)
8th Pay Commission HRA Calculation: மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்கு பிறகு பல வித அலவன்சுகளில் ஏற்றம் ஏற்படும். இதனால் அவர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும். அடிப்படை ஊதியத்தில் ஏற்படும் உயர்வு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பொறுத்தது. இதைத் தவிர இன்னும் பல கொடுப்பனவுகளும் அதிகரிக்கும்.
House rent allowance: வீட்டு வாடகை கொடுப்பனவு
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளங்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) ஒரு முக்கிய அங்கமாகும். இது ஒரு தனிநபரின் அடிப்படை ஊதியம் மற்றும் ஊழியர் வசிக்கும் நகரத்தின் மதிப்பீட்டைப் பொறுத்தது. HRA ஒரு ஊழியரின் சம்பளத்தில் கணிசமான பங்கை வகிக்கிறது.
8வது ஊதியக்குழுவில் எதிர்பார்க்கப்படும் ஏற்றம்
ஊழியர்கள் பழைய வரி முறையில், வீட்டு வாடகை கொடுப்பனவில் வரி சலுகைகளையும் கோரலாம். 8வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சம்பள திருத்தத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதனுடன் HRA-விலும் குறிப்பிடத்தக்க திருத்தம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
7th Pay Commission: 7வது ஊதியக்குழுவில் உள்ள விகிதங்கள் என்ன?
7வது ஊதியக் குழுவில் HRA விகிதங்கள் அடிப்படை ஊதியத்தில் 8 சதவீதம் (Z வகுப்பு நகரங்களுக்கு), அடிப்படை ஊதியத்தில் 16 சதவீதம் (Y வகுப்பு நகரங்களுக்கு) மற்றும் அடிப்படை ஊதியத்தில் 24 சதவீதம் (X வகுப்பு நகரங்களுக்கு) ஆக உள்ளன.
அகவிலைப்படி அதிகரித்தபோது அதிகரித்த HRA
அகவிலைப்படி 50 சதவீத வரம்பைத் தொட்டபோது, HRA விகிதங்கள் முறையே 10 சதவீதம் (Z வகுப்பு), 20 சதவீதம் (Y வகுப்பு) மற்றும் 30 சதவீதம் (X வகுப்பு) என திருத்தப்பட்டன.
வரம்புகள் இல்லாமல், இந்த விகிதங்கள் ரூ.1,800 (Z வகுப்பு), ரூ.3,600 (Y வகுப்பு) மற்றும் ரூ.5,400 (X வகுப்பு) க்கும் குறைவாக இருக்கலாம்.
Fitment Factor: பல்வேறு ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் HRA கணக்கீடுகளை இங்கே காணலாம்:
1.92, 2.08 மற்றும் 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர்களின் அடிப்படையில், நிலை 1-7 ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழுவில் கிடைக்கக்கூடிய HRA தொகைகளின் மதிப்பீடுகளை இங்கே காணலாம். (குறிப்பு: இதில் HRA ஐ முறையே 8 சதவீதம், 16 சதவீதம் மற்றும் 24 சதவீத விகிதங்களில் கணக்கிட்டுள்ளோம்).
நிலை 1 (அடிப்படை ஊதியம் ரூ. 18,000)
நிலை 2 (அடிப்படை ஊதியம் ரூ. 19,900)

நிலை 3 (அடிப்படை ஊதியம் ரூ. 21,700)
நிலை 4 (அடிப்படை ஊதியம் ரூ. 25,500)

நிலை 5 (அடிப்படை ஊதியம் ரூ. 29,200)
நிலை 6 (அடிப்படை ஊதியம் ரூ. 35,400)

நிலை 7 (அடிப்படை ஊதியம் ரூ. 44,900)

(துறப்பு: இவை கணிப்புகள்தான். உண்மையான திருத்தப்பட்ட தொகைகள் மாறுபடலாம்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ