8வது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு குட் நியுஸ்!! HRA கணக்கீட்டில் மாற்றம்?

8th Pay Commission: 8வது சம்பளக் குழுவில் HRA விகிதங்களில் மாற்றம் இருக்குமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 21, 2025, 09:03 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA விகிதங்கள் ஏன் திருத்தப்படுகின்றன?
  • 8வது சம்பளக் குழுவில் HRA விகிதம் மாறுமா?
  • புதிய கணக்கீட்டின் மூலம் HRA தொகை அதிகரிக்கும்.
8வது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு குட் நியுஸ்!! HRA கணக்கீட்டில் மாற்றம்?

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி. 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, அவர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும். 8வது சம்பளக் குழு பற்றிய விவாதம் இப்போது தீவிரமடைந்துள்ளது. 

பொதுவாக புதிய ஊதியக்குழுக்கள் சம்பள அமைப்பை மாற்றுவது மட்டுமல்லாமல், அகவிலைப்படி (DA), ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் மிக முக்கியமாக HRA அதாவது வீட்டு வாடகை கொடுப்பனவு ஆகியவற்றின் விகிதங்களிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 8வது சம்பளக் குழுவில் HRA விகிதங்களில் மாற்றம் இருக்குமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

வீட்டு வடகை கொடுப்பனவு: HRA விகிதங்கள் எவ்வாறு மாறுகின்றன?

வீட்டு வாடகைப்படி எனப்படும் வீட்டு வாடகை கொடுப்பனவு விகிதங்கள் ஒவ்வொரு ஊதியக் கமிஷனிலும் திருத்தப்பட்டுள்ளன. 

- 6வது சம்பளக் குழுவின் HRA விகிதங்கள் 30% (X நகரம்), 20% (Y நகரம்), 10% (Z நகரம்) ஆக இருந்தன. 
- இவை 7வது ஊதியக் குழுவால் திருத்தப்பட்டு, 24%, 16%, 8% என விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன. 
- ஆனால் அகவிலைப்படி 50% ஐ எட்டியவுடன், HRA மீண்டும் 30%, 20% மற்றும் 10% ஆக அதிகரிக்கப்பட்டது. 
- இதன் பொருள் HRA விகிதங்கள் நேரடியாக அகவிலைப்படி மற்றும் அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 

ஆகையால், 8வது ஊதியக் குழு செயல்படுத்தப்படும்போது, ​​அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி கட்டமைப்பின்படி HRA விகிதங்களை அரசாங்கம் மீண்டும் மதிப்பாய்வு செய்யும்.

House Rent Allowance: புதிய கணக்கீட்டின் மூலம் HRA தொகை அதிகரிக்கும்

8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறைந்தபட்சமாக 1.92 ஆக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. அதாவது, ஊழியரின் தற்போதைய அடிப்படை சம்பளத்தை 1.92 ஆல் பெருக்கி புதிய அடிப்படை அடிப்படை சம்பளம் தீர்மானிக்கப்படும். 

உதாரணமாக, தற்போதைய அடிப்படை சம்பளம் ரூ.30,000 என்றால், புதிய அடிப்படை சம்பளம் ரூ.30,000 × 1.92 = ரூ.57,600 ஆக இருக்கும். அதன் பிறகு, புதிய அடிப்படை ஊதியத்தில் HRA கணக்கீடு செய்யப்படும். இதன் காரணமாக HRA தொகையும் அதிகரிக்கும்.

Central Govermnment Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA விகிதங்கள் ஏன் திருத்தப்படுகின்றன?

1. பணவீக்கம் மற்றும் வாடகை தொகையில் எற்படும் அதிகரிப்பு

பணவீக்கத்துடன் கட்டணங்களும் அதிகரிக்கின்றன. இதை சமநிலைப்படுத்த, அரசாங்கம் HRA-வை அதிகரிக்கிறது.

2. அடிப்படை ஊதிய அமைப்பில் மாற்றம்

சம்பள ஆணையத்திற்குப் பிறகு அடிப்படை ஊதிய அமைப்பு மாறுகிறது. பழைய HRA விகிதங்கள் புதிய அடிப்படைக்கு பொருந்துவதில்லை. ஆகையால் அவையும் திருத்தப்பட வேண்டும்.

3. நகரங்களின் வகை மாற்றம்

அரசாங்கம் அவ்வப்போது X, Y மற்றும் Z நகரங்களின் பட்டியலைப் புதுப்பிக்கிறது. இது HRA ஐப் பாதிக்கிறது. ஒரு நகரத்தின் வகை மாறினால், அங்குள்ள ஊழியர்களின் HRA நேரடியாகப் பாதிக்கப்படும்.

8வது சம்பளக் குழுவில் HRA விகிதம் மாறுமா?

புதிய ஊதியக் குழுவில் HRA விகிதங்களில் மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் HRA விகிதங்கள் திருத்தப்படுகின்றன. தற்போது HRA 30%, 20% மற்றும் 10% ஆக உள்ளது. இது திருத்தப்படலாம் என்றும் அகவிலைப்படியுடன் இணைக்கப்படும் என்றும் பேச்சு உள்ளது. இது ஊழியர்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், 25 சதவீதம் மற்றும் 50 சதவீதத்தை எட்டும்போது அகவிலைப்படியை திருத்துவதற்கான ஏற்பாடும் இருக்கும்.

மேலும் படிக்க | SBI Mutual Fund: ரூ.1 லட்சம் முதலீடு... ரூ.1.26 கோடியாக பெருகிய அதிசயம்... வரி விலக்கும் உண்டு

மேலும் படிக்க | EPF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: அதிகரிக்கும் மாத ஓய்வூதியம்...நாடாளுமன்ற குழு பரிந்துரை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News