8th Pay Commission: இந்த ஆண்டு ஜனவரியில் நரேந்திர மோடி அரசு, 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டது. 7வது ஊதியக்குழுவின் காலம் டிசம்பர் 2025 -இல் முடிவுக்கு வருகிறது. அடுத்த கட்டமாக, 8வது ஊதியக் குழுவின் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். அதற்கு பிறகு குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதியம் மற்றும் ஓய்வூதிய கட்டமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்படும். இதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும்
8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பு வந்ததிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வின் அளவை நிர்ணயிக்கும் சாத்தியமான ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் தவிர, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் தீர்மானிக்கப்படும் முன்னர் அடிப்படை ஊதியம் அகவிலைப்படியுடன் (DA) இணைக்கப்படுமா என்பதை அறியவும் அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
ஊதியக் குழு திருத்தங்களுக்கு பிறகு மத்திய அரசின் சம்பளம் எவ்வாறு மறுசீரமைக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மற்றும் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைப்பு ஆகியவற்றை புரிந்துகொள்வதும் முக்கியமாகும்.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்றால் என்ன?
புதிய ஊதியக் குழுக்கள் அமைக்கப்படும்போதெல்லாம், புதிய அடிப்படை ஊதியத்தை நிரணயிக்க, பழைய அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரருடன் பெருக்கப்படுகிறது. அந்த வகையில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஒரு முக்கியமான பெருக்கல் காரணியாக பார்க்கப்படுகின்றது. பணவீக்கம் மற்றும் முந்தைய கொடுப்பனவுகள், குறிப்பாக அகவிலைப்படி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து ஊதிய அளவீடுகளிலும் சீரான உயர்வை இது உறுதி செய்கிறது.
Dearness Allowance: ஊதிய திருத்தத்தில் அகவிலைப்படியின் பங்கு
கடந்த கால ஊதியக் குழுக்கள், குறிப்பாக 5வது, 6வது மற்றும் 7வது ஊதியக் குழுக்களிலும், ஃபிட்மென்ட் ஃபாக்டரை நிர்ணயிப்பதற்கு முன்னர், அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.
ஜனவரி 2016 இல் 7வது ஊதியக் குழு (7th Pay Commission) செயல்படுத்தப்பட்டபோது, மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 125% அகவிலைப்படியைப் பெற்று வந்தனர். அப்போது ஆணையம் 2.57 என்ற அகவிலைப்படியை பரிந்துரைத்தது.
Fitment Factor: ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் கணக்கீடு
7வது மத்திய ஊதியக் குழுவில் பயன்படுத்தப்பட்ட 2.57x என்ற அகவிலைப்படியின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் தன்னிச்சையாக முடிவு செய்யப்படவில்லை. இது அடிப்படை ஊதியத்தில் 100%, 125% அகவிலைப்படி மற்றும் அடிப்படை மற்றும் அகவிலைப்படியின் இணைக்கப்பட்ட தொகையை விட சுமார் 14.22% உண்மையான அதிகரிப்பை உள்ளடக்கிய ஒரு கட்டமைக்கப்பட்ட கணக்கீட்டிலிருந்து பெறப்பட்டது.
Salary Hike: சம்பள உயர்வுக்கான முக்கிய அம்சம்
எனவே, திருத்தப்பட்ட சம்பளம் 2016 வரை அடிப்படை ஊதியம் மற்றும் திரட்டப்பட்ட அகவிலைப்படியின் ஒருங்கிணைந்த எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
Dearness Allowance Calculation: அகவிலைபப்டி கணக்கீடு
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்:
ஒரு அரசு ஊழியருக்கு ரூ.10,000 அடிப்படை ஊதியம் இருந்தால், 125% அகவிலைப்படி = ரூ.12,500 (ரூ.10,000 x 1.25)
துணைத்தொகை = ரூ.22,500
14.22% உயர்வு = ரூ.3,199.5
புதிய ஊதியம் = ரூ.25,699.5 ~ ரூ.25,700 ஆக ரவுண்டு செய்யப்படும்.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் = ரூ.25,700 / ரூ.10,000 = 2.57
அதாவது, திருத்தப்பட்ட சம்பளம் பழைய அடிப்படை ஊதியத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அடிப்படை + அகவிலைப்படி இணைக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு சிறிய உயர்வு சேர்க்கப்பட்டது.
5th Pay Commission: 5வது ஊதியக் குழு (1996)
அகவிலைப்படி சுமார் 74% ஆக இருந்தது.
அரசாங்கம் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து 1.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பயன்படுத்தியது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படையில் 74% அகவிலைப்படி இணைப்பு மற்றும் 28-30% உண்மையான உயர்வைக் குறிக்கிறது.
6th Pay Commission: 6வது ஊதியக் குழு (2006)
அகவிலைப்படி சுமார் 115% ஐ எட்டியது.
அகவிலைப்படி இணைக்கப்படவில்லை என்றாலும், 1.86x ஃபிட்மென்ட் ஃபாக்டரின் நன்மை, ஊதியக் குழுக்கள் மற்றும் தர ஊதியம் மூலம் திருத்தப்பட்ட ஊதிய அமைப்பில் மறைமுகமாக உள்வாங்கப்பட்டதைக் குறிக்கிறது.
1.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர், அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி + மிதமான உயர்வைப் பிரதிபலித்தது.
முந்தைய ஊதியக் கமிஷன்களின் கீழ் அகவிலைப்படி மற்றும் ஃபிட்மென்ட் ஃபாக்டர்
5வது ஊதியக்குழு: அகவிலைப்படி - 74%, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் - 1.86
6வது ஊதியக்குழு: அகவிலைப்படி - 115%, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் - 1.86 (கூடுதலாக கிரேட் பே)
7வது ஊதியக்குழு: அகவிலைப்படி - 125%, ஃபிட்மெண்ட் ஃபாக்டர் - 2.57
Central Government Employees: 8வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வாறு திருத்தப்படலாம்?
முந்தைய ஊதியக்குழுக்களின் கீழ் காணப்பட்டதைப் போலவே 8வது ஊதியக் குழுவிலும் இதேபோன்ற அணுகுமுறை பின்பற்றப்படும் என்று நம்பப்படுகின்றது. ஃபிட்மெண்ட் ஃபாக்டரை நிர்ணயிக்க இதேபொன்ற ஒரு அணுகுமுறை பயன்படுத்தப்படலாம். இதனால் ஜனவரி 2026 -இல் இருக்கக்கூடிய அகவிலைப்படி அளவுக்கு அதிக முக்கியத்துபம் உள்ளது.
மேலும் படிக்க | வெறும் 3 நாட்களில் PF பணத்தை எடுப்பது எப்படி? EPFO புதிய விதிகள் அமல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









