)
8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக ஆவலுடன் காத்திருகிறார்கள். சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் ஏற்படவுள்ள அதிகரிப்பின் மீது அனைவரது கவனமும் உள்ளது. மேலும், இந்த முறை 8வது சம்பள கமிஷனில் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படுமா என்ற கேள்வியும் உள்ளது.
7வது உதியக்குழுவின் பரிந்துரைகள் 2025 டிசம்பருடன் நிறைவடைகின்றன. 8வது ஊதியக்குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வர வேண்டும். ஆனால், அதற்கான பணிகள் மிக மந்தமாகவே நடந்துவருகின்றன. இதன் காரணமாக, 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2027 க்குப் பிறகுதான் செயல்படுத்தப்படும் என்ற ஊகம் உள்ளது.
8வது சம்பள கமிஷனுக்கான குழு இன்னும் அமைக்கப்படவில்லை. இந்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படியில் அடுத்த அதிகரிப்பு உட்பட சில இடைக்கால நிவாரணங்களைப் பெறலாம் என்ற ஊகம் உள்ளது. அகவிலைப்படி (Dearness Allowance) அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படலாம் என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஜூலை முதல் டிசம்பர் 2025 வரையிலான AICPI-IW தரவின் அடிப்படையில் ஜனவரி 2026 -இன் அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படும். சமீபத்தில் ஆகஸ்ட் மாதத்தில் குறியீடு 147.1 ஐ எட்டியது. மீதமுள்ள நான்கு மாதங்களான செப்டம்பர் முதல் டிசம்பர் 2025 வரையிலான தரவுகள் ஜனவரி 2026க்கான டிஏ அதிகரிப்பை தீர்மானிக்கும். டிசம்பர் 2025க்குள் குறியீடு 149.5 ஐ எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படி தோராயமாக 60% -ஐ எட்டும் என நம்பப்படுகின்றது.
அதன் பிறகு 8வது ஊதியக்குழு முழுமையாக செயல்படுத்தப்படும் வரை, இதே ரீதியில் அகவிலைப்படி உயர்வு நடக்கும். 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்தின் போது, அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டு, அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்படும். அதன் பிறகு அகவிலைப்படி கணக்கீடு 1%, 2%, 3% என மீண்டும் தொடங்கும். எனினும், 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும்போது இருக்கும் அகவிலைப்படி அப்படியே அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா, அல்லது, 50% அகவிலைப்படி மட்டும் அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டு அதன் பிறகு ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் அது பெருக்கப்பட்டு, புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ