8வது ஊதியக்குழு: கிரேட் பே 1900-8900 அரசு ஊழியர்களுக்கு அசர வைக்கும் சம்பள உயர்வு, விவரம் இதோ

8th Pay Commission Latest News: பல்வேறு கிரேட் பே ஊழியர்களுக்கு, 1.92 மற்றும் 2.57 ஆகிய 2 ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களில் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 12, 2025, 02:30 PM IST
  • காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்.
  • ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மீது முக்கிய கவனம்.
  • சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?
8வது ஊதியக்குழு: கிரேட் பே 1900-8900 அரசு ஊழியர்களுக்கு அசர வைக்கும் சம்பள உயர்வு, விவரம் இதோ

8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தவுடன் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? வேறு என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? பல்வேறு கிரேட் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மதிப்பீடுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

Central Government Employees: காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்

மொத்தம் 50.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் மற்றும் சம்பள உயர்வு பற்றிய அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான ஆணையம், ஊதிய உயர்வு பரிந்துரைகளை பரிசீலிக்க தேவையான பணிகளை துவங்கி முழு முனைப்புடன் செய்து வருகிறது. புதிய ஊதியக் குழு, அடிப்படை ஊதிய அமைப்பு, கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியத் திருத்தங்கள், ஓய்வூதியப் பலன்கள் மற்றும் சேவை நிலைமைகள் குறித்த தனது பரிந்துரைகளை 18 மாத காலக்கெடுவுடன் சமர்ப்பிக்கும்.

Terms of Reference: பரிந்துரை விதிமுறைகள்

8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை இந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு வெளியிட்டது. அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் நீண்ட தாமதம் இருந்தது. 8வது மத்திய ஊதியக் குழுவிற்கான விதிமுறைகள் (ToR) அக்டோபர் 28, 2025 அன்று அறிவிக்கப்பட்டதால், குழு தனது அறிக்கையை 18 மாதங்களுக்குள், அதாவது ஏப்ரல் 2027 க்குள் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, அரசாங்கம் பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்து செயல்படுத்த வழக்கமாக சுமார் 6 மாதங்கள் எடுக்கும். அதாவது, திருத்தப்பட்ட ஊதிய அமைப்பு 2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது 2028 ஆம் ஆண்டின் முற்பகுதியிலோ நடைமுறைக்கு வரலாம்.

Fitment Factor: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மீது முக்கிய கவனம்

சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வை கணக்கிடுவதில் ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கு முக்கிய பங்கு உள்ளது. கமிஷனின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை அங்கீகரித்த பிறகு ஃபிட்மென்ட் ஃபாக்டர் உறுதிப்படுத்தப்படும். புதிய அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை தீர்மானிக்கும் பெருக்கியாக இது செயல்படுகிறது. பழைய அடிப்படை ஊதியத்துடன் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது. 8வது ஊதியக் குழுவிற்கான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.86 முதல் 2.57 வரை இருக்கலாம் என்று பல ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Salary Hike: சம்பள உயர்வு மதிப்பீடுகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்க்குழுவின் அமலாக்கத்திற்கு பிறகு சம்பள உயர்வு எவ்வளவு கிடைக்கும்? சில உதாரணங்கள் மூலம் இதை புரிந்துகொள்லலாம். 

தேர்ந்தெடுக்கப்பட்ட கிரேட் பே ஊழியர்களுக்கு (1900, 2400, 4600, 7600, 8900) வெவ்வேறு ஃபிட்மென்ட் ஃபாக்டர்களில் (1.92 மற்றும் 2.57) திருத்தப்பட்ட சம்பளம் எவ்வளவு இருக்கும் என இங்கே காணலாம். வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), போக்குவரத்து கொடுப்பனவு (TA), தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கழிப்புகள் மற்றும் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்துக்கான (CGHS) கழிப்புகள் போன்ற கொடுப்பனவுகளும் இதில் அடங்கும்.

இந்த கணக்கீடுகளுக்காக

- அடிப்படை சம்பளத்தில் 24 சதவீதமாக HRA எடுத்துக் கொள்ளப்படுகிறது (எக்ஸ்-வகுப்பு நகரங்களுக்கு), 
- TA அளவைப் பொறுத்து ரூ.3,600 முதல் ரூ.7,200 வரை மாறுபடும், 
- NPS அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதமாகும், 
- CGHS தற்போதைய விகிதங்களில் வைக்கப்படுகிறது 

என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Grade Pay 1900: கிரேடு பே 1900 ஊழியர்களுக்கான சம்பள உயர்வு

1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டரில்:

அடிப்படை சம்பளம்: ரூ. 54,528
HRA: ரூ. 13,086
TA: ரூ. 3,600

மொத்தம்: ரூ. 71,215

NPS: ரூ. 5,453
CGHS: ரூ. 250

நிகரம்: ரூ. 65,512

2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரில்:

அடிப்படை ஊதியம்: ரூ. 72,988

HRA: ரூ. 17,517

மொத்தம்: ரூ. 94,105

NPS: ரூ. 7,299

நிகரம்: ரூ. 86,556

Grade Pay 2400: கிரேடு பே 2400 ஊழியர்களுக்கான சம்பள உயர்வு

1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டரில்:

அடிப்படை சம்பளம்: ரூ. 73,152

நிகரம்: ரூ.86,743

2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரில்: 
அடிப்படை சம்பளம்: ரூ.97,917
நிகரம்: ரூ.1,14,975

Grade Pay 4600: கிரேடு பே 4600 ஊழியர்களுக்கான சம்பள உயர்வு

1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டரில்:
அடிப்படை: ரூ.1,12,512
நிகரம்: ரூ.1,31,213

2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரில்:
அடிப்படை: ரூ.1,50,602
நிகரம்: ரூ.1,74,636

Grade Pay 7600: கிரேடு பே 7600 ஊழியர்களுக்கான சம்பள உயர்வு

1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டரில்:
அடிப்படை: ரூ.1,53,984 
நிகரம்: ரூ.1,82,092

2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரில்:
அடிப்படை: ரூ.2,06,114
நிகரம்: ரூ.2,41,519

Grade Pay 8900: கிரேடு பே 8900 ஊழியர்களுக்கான சம்பள உயர்வு

1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டரில்:
அடிப்படை: ரூ. 1,85,472
 நிகரம்: ரூ. 2,17,988

2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரில்:
அடிப்படை: ரூ. 2,48,262
நிகரம்: ரூ. 2,89,569

(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.)

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு டைம்லைன், சம்பள உயர்வு, ஓய்வூதியதாரர்கள்: நாடாளுமன்றத்தில் முக்கிய அப்டேட்ஸ்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி? குறிப்பு காட்டிய அமைச்சர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News