)
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. தற்போது லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது சம்பளக் குழுவின் அமலாக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அரசாங்கமும் அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது, குழுவை அமைப்பது பரிசீலனையில் உள்ளது. 8வது ஊதியக்குழு, குழு உறுப்பினர்கள், ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு என இது தொடர்பான பல வித ஊகங்களும் பரவி வருகின்றன.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு உள்ள முக்கிய கேள்வி
தங்களது மாத ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு உள்ள மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஊதிய உயர்வுக்கான முக்கியமான காரணியாக இருப்பதால், இது எவ்வளவு இருக்கும் என்பது குறித்தும் ஊழியர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் உள்ளது. இந்த விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Fitment Factor: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்னும் மத்திரக்கோல்
ஊதிய கணக்கீடு மற்றும் ஊதிய உயர்வில் ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு முக்கிய பங்குள்ளது. இந்த முறை, ஃபிட்மெண்ட் ஃபாக்டரை தீர்மானிக்கும் போது, தற்போதுள்ள அகவிலைப்படியும் (DA) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படலாம் என்றும் விவாதங்களும் உள்ளன.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்றால் என்ன? சம்பள உயர்வின் உண்மையான கணிதம் என்ன? இவற்றை இங்கே புரிந்துகொள்ளலாம். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஒரு பெருக்கி. புதிய ஊதியக் குழு செயல்படுத்தப்படும்போது, புதிய அடிப்படை சம்பளம், தற்போதுள்ள அடிப்படை சம்பளத்தை இந்த ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கி தீர்மானிக்கப்படுகிறது. அனைத்து ஊழியர்களும் சமமான அடிப்படையில் சம்பள உயர்வைப் பெறுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம். மேலும் இது முந்தைய காலத்தின் பணவீக்கத்தையும் (DA வடிவத்தில் பெறப்பட்டது) உண்மையான உயர்வையும் உள்ளடக்கிய காரணியாக உள்ளது.
7th Pay Commission: 7வது ஊதியக்குழு
உதாரணமாக, 7வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. இதன் பொருள், 6வது ஊதியக் குழுவின் கீழ் அடிப்படை ஊதியத்தை (ஊதியப் பட்டியல் + தர ஊதியத்தில் ஊதியம்) 2.57 ஆல் பெருக்கி 7வது ஊதியக் குழுவின் புதிய அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்பட்டது.
DA Merger: அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா?
வழக்கமாக, ஒரு புதிய ஊதியக் குழு செயல்படுத்தப்படும் போதெல்லாம், அந்த நேரம் வரை பெறப்பட்ட மொத்த அகவிலைப்படி (Dearness Allowance) ஏற்கனவே உள்ள அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்படும். இதன் பிறகு, புதிய ஊதியக் கட்டமைப்பின் முதல் அடிப்படை சம்பளம் இந்த 'திருத்தப்பட்ட அடிப்படை சம்பளத்தின்' அடிப்படையில் அல்லது பழைய அடிப்படை ஊதியத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை பெருக்கி தீர்மானிக்கப்படுகிறது. அகவிலைப்படி மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குகிறது.
7வது ஊதியக் குழுவில் என்ன நடந்தது? 7வது ஊதியக் குழு ஜனவரி 1, 2016 அன்று அமல்படுத்தப்பட்ட நேரத்தில், அகவிலைப்படி 125% ஆகிவிட்டிருந்தது. இந்த 125% DA பழைய அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்பட்டது. அதன் பின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் (2.57) புதிய அடிப்படை ஊதியத்தை தீர்மானிக்கப் பயன்படுத்தப்பட்டது.
8வது ஊதியக் குழுவில் என்ன எதிர்பார்க்கலாம்?
DA இணைப்பு: ஜனவரி 1, 2026 வரை இருக்கும் அகவிலைப்படி, (அநேகமாக 60% க்கு மேல்) அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ஃபிட்மென்ட் ஃபாக்டர்: ஊழியர் சங்கங்கள் 7வது சம்பள ஆணையத்தின் 2.57 ஐ விட மிக அதிக ஃபிட்மென்ட் ஃபாக்டரை (எ.கா. 3.68) கோருகின்றன. அரசாங்கம் என்ன முடிவெடுக்கும் என்பது ஆணையத்தின் பரிந்துரைகளைப் பொறுத்தது. ஆனால் அது 2.57 ஐ விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (2.8 முதல் 3.0 -க்குள் இருக்கலாம்).
Salary Hike Calculation: உங்கள் புதிய சம்பளத்தை எவ்வாறு கணக்கிடுவது?
ஊதிய உயர்வு கணக்கீடு
இது குறித்து சமூக ஊடகங்களில் பல சூத்திரங்கள் பரவி வருகின்றன. “அடிப்படை + DA = ஃபிட்மென்ட் காரணி” என்ற ஒரு சூத்திரம் பரவலாக உள்ளது. ஆனால் இது தவறு. புதிய அடிப்படை ஊதியம் இப்படி கணக்கிடப்படுவதில்லை.
புதிய அடிப்படை ஊதியத்தை கணக்கிடுவதற்கான சரியான வழி இதுதான்:
புதிய அடிப்படை ஊதியம் = ஏற்கனவே உள்ள அடிப்படை ஊதியம் (7வது ஊதியக்குழு) x 8வது ஊதியக்குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர்
இந்த ஃபிட்மென்ட் ஃபாக்டரில் அகவிலைப்படி மற்றும் பழைய அடிப்படை ஊதுயத்தின் இணைப்பும் உண்மையான அதிகரிப்பும் அடங்கும்.
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்
- உங்கள் தற்போதைய அடிப்படை ஊதியம் (லெவல் 1) = ரூ. 18,000 என்று வைத்துக்கொள்வோம்.
- 8வது ஊதியக் குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.0 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம் (இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே, உண்மையான ஃபிட்மெண்ட் ஃபாக்டர் வேறுபடலாம்).
- இந்த நிலையில், புதிய அடிப்படை ஊதியம் = ரூ. 18,000 x 3.0 = ரூ. 54,000 (இது உதாரணத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது, உண்மையான எண்ணிக்கை மாறுபடலாம்).
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ