56,100 ₹90,000-₹1,00,000 25-30%
8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதிய உயர்வு இருக்கும். அவர்களுக்கும் 25-30% வரை அதிகரிப்பு இருக்கும் என எதிர்க்கப்படுகின்றது. இது தவிர கம்யுடேஷன் பென்ஷன், பழைய ஓய்வூதியத் திட்டம், கூடுதல் ஓய்வூதியம் போன்று இன்னும் சில கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ