8வது ஊதியக்குழு, குஷியில் ஊழியர்கள்: ஊதியம், ஓய்வூதியத்தில் 186% அதிகரிப்பு, காரணம் Fitment Factor எனும் மந்திரக்கோல்

8th Pay Commission: சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கணக்கீடுகளில் முக்கிய அங்கமான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக திருத்தப்படலாம் என்றும், குறைந்தபட்ச ஓய்வூதியம் 186 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 2, 2025, 06:15 PM IST
  • 8வது ஊதியக்கு எப்போது அமலுக்கு வரும்?
  • ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்.
  • மிகப்பெரிய ஊதிய உயர்வு.
8வது ஊதியக்குழு, குஷியில் ஊழியர்கள்: ஊதியம், ஓய்வூதியத்தில் 186% அதிகரிப்பு, காரணம் Fitment Factor எனும் மந்திரக்கோல்

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சில முக்கிய அப்டேட்கள் உள்ளன. தற்போது செயலில் உள்ள 7வது ஊதியக்குழு 2025 டிசம்பரில் காலாவதியாகவுள்ளது. இந்த நிலையில், 8வது ஊதியக் குழுவை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களால் இது பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

Add Zee News as a Preferred Source

Central Government Employees: காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்

8வது ஊதியகுழு உறுப்பினர்கள் மற்றும் தலைவருக்கான நியமனம் இந்த மாதத்திற்குள் நடந்துமுடியும் என நம்பப்படுகின்றது. மேலும் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கணக்கீடுகளில் முக்கிய அங்கமான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக திருத்தப்படலாம் என்றும், குறைந்தபட்ச ஓய்வூதியம் 186 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்து இன்னும் அரசு அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

42 New Posts Created: புதிய பதவிகளின் உருவாக்கம்

ஏப்ரல் 21 அன்று மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில், 42 புதிய பதவிகள் உருவாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவை வரவிருக்கும் ஊதியக் குழுவிற்கானவை என்ற ஊகங்கள் உள்ளன. குறிப்பாக, ஏழாவது ஊதியக் குழு அமைக்கப்படுவதற்கு முன்பு 45 நியமனங்கள் செய்யப்பட்டன. இது ஒரு பழக்கமான நிர்வாக முறையை சுட்டிக்காட்டுகிறது. எட்டாவது ஊதியக் குழுவின் தலைவரின் பெயர் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ வர்த்தமானி அறிவிப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

8வது ஊதியக்கு எப்போது அறிவிக்கப்பட்டது?

மோடி அரசாங்கம் புதிய சம்பள ஆணையத்தை அமைக்கும் நோக்கத்தை ஜனவரி 2025 இல் அறிவித்தது. அதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படும் வகையில் அதை சரியான நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தற்போது பணிகள் துரிதமான நடந்து வருகின்றன.

Fitment Factor: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றிய ஊகங்கள்

7வது ஊதியக் குழு 2.57 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டரை நிர்ணயித்தது. 8வது ஊதியக்குழு இதை விட அதிக ஃபிட்மெண்ட் ஃபாக்டரை நிர்ணயிக்க வேண்டும்  ஊழியர் சங்கங்கள் கோரி வருகின்றன. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக உயர்த்தப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்கள் மடுமல்லாமல், ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போது ரூ.9,000 ஆக உள்ளது. இது தோராயமாக ரூ.25,740 ஆக உயரக்கூடும். பணவீக்கத்தின் தாக்க்கத்தால் போராடி வரும் ஓய்வூதியதாரர்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க நிதி ஊக்கமாக இருக்கும்.

Salary Hike: மிகப்பெரிய ஊதிய உயர்வு

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஓய்வூதிய உயர்வை போலவே, பல்வேறு ஊதிய நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தையும் கணிசமாக அதிகரிக்கும். சம்பள உயர்வு அதிகமாக இருக்கும் என்றும், முன்மொழியப்பட்ட ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உயர் மட்ட ஓய்வூதியதாரர்கள் சலுகைகளில் இன்னும் பெரிய அதிகரிப்பைக் காணலாம் என்றும் கூறப்படுகின்றது.

புதிய கமிஷன் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, ஊதிய அமைப்பு, கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களை மதிப்பாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ஓய்வு காலத்தில் கைநிறைய பணம் வேண்டுமா... இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்

மேலும் படிக்க | E-Shram Card: தொழிலாளர்களுக்கான அரசாங்க ஓய்வூதிய திட்டம், மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்..இப்படி விண்ணப்பிக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News