8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதற்கு முக்கிய காரணமாக அமையலாம்.

8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து பல முக்கிய அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. 8வது உதியக்குழுவிற்கான பணிகள் சூடுபிடித்துள்ளதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஊதியக் கட்டமைப்புக் குறித்த தங்கள் கோரிக்கைகளை, ஊழியர் சங்கங்கள் 8வது மத்திய ஊதியக் குழுவிடம் இந்த வார தொடக்கத்தில் சமர்ப்பித்துள்ளன.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அமைக்கப்பட்ட புதிய ஊதிய ஆணையம், தற்போது ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியங்களில் எத்தகைய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை அரசுக்கு வழங்கவுள்ளது. அதை அரசு ஆய்வு செய்து பின் அதற்கு ஒப்புதல் அளிக்கும்.
ஊதிய உயர்வுகள் உட்பட அனைத்து பரிந்துரைகளுக்கும் அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2027 ஆம் ஆண்டு இறுதியில், அல்லது 2028 ஆம் ஆண்டு தொடக்கத்தில் புதிய ஊதியக்குழு முழுமையாக அமலுக்கு வரும் என கூறப்படுகிறது, எனினும், 10 ஆண்டு விதிப்படி இதன் அமலாக்கம் ஜனவரி 1, 2026 முதல் இருக்கக்கூடும். இதன் பொருள் என்னவென்றால், ஜனவரி 2026 முதல், இறுதி முடிவு எடுக்கப்படும் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்திற்குரிய அரியர் தொகை (8th Pay Commission Arrears) ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடும். எனினும் அமலாக்கம் பற்றி மத்திய அரசு இன்னும் தெளிவாக எதையும் கூறவில்லை.
- அடிப்படை ஊதியம்
- பே மேட்ரிக்ஸ் / ஊதியக் கட்டமைப்பில் மாற்றம்
- படிகள் மற்றும் ஓய்வூதியக் கணக்கீட்டு முறையின் மறுசீரமைப்பு
- அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), போக்குவரத்துப்படி, ஓய்வூதியம் என இவை அனைத்தும் மாற்றியமைக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகின்றன.
புதிய அடிப்படை ஊதியத்தை தீர்மானிப்பதில் இதற்கு அதிக பங்குள்ளது. தற்போதைய அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை அமைப்பான 'தேசிய கவுன்சில் - கூட்டு ஆலோசனை அமைப்பு' (NC-JCM), 3.83 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டரை முன்மொழிந்து தனது பரிந்துரையைச் சமர்ப்பித்துள்ளது. எனினும், இதுவே இறுதி முடிவு அல்ல. இது ஒரு கோரிக்கை மட்டுமே. உண்மையான எண்ணை (காரணியை) அரசே முடிவு செய்யும்.
ஊழியர் பிரதிநிதிகள் முன்வைக்கும் காரணங்கள் (தர்க்கம்) பின்வருமாறு:
- 2016-ஆம் ஆண்டிலிருந்து பணவீக்கம் காரணமாக மக்களின் உண்மையான வருமானம் குறைந்துள்ளது.
- வீட்டு வசதி, கல்வி மற்றும் சுகாதாரச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
- அகவிலைப்படி (DA) 50 சதவீதத்தைத் தாண்டியிருப்பது, வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைச் சுட்டிக்காட்டுகிறது.
- தற்போதைய ஊதியம் 2016-ஆம் ஆண்டின் அளவுகோல்களைப் பிரதிபலிப்பதாக இல்லாமல், தற்போதைய வாழ்க்கைத்தரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
இந்த காரணங்களின் அடிப்படையில், ஊழியர் சங்கங்களின் கணக்கீட்டு முறையின்படி, குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000-லிருந்து ரூ.69,000-ஆக உயர்கிறது. இதை அரசு ஏற்றுக்கொள்கிறதா என்பது வேறு விஷயம். ஆனால், ஊழியர் சங்கங்கள் இந்த அடிப்படை ஊதியத்திற்கான வலுவான பரிந்துரையை அளித்துள்ளன.
8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதும், ஊதியம் பின்வருமாறு கணக்கிடப்படும்:
பழைய அடிப்படை ஊதியம் X ஃபிட்மெண்ட் ஃபாக்டர் = புதிய அடிப்படை ஊதியம்.
அதன் பின்னர், இதனுடன் பின்வருவனவற்றைச் சேர்க்க வேண்டும்:
அகவிலைப்படி (DA)
வீட்டு வாடகைப்படி (HRA)
போக்குவரத்துப்படி (TA)
இந்த வகையில், ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட, ஊழியர்களின் கையில் கிடைக்கும் நிகர ஊதியத்தில் (take-home pay) ஒரு பெரிய உயர்வை ஏற்படுத்துகிறது.
அகவிலைப்படி தற்போது அடிப்படை ஊதியத்தில் கிட்டத்தட்ட 60 சதவீதமாக உள்ளது. கடந்த கால ஆணையங்களின் திருத்தத்திற்கு முன்பு, அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் அதுபோல நடந்தால், புதிய அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படியின் தாக்கம் ஏற்கனவே சேர்க்கப்பட்டிருக்கும். புதிய அகவிலைப்படி சுழற்சி பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும்.
ஆம், ஆணையத்தின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026-க்குப் பிறகு செயல்படுத்தப்பட்டால் அரியர் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக, 2027-இன் பிற்பகுதியில் இது நடைமுறைப்படுத்தப்பட்டால், ஊழியர்கள் 18-24 மாத நிலுவை ஊதியத்தைப் பெறக்கூடும். இதனால்தான் 'ஊதிய ஆணைய' ஆண்டுகள் நிதி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.
8வது ஊதியக் குழுவின் முன் வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்
குறைந்தபட்ச அடிப்படை ஊதியம்: ரூ 69,000
ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: 3.83
ஆண்டு ஊதிய உயர்வு: 6%
வீட்டு வாடகைப்படி (HRA) குறைந்தபட்ச வரம்பு: 30%
ஓய்வூதியம்: கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 67%
குடும்ப ஓய்வூதியம்: 50%
பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருதல்
இவை அனைத்தும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது கிட்டத்தட்ட உறுதி. ஆனால் இவை பேச்சுவார்த்தைகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன.
ஓய்வூதியம் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியம் அதிகரித்தால், அதைத் தொடர்ந்து ஓய்வூதியம் தானாகவே உயரும், குடும்ப ஓய்வூதியமும் அதிகரிக்கும், ஓய்வூதியத்தின் மீதான அகவிலை நிவாரணம் தொடரும்.
8வது ஊதியக்குழு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
1. ஊழியர் சங்கங்களின் கோரிக்கையின் படி ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.83 ஆக நிர்ணயிக்கப்படுமா?
இது பெரும்பாலும் நடக்காது. மத்திய அரசு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 1.84 முதல் 3.0 -க்குள் நிர்ணயிக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2. 8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியதாரர்களுக்கும் நன்மைகள் கிடைக்குமா?
ஆம், 8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியதாரர்களுக்கும் நன்மைகள் கிடைக்கும். அடிப்படை ஊதியம் அதிகரித்தால், அதைத் தொடர்ந்து ஓய்வூதியம் தானாகவே உயரும், குடும்ப ஓய்வூதியமும் அதிகரிக்கும், ஓய்வூதியத்தின் மீதான அகவிலை நிவாரணம் தொடரும்.
3. 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?
சம்பள உயர்வு ஃபிட்மெண்ட் ஃபாக்டரையும் இன்னும் சில காரணிகளையும் சார்ந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!