)
8th Pay Commission Commuted Pension: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பல அலவன்சுகளில் ஏற்றமும், ஊதிய முறைகளில் மாற்றமும் வரலாம் என்பது அனைவருகும் தெரிந்த ஒன்று.
Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி
மத்திய அரசு ஊழியர்களைத் தவிர ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக் குழுவில் ஓய்வூதிய உயர்வு உட்பட பல மாற்றங்களை காணக்கூடும். இவை அவர்களது பணி ஓய்வு காலத்தில் அதிக நிவாரணத்தை அளிக்கும். 8வது ஊதியக் குழுவில் ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்க்கும் அப்படி ஒரு முக்கியமான மாற்றம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Commuted Pension: கம்யூடட் பென்ஷன்
கம்யூடட் பென்ஷன் அதாவது மாற்றப்பட்ட ஓய்வூதியம் பிடித்தம் செய்யப்படும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்ட்டு வருகின்றது. அது இப்போது நடக்கலாம் என கூறப்படுகின்றது.
தேசிய கவுன்சில் (JCM) ஊழியர்கள் தரப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை சமர்ப்பித்தனர். இதன் ஒரு பகுதியாக கம்யூடட் பென்ஷன் தொடர்பான கோரிக்கையும் உள்ளது. இது 8வது சம்பள ஆணையத்தின் குறிப்பு விதிமுறைகளில் (ToR) சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What is Commuted Pension: ஓய்வூதிய மாற்றம் என்றால் என்ன?
ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெறும்போது, அவர் தனது மாதாந்திர ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தமாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார். இது ஓய்வூதிய மாற்றம் அல்லது கம்யுடேஷன் ஆஃப் பென்ஷன் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு ஈடாக, அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவரது மாதாந்திர ஓய்வூதியத்திலிருந்து எடுக்கப்பட்ட தொகைக்கு ஏற்ப ஒரு தொகை கழிக்கப்படுகின்றது. இதன் மூலம் அரசாங்கம் மீண்டும் முன்பணத் தொகையை மீட்டெடுக்கிறது. தற்போது, பிடித்தம் செய்யும் இந்த செயல்முறை 15 ஆண்டுகள் நீடிக்கிறது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை என்ன?
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஊழியர் அமைப்புகள் 15 ஆண்டு காலம் மிக நீண்டதாக உள்ளதாக கருதுகிறார்கள். இது பொருளாதார ரீதியாக சமமற்றது என்ற கருத்து அவர்களிடம் உள்ளது. குறிப்பாக தற்போதைய காலங்களில், வட்டி விகிதங்கள் குறைந்து வருகின்றன. வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் நீண்ட காலத்திற்கு தங்கள் முழுமையான ஓய்வூதியத்தை பெற முடியாத நிலை உள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.
ஓய்வூதிய மீட்பு காலத்தை 12 ஆண்டுகளாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன?
ஓய்வூதிய மீட்பு காலத்தை 15 ஆண்டுகளுக்குப் பதிலாக 12 ஆண்டுகளாக மாற்றினால், ஓய்வு பெற்ற ஊழியர்கள் 3 ஆண்டுகள் முன்னதாகவே தங்கள் முழு ஓய்வூதியத்தையும் பெறத் தொடங்குவார்கள் என்று அரசு ஊழியர் சங்கங்கள் வாதிடுகின்றன. இது அவர்களது வயது மூப்பில் மருத்துவம், சமூகப் பொறுப்புகள் மற்றும் குடும்பச் செலவுகளை சிறப்பாகக் கையாள உதவும்.
இது தவிர, 12 ஆண்டு காலம் என்பது அரசாங்கத்தின் வருவாயில் அதிக சுமையை ஏற்படுத்தாது. ஏனெனில் முன்னர் கழிக்கப்பட்ட தொகை மற்றும் வட்டியின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
Terms of Reference: 8வது ஊதியக் குழுவில் கம்யூடட் பென்ஷனில் மாற்றம் ஏற்படுமா?
கம்யூடட் பென்ஷ தொடர்பான கோரிக்கை இப்போது 8வது ஊதியக் குழுவின் ToR எனப்படும் குறிப்பு விதிமுறைகளில் சேர்க்கப்பட பரிசீலனை உள்ளது. இது ToR இல் இடம் பெற்றால், எதிர்காலத்தில் இந்த மாற்றம் செயல்படுத்தப்படலாம் என்பது உறுதி என்று கருதப்படுகிறது.
8வது ஊதியக் குழுவின் தற்போதைய நிலை
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 31, 2025 வரை அமலில் இருக்கும். 10 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு புதிய ஊதியக் குழு அமலுக்கு வருகிறது. ஆகையால், 8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என கருதப்படுகிறது. இருப்பினும், ஆணையம் அல்லது அதன் உறுப்பினர்களின் நியமனம் குறித்து அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் அதன் செயல்பாட்டில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ